மலேசிய உச்சநீதிமன்றம்
மலேசிய உச்சநீதிமன்றம் (மலாய்:Mahkamah Rayuan Malaysia; ஆங்கிலம்:Federal Court of Malaysia; சீனம்:马来西亚联邦法院) என்பது மலேசியாவின் உச்ச நீதிமன்றம் எனும் கூட்டரசு உச்ச நீதிமன்றம்; மற்றும் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஆகும். இது புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் (Palace of Justice) உள்ளது. மலேசியாவில் இந்த உச்ச நீதிமன்றத்தை மலேசிய உச்சநீதிமன்றம் என அழைப்பது. வழக்கம்.
மலேசிய உச்ச நீதிமன்றம் | |
---|---|
Federal Court of Malaysia Mahkamah Persekutuan Malaysia | |
புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய நீதி அரண்மனை | |
நிறுவப்பட்டது | 1957 |
அமைவிடம் | மலேசிய நீதி அரண்மனை (Palace of Justice Malaysia), புத்ராஜெயா, மலேசியா |
புவியியல் ஆள்கூற்று | 2°55′48″N 101°41′24″E / 2.93000°N 101.69000°E |
நியமன முறை | மலேசியப் பிரதமரின் ஆலோசனையுடன் அரச நியமனம் |
அதிகாரமளிப்பு | மலேசிய அரசியலமைப்பு |
நீதியரசர் பதவிக்காலம் | 66 மற்றும் 6 மாதங்களில் கட்டாய ஓய்வு |
இருக்கைகள் எண்ணிக்கை | 15 |
வலைத்தளம் | Official website |
மலேசியத் தலைமை நீதிபதி | |
தற்போதைய | தெங்கு மைமுன் டுவான் மாட் (Tengku Maimun Tuan Mat) |
பதவியில் | 2 மே 2019 |
1957-ஆம் ஆண்டு மலாயாவின் விடுதலையின் போது நிறுவப்பட்ட இந்த நீதிமன்றம், அதன் தற்போதைய பெயரை 1994-ஆம் ஆண்டில் பெற்றது. 1985-ஆம் ஆண்டுக்கு முன்னர், மலேசிய உச்ச நீதிமன்றம் என்பது மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம் மட்டுமே, மலேசியாவின் முதன்மை உச்ச நீதிமன்றமாக இருந்தது.
வரலாறு
தொகுமலாயாவில் முதல் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட போது, அதன் பெயர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு, சிங்கப்பூர், மலாக்கா நீதித்துறை நீதிமன்றம் (Court of Judicature of Prince of Wales' Island (now Penang), Singapore and Malacca) ஆகும். இது 27 நவம்பர் 1826-இல், இலண்டன் பிரித்தானிய முடியாட்சி அரசினால் வெளியிடப்பட்ட நீதிக்கான இரண்டாவது சாசனத்தால் நிறுவப்பட்டது. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என்பது தற்போது பினாங்கு என அழைக்கப்படுகிறது.[1]
அந்த நீதிமன்றத்திற்கு நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் தலைமை தாங்கினார். அவருக்கு உதவியாக நீரிணை குடியேற்றங்களின் வழக்கறிஞர்; மற்றும் ஒரு நீதிபதி; துணையாக இருந்தனர்.[2] 1855 ஆகஸ்டு 12-இல் இலண்டன் பிரித்தானிய முடியாட்சியின் மூன்றாவது நீதி சாசனம், மலாயாவின் உச்ச நீதிமன்ற அமைப்பை மறுசீரமைத்தது. மூன்றாவது நீதி சாசனம், நீரிணை குடியேற்றங்களுக்கு மேலும் இரண்டு நீதிபதிகளை வழங்கியது. ஒரு நீதிபதி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கும்; மற்றொரு நீதிபதி சிங்கப்பூர், மலாக்காவுக்கும் வழங்கப்பட்டனர்.
சப்பானிய நீதிமன்றங்கள்
தொகுபின்னர், 1 ஏப்ரல் 1867 முதல் நீரிணை குடியேற்றங்கள், பிரித்தானிய முடியாட்சி காலனிகளாக மாறின.[3] அதன் பின்னர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு, சிங்கப்பூர், மலாக்கா நீதித்துறை நீதிமன்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நீரிணை குடியேற்றங்களின் உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டது.[4] நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் மற்றும் மலாய் மாநிலங்களின் அறிவுரைஞர்களும் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பதில் இருந்து தவிர்க்கப்பட்டனர்.[5][6]
சிங்கப்பூரின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (1942-1945), பிரித்தானியர்களின் கீழ் இயங்கிய அனைத்து நீதிமன்றங்களும் சப்பானிய இராணுவ நிர்வாகத்தால் நிறுவப்பட்ட புதிய நீதிமன்றங்களால் மாற்றப்பட்டன. அந்த நீதிமன்றங்கள் சியோனன் கோட்டோ-ஓயின் (Syonan Koto-Hoin) என அழைக்கப்பட்டன. அவை 29 மே 1942-இல் உருவாக்கப்பட்டன. அந்தக் கட்டத்தில் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் சப்பானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் இருந்தது. ஆனால், சப்பானியர்கள் மலாயாவையும் சிங்கப்பூரையும் ஆட்சி செய்த காலத்தில் ஒருபோதும் கூட்டப்படவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
தொகுஇரண்டாம் உலகப் போர்முடிவடைந்ததைத் தொடர்ந்து, போருக்கு முன்பு இருந்த நீதிமன்றங்கள் மீட்டு எடுக்கப்பட்டன. நீதித்துறையில் எந்த மாற்றமும் ஏற்படல்லை. பின்னர் 1946-இல் நீரிணை குடியேற்றங்கள் கலைக்கப்பட்டன. சிங்கப்பூர் ஒரு முடியாட்சி காலனியாக மாறியது.[7] நீரிணை குடியேற்றங்களின் உச்ச நீதிமன்றம் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் என்று அறியப்பட்டது.[8]
பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலங்களில் இருந்த நீதிமன்றங்கள் மற்ற மலாய் மாநிலங்களுடன் ஒன்றிணைந்து மலாயா கூட்டமைப்பின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court of the Federation of Malaya) உருவாக்கின. இந்த உச்ச நீதிமன்ற அமைப்பு 1957-இல் மலாயா விடுதலைக்க்குப் பிறகு 1963-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. மலாயா, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை 1963-இல் மலேசியாவை உருவாக்கியபோது, இந்த உச்ச நீதிமன்ற அமைப்பு மலேசிய உச்ச நீதிமன்றம் (Federal Court of Malaysia) என்று மறுபெயரிடப்பட்டது.[9]
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்
தொகு1965-இல் சிங்கப்பூர், மலேசியா கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. சிங்கப்பூர் ஒரு குடியரசு நாடாக மாறியது. இருப்பினும், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 1969-ஆம் ஆண்டு வரையில் மலேசிய உச்ச நீதிமன்றக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் சிங்கப்பூர் அதன் சொந்த நீதித்துறை அமைப்பை முறைப்படுத்த, தனி ஒரு உச்ச நீதிமன்ற நீதித்துறைச் சட்டத்தை இயற்றியது.[10]
1985-ஆம் ஆண்டுக்கு முன், மலேசிய உச்ச நீதிமன்றம் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம், முதன்மை உயர் உச்ச நீதிமன்றமாக இருந்தது.[11] சனவரி 1, 1978 அன்று, குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் தொடர்பாக, இங்கிலாந்தில் இருந்த பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வது, மலேசியாவில் தடை செய்யப்பட்டன. [11]
பின்னர் 1 சனவரி 1985-இல், சிவில் வழக்குகள் தொடர்பாக பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வதும் தடை செய்யப்பட்டன. பிரிவி உச்ச நீதிமன்ற முறையீடுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அத்தகைய முறையீடுகளை ஏற்றுக் கொண்டது. இறுதியாக, 24 ஜூன் 1994-இல், மலேசிய உச்ச நீதிமன்றம் என்று மறுபெயரிடப்பட்டது.
தற்போதைய மலேசிய உச்சமன்ற நீதிபதிகள்
தொகுமலேசிய உச்ச நீதிமன்றத்தில் மலேசியத் தலைமை நீதிபதி; மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்; மலாயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்; சபா சரவாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்; மேலும் 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். மலேசியத் தலைமை நீதிபதி மலேசியாவின் நீதித்துறையின் தலைவராகவும் உள்ளார்.
அனைத்து நீதிபதிகளும் மலேசியப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் யாங் டி-பெர்டுவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து நீதிபதிகளும் அவர்களின் வயது 66 ஆண்டு 6 மாதங்கள் ஆனதும் கட்டாயமாக ஓய்வு பெறுகின்றனர். மலேசிய உச்சமன்ற நீதிபதிகள் பின்வருமாறு:[12]
பெயர் | பிறப்பு | கல்லூரி | பதவியேற்பு | கட்டாய ஓய்வு |
பதவி காலம் | பணிகள் |
---|---|---|---|---|---|---|
துன் தெங்கு மைமுன் துவான் மாட் Tengku Maimun Tuan Mat (மலேசியத் தலைமை நீதிபதி) |
2 சூலை 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 26 நவம்பர் 2018 | 1 சனவரி 2026 | 6 ஆண்டுகள், 28 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2007–2013) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2013–2018) |
டான் ஸ்ரீ டத்தோ அமார்]] அபாங் இசுகந்தர் அபாங் அசீம் (Abang Iskandar Abang Hashim) (மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்) |
3 சூலை 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 26 நவம்பர் 2018 | 2 சனவரி 2026 | 6 ஆண்டுகள், 28 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2009–2013) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2013–2018) |
டான் ஸ்ரீ டத்தோ அப்துல் ரகுமான் செப்லி Abdul Rahman Sebli (சபா சரவாக் தலைமை நீதிபதி) |
25 சனவரி 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 8 ஆகத்து 2019 | 24 சூலை 2025 | 5 ஆண்டுகள், 138 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2010–2014) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2014–2019) |
டான் ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன் Nallini Pathmanathan |
23 ஆகத்து 1959 | இலண்டன் பல்கலைக்கழகம் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் |
26 நவம்பர் 2018 | 22 பெப்ரவரி 2026 | 6 ஆண்டுகள், 28 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2009–2014) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2014–2018) |
டத்தோ சபரியா முகமட் யூசோப் Zabariah Mohd. Yusof |
11 ஏப்ரல் 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 5 திசம்பர் 2019 | 10 அக்டோபர் 2025 | 5 ஆண்டுகள், 19 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2013–2016) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2016–2019) |
டத்தோ ஸ்ரீ டத்தோ அசுனா முகமட் அசிம் HasnahMohammed Hashim |
15 மே 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 5 திசம்பர் 2019 | 14 நவம்பர் 2025 | 5 ஆண்டுகள், 19 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2012–2016) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2016–2019) |
டத்தோ அர்மின்டர் சிங் HarmindarSingh Dhaliwal |
22 அக்டோபர் 1959 | மலாயா பல்கலைக்கழகம் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் |
25 மார்ச்சு 2020 | 21 ஏப்ரல் 2025 | 4 ஆண்டுகள், 274 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2011–2016) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2016–2020) |
டத்தோ ரொட்சாரியா பூஜாங் Rhodzariah Bujang |
5 நவம்பர் 1961 | மலாயா பல்கலைக்கழகம் | 25 மார்ச்சு 2020 | 4 மே 2028 | 4 ஆண்டுகள், 274 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2011–2017) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2017–2020) |
டத்தோ நோர்டின் அசான் NordinHassan |
13 சூலை 1963 | மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் | 17 சனவரி 2023 | 12 சனவரி 2030 | 1 ஆண்டு, 342 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2017–2020) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2020–2023) |
டத்தோ அபு பக்கார் ஜாயிஸ் Abu Bakar Jais |
27 சூன் 1962 | மலாயா பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகம் |
13 சூன் 2023 | 26 திசம்பர் 2028 | 1 ஆண்டு, 194 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் 2016–2019) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2019–2023) |
டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜாலில் Abdul Karim Abdul Jalil |
10 ஏப்ரல் 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 13 சூன் 2023 | 9 அக்டோபர் 2025 | 1 ஆண்டு, 194 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2014–2015) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2016–2023) |
டத்தோ அனிபா பரிகுல்லா Hanipah Farikullah |
23 மே 1959 | மலாயா பல்கலைக்கழகம் | 18 மார்ச்சு 2024 | 22 நவம்பர் 2025 | 0 ஆண்டுகள், 281 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் (2013–2018) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2018–2024) |
டத்தோ வாசிர் ஆலாம் மைதீன் மீரா Vazeer Alam Mydin Meera |
3 சனவரி 1962 | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் |
18 மார்ச்சு 2024 | 2 சூலை 2028 | 0 ஆண்டுகள், 281 நாட்கள் | மலேசிய உயர் நீதிமன்றம் 2015–2019) மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (2019–2024) |
அமைவிடம்
தொகுகூட்டாட்சி நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவின் மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் மலேசிய உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. இது முன்பு கோலாலம்பூரில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் இருந்தது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Andrew Phang Boon Leong (2006). From Foundation to Legacy: The Second Charter of Justice. Singapore: Singapore Academy of Law. pp. 19–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-05-7194-8. (pbk.)..
- ↑ Mavis Chionh (2005). "The Development of the Court System". In Kevin Y[ew] L[ee] Tan (ed.). Essays in Singapore Legal History. Singapore: Singapore Academy of Law; Marshall Cavendish Academic. pp. 93–138 at 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-210-389-5. (hbk.), (pbk.)..
- ↑ By the Straits Settlements Act 1866 (29 & 30 Vict. c. 115) (UK).
- ↑ By the Supreme Court Ordinance 1868 (No. 5 of 1868) (Straits Settlements).
- ↑ These changes were respectively effected by the Judicial Duties Act (No. 3 of 1867) (Straits Settlements) and the Supreme Court Ordinance 1868 (No. 5 of 1868) (Straits Settlements).
- ↑ Judicial Committee Act 1844 (7 & 8 Vict., c. 69) (UK).
- ↑ By the Straits Settlements (Repeal) Act 1946 (9 & 10 Geo. 6. c. 37).
- ↑ Kevin Y[ew] L[ee] Tan (2005). "A Short Legal and Constitutional History of Singapore". In Kevin Y[ew] L[ee] Tan (ed.). Essays in Singapore Legal History. Singapore: Marshall Cavendish Academic for the Singapore Academy of Law. pp. 1–72 at 42–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-210-389-5. (hbk.), (pbk.)..
- ↑ By the Malaysia Act 1963 (No. 26 of 1963, Malaysia).
- ↑ The change was effected by the Courts of Judicature Act 1963 (No. 7 of 1964, Malaysia), reprinted as Act No. RS(A) 6 of 1966 in the Singapore Reprints Supplement (Acts) of the Government Gazette.
- ↑ 11.0 11.1 "Courts & Judgments". Jurist. University of Pittsburgh. Archived from the original on 19 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Judges of the Federal Court". Official Website of the Judicial Appointment Commission. Judicial Appointment Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.