அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை
அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Anwar Pertama; ஆங்கிலம்: Anwar Ibrahim First Cabinet; சீனம்: 安瓦尔·易卜拉欣第一内阁); என்பது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை ஆகும்.
அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை Anwar Ibrahim First Cabinet | |
---|---|
23-ஆவது அமைச்சரவை - மலேசியா | |
2022– | |
உருவான நாள் | 3 திசம்பர் 2022 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | அன்வார் இப்ராகிம் |
துணை அரசுத் தலைவர் | அகமத் சாகித் அமிடி பாட்சிலா யூசோப் |
நாட்டுத் தலைவர் | சுல்தான் அப்துல்லா |
தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை | 28 அமைச்சர்கள் 27 துணை அமைச்சர்கள் |
உறுப்புமை கட்சி | மலேசிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி மலேசிய தேசிய கட்சி சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி |
சட்ட மன்றத்தில் நிலை | பாக்காத்தான் ஒற்றுமை அரசாங்கம் 148 / 222 |
எதிர் கட்சி | |
எதிர்க்கட்சித் தலைவர் | முகிதீன் யாசின் |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது மலேசிய மக்களவை, 2022–2026 (2022-) |
முந்தைய | இசுமாயில் சப்ரி அமைச்சரவை |
மலேசியாவின் 10-ஆவது பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த 23-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (Unity Government) அமைக்குமாறு மலேசியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள்; அன்வார் இப்ராகிமைக் கேட்டுக் கொண்டார்.[1]
2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அமைச்சர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.[2]
பொது
தொகுஅன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த அழைப்பை பெரிக்காத்தான் நேசனல் நிராகரித்து; எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்தது.
எனவே, இந்த அமைச்சரவை பாக்காத்தான் ஹரப்பான் (PH) தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கம் நிறுவப்பட்டு இருப்பதை பிரதிபலிக்கின்றது. இந்த அமைச்சரவைக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை (மலாய்: Kabinet Perpaduan Nasional; ஆங்கிலம்: National Unity Cabinet; என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமைவு
தொகு2022 டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி, ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சர்கள்:[3]
பாக்காத்தான் (15) | பாரிசான் (6) | ஜிபிஎஸ் (5) | ஜிஆர்எஸ் (1) | சுயேட்சை (1) |
|
|
|
அமைச்சர்கள்
தொகுநிலை | படிமம் | பெயர் | கட்சி | தொகுதி | |
---|---|---|---|---|---|
பிரதமர்
நிதி அமைச்சர் |
அன்வார் இப்ராகிம் Dato' Seri Anwar Ibrahim |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
தம்புன் | ||
துணைப் பிரதமர்
கிராமப்புற |
அகமது சாயித் அமீட் Dato' Seri Dr. Ahmad Zahid Hamidi |
பாரிசான் அம்னோ |
பாகன் டத்தோ | ||
துணைப் பிரதமர்
முதன்மைத் |
பாடிலா யூசோப் Dato' Sri Haji Fadillah Yusof |
சரவாக் கட்சிகள் கூட்டணி ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி |
பெட்ரா ஜெயா | ||
உள்துறை அமைச்சர் | சைபுதீன் நசுத்தியோன் Datuk Seri Saifuddin Nasution Ismail |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
செனட்டர் | ||
தற்காப்புத் துறை அமைச்சர் | முகமட் அசான் Dato' Seri Utama Haji Mohamad Hasan |
பாரிசான் அம்னோ |
ரெம்பாவ் | ||
கல்வி அமைச்சர் | பாட்லினா சீடேக் Fadhlina Sidek |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
நிபோங் திபால் | ||
பொருளாதாரத் துறை அமைச்சர் | ராபிஸி ராம்லி Mohd. Rafizi Ramli |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
பாண்டான் | ||
பணிகள் துறை அமைச்சர் | அலெக்சாண்டர் நந்தா லிங்கி Dato Sri Alexander Nanta Linggi |
சரவாக் கட்சிகள் கூட்டணி ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி |
காபிட் | ||
போக்குவரத்துத் துறை அமைச்சர் | அந்தோனி லோக் சியூ பூக் Anthony Loke Siew Fook |
பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சி |
சிரம்பான் | ||
வெளியுறவுத் துறை அமைச்சர் | சாம்ரி அப்துல் காதிர் Dato' Seri Diraja Dr. Zambry Abdul Kadir |
பாரிசான் அம்னோ |
செனட்டர் | ||
இலக்கியவியல் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் |
பாமி பாட்சில் Ahmad Fahmi Mohamed Fadzil |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
லெம்பா பந்தாய் | ||
பெண்கள், குடும்பம்; சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
நான்சி சுக்ரி Dato' Sri Hajah Nancy Shukri |
சரவாக் கட்சிகள் கூட்டணி ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி |
சாந்துபோங் | ||
வேளாண்மை; உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் |
முகமட் சாபு Haji Mohamad Sabu |
பாக்காத்தான் ஹரப்பான் அமாணா |
கோத்தா ராஜா | ||
வீட்டுவசதி உள்ளூராட்சித் துறை அமைச்சர் | நிகா கோர் மிங் Nga Kor Ming |
பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சி |
தெலுக் இந்தான் | ||
சுகாதார அமைச்சர் | சாலேகா முஸ்தாபா Dr. Zaliha Mustafa |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
செகிஜாங் | ||
மனிதவளத் துறை அமைச்சர் | வி. சிவகுமார் Sivakumar Varatharaju Naidu |
பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சி |
பத்து காஜா | ||
சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் |
தியோங் கிங் சிங் Dato Sri Tiong King Sing |
சரவாக் கட்சிகள் கூட்டணி சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி |
பிந்துலு | ||
அறிவியல், தொழில்நுட்பம்; புத்தாக்கத் துறை அமைச்சர் |
சாங் லி காங் Chang Lih Kang |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
தஞ்சோங் மாலிம் | ||
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் | ஹன்னா இயோ Hannah Yeoh Tseow Suan |
பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சி |
சிகாம்புட் | ||
அனைத்துலக வர்த்தகம்; தொழில்துறை அமைச்சர் |
துங்கு சப்ருல் துங்கு அப்துல் அசீஸ் Datuk Seri Utama Tengku Zafrul Tengku Abdul Aziz |
பாரிசான் அம்னோ |
செனட்டர் | ||
உள்நாட்டு வர்த்தகம்; வாழ்க்கைச் செலவுகள் துறை அமைச்சர் | சலாவுதீன் அயூப் Datuk Seri Salahuddin Ayub |
பாக்காத்தான் ஹரப்பான் அமாணா |
பூலாய் | ||
உயர்க் கல்வி அமைச்சர் | முகமது காலித் நோர்டின் Dato' Seri Haji Mohamed Khaled Nordin |
பாரிசான் அம்னோ |
கோத்தா திங்கி | ||
தொழில்முனைவோர் மேம்பாடு; கூட்டுறவுத்துறை அமைச்சர் | இவோன் பெனடிக் Datuk Ewon Benedick |
பாக்காத்தான் ஹரப்பான் கடாசான் மூருட் |
பெனாம்பாங் | ||
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல்; பருவநிலை மாற்றம் அமைச்சர் | நிக் நஸ்மி நிக் அகமது Nik Nazmi Nik Ahmad |
பாக்காத்தான் ஹரப்பான் பிகேஆர் |
செத்தியா வங்சா | ||
பிரதமர் துறை அமைச்சர் | அஸலினா ஒஸ்மான் சாயிட் Dato' Sri Azalina Othman Said |
பாரிசான் அம்னோ |
பெங்கேராங் | ||
தேசிய ஒருமைப்பாடுத் துறை அமைச்சர் | ஆரோன் அகோடாங் Datuk Aaron Ago Dagang |
சரவாக் கட்சிகள் கூட்டணி அம்னோ |
கனோவிட் | ||
சமயத் துறை அமைச்சர் | முகமது நைம் மொக்தார் Dato' Setia Dr. Haji Mohd. Naim Mokhtar |
செனட்டர் | சுயேட்சை | ||
பிரதமர் துறை அமைச்சர் (சபா சரவாக் விவகாரங்கள்) |
அர்மிசான் அலி Datuk Armizan Mohd. Ali |
சபா மக்கள் கூட்டணி | பாப்பார் |
துணை அமைச்சர்கள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Anwar's Malaysia Cabinet Announcement Delayed Until Later Friday". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
- ↑ "Anwar Ibrahim appointed as Malaysia's 10th Prime Minister". Bernama. 24 November 2022 இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221124063226/https://pru15.bernama.com/news-en.php?id=2141779.
- ↑ Prime Minister's Department of Malaysia (4 December 2022). "Members of the Cabinet". Cabinet, Constitution and Inter-Government Relation Division, Prime Minister's Department (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.