நான்சி சுக்ரி

நான்சி சுக்ரி (மலாய்: Nancy Shukri; ஜாவி: ننسي بنت شكري ஆங்கிலம்: Nancy Shukri) (பிறப்பு: 5 ஆகத்து 1961) என்பவர் சரவாக் கட்சிகள் கூட்டணி (Gabungan Parti Sarawak) (GPS) எனும் சரவாக் அரசியல் கூட்டணியில் உள்ள ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியை (Parti Pesaka Bumiputera Bersatu) (PBB) சார்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.

நான்சி சுக்ரி
Nancy Shukri
2022-ஆம் ஆண்டில் சுக்ரி
மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2022
ஆட்சியாளர்அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
Deputyராஜ் முனி சாபு
முன்னையவர்ரீனா அருண்
தொகுதிசாந்துபோங், சரவாக், மலேசியா
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர்
பதவியில்
30 ஆகத்து 2021 – 24 நவம்பர் 2022
தொகுதிபத்தாங் சாடோங்
பதவியில்
10 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021
தொகுதிபத்தாங் சாடோங்
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
பதவியில்
27 சூன் 2016 – 9 மே 2018
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர்
பதவியில்
12 மே 2016 – 27 ஜூன் 2016
பெரும்பான்மை38,681 (2022)
சாந்துபோங் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
19 நவம்பர் 2022
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2018 – 19 நவம்பர் 2022
பெரும்பான்மை12,328 (2018)
11,260 (2013)
5,425 (2008)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நான்சி பிந்தி சுக்ரி
Nancy binti Shukri

5 ஆகத்து 1961 (1961-08-05) (அகவை 63)
கூச்சிங், பிரித்தானிய சரவாக் முடியாட்சி (இப்போது சரவாக், மலேசியா)
அரசியல் கட்சிஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல் (2018 வரையில்)
சரவாக் கட்சிகள் கூட்டணி (2018 தொடக்கம்)
துணைவர்கமில் மிசுவாரி
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஅல் பல்கலைக்கழகம்
(University of Hull) இங்கிலாந்து
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்nancy-shukri.my
முகநூலில் நான்சி சுக்ரி

இவர் டிசம்பர் 2022 மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) (PH) நிர்வாகத்தில் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக (Minister of Women, Family and Community Development) பணியாற்றினார்.

நவம்பர் 2022 முதல் சரவாக் சாந்துபோங் மக்களவைத் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராக உள்ளார். மலேசியப் பொதுத் தேர்தல், 2022-இல், 52,762 பதிவு பெற்ற வாக்குகளில் 43,739 வாக்குகள் பெற்று 74.66% பெரும்பான்மையில் வெற்றி பெற்று மலேசிய தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

பொது

தொகு

முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் (Ismail Sabri Yaakob) பாரிசான் நேசனல் (Barisan Nasional) நிர்வாகத்தில்; ஆகத்து 2021 முதல் நவம்பர் 2022-இல் நிர்வாகம் வீழ்ச்சியடையும் வரையில்; இரண்டாவது முறையாக மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார்.

மார்ச் 2020 முதல் ஆகத்து 2021 வரை முன்னாள் மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) அவர்களின் பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) நிர்வாகத்தில் முதல் முறையாக மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சராக (Minister of Tourism, Arts and Culture) பணியாற்றினார்.[1]

இவர் மே 2013 முதல் மே 2018 வரை முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கின் பாரிசான் நேசனல் நிர்வாகத்தில் மலேசியப் பிரதமர் துறை அமைச்சராகவும், மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

2008-ஆம் ஆண்டு மலேசிய பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் உள்ள பத்தாங் சாடோங் (Batang Sadong) எனும் கிராமப்புற பழமைவாத தொகுதியில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.[2]

2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் தன் பத்தாங் சாடோங் தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்துக் கொண்டார். அதன் பிறகு, அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்த அமைச்சரவையில் இவர் மலேசியப் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நான்சி சுக்ரி, 1961 ஆகத்து 5-ஆம் தேதி சரவாக், கூச்சிங்கில் பிறந்தார். பதினொரு உடன்பிறப்புகளில் பத்தாவது ஆவர். தந்தையாரின் பெயர் சுக்ரி மகிதி (Shukri Mahidi). தாயாரின் பெயர் பீபி மெக்பெர்சன் (Bibi McPherson).

தந்தையின் வழியாக மலாய் மற்றும் மெலனாவு (Melanau) வம்சாவளியைக் கொண்டிருக்கிறார். தாயாரின் வழியாக இசுகாட்டிஷ் (Scottish), இபான் மற்றும் சீன வம்சாவளியைக் கொண்டிருக்கிறார்.[4][5]

இவருக்குத் திருமணமாகி, மூன்று குழந்தைகளுடன் தற்போது சரவாக்கின் கூச்சிங்கில் வசித்து வருகிறார்.

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
சாந்துபோங் மக்களவைத் தொகுதி
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
நான்சி சுக்ரி
(Nancy Shukri)
சரவாக் கூட்டணி (GPS)43,73984.4284.42  
முகமது ஜென் பேலி
(Mohamad Zen Peli)
பாக்காத்தான் (PH)5,0589.7610.96
அபெண்டி செமான்
(Affendi Jeman)
சுயேச்சை (Independent)3,0125.815.00  
மொத்தம்51,809100.00
செல்லுபடியான வாக்குகள்51,80998.19
செல்லாத/வெற்று வாக்குகள்9531.81
மொத்த வாக்குகள்52,762100.00
பதிவான வாக்குகள்79,54066.337.90
Majority38,68174.6616.10  
மூலம்: [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "YB DATO' SRI HAJAH NANCY SHUKRI". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  2. "'Benazir Bhutto', 'Sofia Jane' Tags Spice Up BN Campaign in Batang Sadong". Bernama. 27 February 2008. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=316850. 
  3. "Nancy Shukri Is Minister in the Prime Minister's Department". Bernama. 15 May 2013. http://www.bernama.com.my/bernama/v7/ge/newsgeneral.php?id=949998. 
  4. "HON. NANCY SHUKRI". GIS 2017 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404195811/https://gis2017.thegfcc.org/speakers/nancy-shukri/. 
  5. "Malay? Chinese? Just Nancy!". The Nut Graph. https://thenutgraph.com/malay-chinese-just-nancy/. 
  6. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_சுக்ரி&oldid=4110193" இலிருந்து மீள்விக்கப்பட்டது