மலேசிய அரசாங்கம்

மலேசியாவின் அதிகாரப்பூர்வமான கூட்டாட்சி அரசாங்கம்

மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய மத்திய அரசாங்கம், (மலாய்: Kerajaan Persekutuan Malaysia; ஆங்கிலம்: Federal Government of Malaysia) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான கூட்டாட்சி அரசாங்கம் ஆகும்.

மலேசிய அரசாங்கம்
மலேசிய அரசாங்கத்தின் கொடி
உருவாக்கம்16 செப்டம்பர் 1963; 61 ஆண்டுகள் முன்னர் (1963-09-16)[1]
நாடுமலேசியா மலேசியா
இணையத்தளம்malaysia.gov.my
சட்டம் இயற்றும் பிரிவு
நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றம்
அமர்விடம்மலேசிய மக்களவை
மலேசிய மேலவை
நிர்வாகப் பிரிவு
தலைவர்மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்
நியமித்தவர்யாங் டி பெர்துவான் அகோங்
தலைமையகம்புத்ராஜெயா
முக்கியப் பொறுப்புமலேசிய அமைச்சரவை
நீதிப்பிரிவு
நீதிமன்றம்மலேசிய உச்சநீதிமன்றம்
(Federal Court of Malaysia)
இருக்கைமலேசிய நீதி அரண்மனை

மலேசியாவை நிர்வாகம் செய்யும் இந்த மலேசிய அரசு, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசப் பகுதியில் (Federal Territory of Putrajaya) இருந்து இயங்கி வருகிறது. இருப்பினும் மலேசிய அரசாங்கத்தின் சட்டங்களை இயற்றும் மலேசிய நாடாளுமன்றம் மட்டும் கோலாலம்பூர் மாநகரில் இருந்து இயங்கி வருகிறது.

பொது

தொகு

மலேசியக் கூட்டமைப்பில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த 11 மாநிலங்கள்; மேற்கு மலேசியாவைச் சேர்ந்த சபா, சரவாக் மாநிலங்கள்; மற்றும் 3 கூட்டரசு பிரதேசங்கள்; மலேசிய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர் அரசியலை (Westminster system) முன்மாதிரியாகக் கொண்டு ஓர் அரசியலமைப்பு முடியாட்சிக்குள் செயல்படுகிறது. மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையில் வகைப் படுத்தப்படுகிறது.[2] [3]

மலேசிய அரசாங்க நிர்வாகம்

தொகு

மலேசியாவின் கூட்டாட்சி அரசாங்கம், நாட்டின் உச்சநிலைச் சட்டமான மலேசிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே அந்த உச்சநிலைச் சட்டத்திற்கும் மலேசிய அரசாங்க நிர்வாகம் கட்டுப் படுகிறது.

மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 127-இன் (Article 127 of the Federal Constitution of Malaysia) கீழ் அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.[4] மூன்று துறைகள் உள்ளன: நிர்வாகம்; சட்டம் இயற்றும் துறை; நீதித்துறை.[5]

மத்திய அரசு நிர்வாகத் துறை

தொகு

மலேசியாவின் உச்சக்கட்ட அதிகாரம் மத்திய அரசு அல்லது கூட்டரசு அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டரசின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் புத்ராஜெயாவில் உள்ள அரசு நிர்வாக மையத்தில் நிர்வகிக்கப் படுகின்றன. மலேசிய அரசாங்கத்தின் தலைவர் என்று அழைக்கப்படும் மலேசியப் பிரதமர் தலைமையில் இயங்குகிறது.[6]

சட்டம் இயற்றும் துறை

தொகு

மலேசிய நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. மக்களவை எனும் மக்கள் பிரதிநிதிகள் அவை டேவான் ராக்யாட் (Dewan Rakyat); மற்றும் மேலவை எனும் செனட் சபை டேவான் நெகாரா (Dewan Negara).

மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் நாட்டின் தலைவர் எனும் வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கமாக விளங்குகிறார்.

டேவான் நெகாரா அல்லது மலேசிய மேலவை (மலாய்: Dewan Negara; ஆங்கிலம்: Senate); என்பது 70 உறுப்பினர்களைக் கொண்டது. மலேசிய மாநிலங்கள் 13-இல் இருந்து ஒவ்வொன்றிலும் இருவராக 26 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப் படுகின்றனர். மேலும் 44 பேர் மாமன்னரால் நியமிக்கப் படுகின்றனர்.

அனைத்து எழுபது மேலவை உறுப்பினர்களும் மூன்று வருட காலத்திற்கு அமர்கின்றனர். அதிகபட்சம் இரண்டு முறை மேலவை உறுப்பினராக பொறுப்பு வகிக்கலாம்.

மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்ட முன்வரைவுகள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப் படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமுன்வரைவுகள் மலேசிய அரசரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் அந்தச் சட்ட முன்வரைவுகள் சட்டமாக்கப் படுகின்றன.

டேவான் ராக்யாட் அல்லது கீழவை (மலாய்: Dewan Rakyat; ஆங்கிலம்: House of Representatives); என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஆகும். மக்களவையில் 222 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். மலேசியாவின் அனைத்துச் சட்ட முன்வரைவுகளும் இங்குதான் விவாதிக்கப் படுகின்றன.[7]

அவ்வாறு இயற்றப்படும் சட்ட முன்வரைவுகள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப் படுகின்றன. அதன் பின்னர், மலேசியப் பேரரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்ட முன்வரைவுகள் சட்டங்களாகின்றன.

நாடாளுமன்றம் சட்டப்படி அதிகப் பட்சமாக ஐந்து ஆண்டுகள் இயங்கலாம். நாடாளுமன்றத்தை மலேசியப் பேரரசர் எந்த நேரத்திலும் கலைக்கலாம். இருப்பினும் வழக்கமாகப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவ்வாறு செய்யப் படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Formation of Malaysia 16 September 1963". National Archives of Malaysia. Archived from the original on 10 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
  2. Julian Go (2007). "A Globalizing Constitutionalism?, Views from the Postcolony, 1945-2000". In Arjomand, Saïd Amir (ed.). Constitutionalism and political reconstruction. Brill. pp. 92–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004151741.
  3. "How the Westminster Parliamentary System was exported around the World". University of Cambridge. 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
  4. Jeong Chun Hai @ Ibrahim, & Nor Fadzlina Nawi. (2012). Principles of Public Administration: Malaysian Perspectives. Kuala Lumpur: Pearson Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-349-233-6
  5. "About the Malaysian Government". Government of Malaysia. 28 August 2018. Archived from the original on 22 June 2015.
  6. "Constitution of Malaysia 1957 - Part I". www.commonlii.org. பார்க்கப்பட்ட நாள் 10 February 2022.
  7. "Malaysia (10/01)". U.S. Department of State. பார்க்கப்பட்ட நாள் 10 February 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_அரசாங்கம்&oldid=4092330" இலிருந்து மீள்விக்கப்பட்டது