சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி
சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி (மலாய்: Parti Demokratik Progresif Sarawak, ஆங்கில மொழி: Sarawak Progressive Democratic Party, சீனம்: 砂拉越民进党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.
சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி Sarawak Progressive Democratic Party Demokratik Progresif Sarawak ڤرتي ديموكراتيق ڤروڬريسيف 砂拉越民进党 | |
---|---|
சுருக்கக்குறி | PDP |
தலைவர் | தியோங் கிங் சிங் (Tiong King Sing) |
நிறுவனர் | பீட்டர் நியாரோக் என்றி (Peter Nyarok Entrie) |
தொடக்கம் | 2002 |
பிரிவு | சரவாக் தேசிய கட்சி (SNP) |
முன்னர் | சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி சரவாக் ஐக்கிய கட்சி (PSB) |
தலைமையகம் | Lot 158, 159 & 160, Seksyen 20, KTLD 9F/9G/9H, Jalan Badruddin, 93400 கூச்சிங், சரவாக் |
உறுப்பினர் | 110,950 (மார்ச் 2024) |
கொள்கை | மைய அதிகார ஒருமிப்புக் கொள்கை, தேசியவாதம் |
தேசியக் கூட்டணி | • பாரிசான் நேசனல் (2002–2018) • சரவாக் கட்சிகள் கூட்டணி (2018) • தேசிய ஒற்றுமை அரசாங்கம் (2022) |
நிறங்கள் | வெளிர் நீலம் மஞ்சள் கருநீலம் |
மலேசிய மேலவை: | 1 / 70 |
மலேசிய மக்களவை: | 2 / 31 |
சரவாக் மாநில சட்டமன்றம்: | 8 / 82 |
இணையதளம் | |
Sarawak Progressive Democratic Party on Facebook |
சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சியை எஸ்.பி.டி.பி என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். சரவாக் தேசிய கட்சி பதிவுத் தடை செய்யப்பட்ட சில நாட்களில், இந்தச் சரவாக் முற்போக்கு மக்களாட்சி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சி சரவாக் மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டிற்கு ஆதரவான கட்சியாகும். வில்லியம் மாவான் இக்கோம் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், இந்தக் கட்சி எட்டு இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.[1]
மேலும் தகவல்கள்
தொகு- Khoo, Phillip (June, 2004) The Taming of the Dayak பரணிடப்பட்டது 2005-09-29 at the வந்தவழி இயந்திரம். Aliran Monthly பரணிடப்பட்டது 2005-11-04 at the வந்தவழி இயந்திரம்
- Chin, James. 2004. 'Sabah and Sarawak: The more things change, the more they remain the same', in Chin Kin Wah (ed) Southeast Asian Affairs 2004 (Singapore: Institute of South East Asian Studies, 2004) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-238-7)