மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pelancongan, Seni Dan Budaya Malaysia; ஆங்கிலம்: Ministry of Tourism, Arts and Culture) என்பது மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.[3]
Ministry of Tourism, Arts and Culture Kementerian Pelancongan, Seni Dan Budaya Malaysia | |
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 16 மே 2013 |
முன்னிருந்த அமைச்சு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | No. 2, Tower 1, P5/6 Road, Precinct 5, Federal Government Administrative Centre, 62200 புத்ராஜெயா 02°55′34″N 101°41′47″E / 2.92611°N 101.69639°E[2] |
பணியாட்கள் | 1,635 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 971,256,700 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைச்சு தலைமை |
|
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | www.motac.gov.my |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு |
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex) உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet), இந்த அமைச்சின் கலை மற்றும் கலாசாரத் துறைகளின் பெயர்கள் நீக்கப்பட்டு சுற்றுலா அமைச்சு (Ministry of Tourism) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வரலாறு
தொகு1953-ஆம் ஆண்டில் ஒற்றுமை, கலாசாரம், கலை மற்றும் மலேசிய பாரம்பரிய அமைச்சு (Ministry of Unity, Culture, Arts and Malaysian Heritage) எனும் அமைச்சு; அப்போதைய சமூக நல அமைச்சின் (Ministry of Social Welfare) கீழ் உருவாக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டில், தகவல் அமைச்சின் (Ministry of Information) கீழ் கலாசாரத் துறை (Culture Division) மாற்றப்பட்டது.
கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குறிப்பாக மே 13 நிகழ்வுகளின் கசப்பான அனுபவத்தை உணர்ந்த பின்னர், 1971-ஆம் ஆண்டில் மலேசியாவின் கலாசாரக் கொள்கைகள் (Cultural Policy) சீரமைக்கப்பட்டன.
மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
தொகுஅதைத் தொடர்ந்து, 1972-ஆம் ஆண்டில் கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சில் (Ministry of Culture, Youth and Sports) கலாசாரப் பிரிவு (Culture Division) இணைக்கப்பட்டது.
20 மே 1987-இல், கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இருந்து 'கலாசாரம்' எனும் கூறு பிரிக்கப்பட்டு மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் (Malaysian Tourism Development Corporation) இணைக்கப்பட்டது. அதை அடுத்து, சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சு (Ministry of Tourism and Culture) என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது.
கலாசாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு
தொகுஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 22, 1992-இல், அமைச்சின் கட்டமைப்பு மேலும் நெறிப்படுத்தப்பட்டு; கலாசாரம், கலை மற்றும் சுற்றுலா அமைச்சு (Ministry of Culture, Arts and Tourism) என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது.
27 மார்ச் 2004-இல் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'கலாசாரம்' மற்றும் 'சுற்றுலா' ஆகிய இரண்டு முக்கிய கூறுகளும் பிரிக்கப்பட்டன. அவை சுற்றுலா அமைச்சகம் (Ministry of Tourism) மற்றும் கலாசாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு (Ministry of Culture, Arts and Heritage) என தனி அமைச்சுகளின் கீழ் இணைக்கப்பட்டன.
ஒற்றுமை, கலாசாரம், கலை பாரம்பரிய அமைச்சு
தொகுமார்ச் 18, 2008-இல் அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றம். பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை (Department of National Unity and National Integration) எனும் துறை மலேசிய கலாசாரம், கலை பாரம்பரிய அமைச்சிற்குள் (மலாய்: Kementerian Perpaduan, Kebudayaan, Kesenian dan Warisan; (KEKKWA) ஆங்கிலம்: Ministry of Culture, Arts and Heritage) இணைக்கப்பட்டது.
அப்போது அது மலேசிய ஒற்றுமை, கலாசாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு (Ministry of Unity, Culture, Arts and Heritage) எனும் பெயரில் ஓர் அமைச்சாக அறியப்பட்டது.
முன்னதாக இந்த அமைச்சு, கலாசாரம் மற்றும் கலை அமைச்சின் கிளைகளில் ஒன்றாக இருந்தது. பின்னர் அது கலாசாரம், கலை மற்றும் சுற்றுலா அமைச்சாக (Ministry of Culture, Arts and Tourism) மாறியது. மலேசியாவின் 6-ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி ஏற்ற பிறகு, அந்த அமைச்சு சுற்றுலா அமைச்சு (Ministry of Tourism) எனும் பெயரில் ஒரு சிறப்பு அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது.
பொறுப்பு துறைகள்
தொகு- சுற்றுலா (Tourism)
- கலாசாரம் (Culture)
- காப்பகங்கள் (Archives)
- நூலகம் (Library)
- அருங்காட்சியகம் (Museum)
- பாரம்பரியம் (Heritage)
- கலைகள் (Arts)
- திரையரங்கம் (Theatre)
- கைவினை (Handicraft)
- காட்சி கலை (Visual Arts)
- மாநாடு (Convention)
- கண்காட்சிகள் (Exhibitions)
- இசுலாமிய சுற்றுலா (Islamic Tourism)
- கைவினை (Craft)
துறைகளும் பிரிவுகளும்
தொகு- தேசிய கலாசாரம் மற்றும் கலைத் துறை
- (National Department of Culture and Arts)
- (Jabatan Kebudayaan dan Kesenian Negara) (JKKN)
- தேசிய பாரம்பரியத் துறை
- (National Heritage Department)
- (Jabatan Warisan Negara)
- மலேசிய அருங்காட்சியகத் துறை
- (Malaysian Museums Department)
- (Jabatan Muzium Malaysia) (JMM)
- சுற்றுலா மலேசியா
- (Tourism Malaysia)
- (Pelancongan Malaysia)
- தேசிய காட்சிக் கலை மேம்பாட்டு வாரியம்
- (National Visual Arts Development Board)
- (Lembaga Pembangunan Seni Visual Negara) (LPSVN)
- மலேசிய மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம்
- (Malaysian Convention and Exhibition Bureau)
- (Biro Konvensyen dan Pameran Malaysia)
- தேசிய கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கழகம்
- (National Academy of Arts, Culture and Heritage)
- (Akademi Seni Budaya dan Warisan Kebangsaan) (ASWARA)
- இசுலாமிய சுற்றுலா மையம்
- (Islamic Tourism Center)
- (Pusat Pelancongan Islam)
- மலேசிய தேசிய ஆவணக் காப்பகம்
- (National Archives of Malaysia)
- (Arkib Negara Malaysia)
- மலேசிய தேசிய நூலகம்
- (National Library of Malaysia)
- (Perpustakaan Negara Malaysia) (PNM)
- கலாசார அரண்மனை
- (Palace of Culture)
- (Istana Budaya) (IB)
- மலேசிய கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகம்
- (Malaysian Handicraft Development Corporation)
- (Perbadanan Kemajuan Kraftangan Malaysia)
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Ministry of Tourism, Arts and Culture Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ "Poskod Putrajaya - (presint 5, 6, 19 , Putrajaya, Putrajaya Malaysia". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ "The Tourist Development Corporation of Malaysia (TDC) was established on 10 August 1972 as an agency under the former Ministry of Trade and Industry by an Act of Parliament". www.tourism.gov.my. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.