நீரிணை குடியேற்றங்கள்
நீரிணைக் குடியேற்றங்கள் அல்லது தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்; ஆங்கிலம்: Straits Settlements; மலாய்: Negeri-Negeri Selat) என்பது 1826-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில், மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் ஆகும்.
நீரிணைக் குடியேற்றங்கள் Straits Settlements | |
---|---|
நாட்டுப்பண்: "God Save the King" (1826–1837; 1901–1942; 1945–1946) "God Save the Queen" (1837–1901) | |
நிலை | காலனி |
தலைநகரம் | ஜார்ஜ் டவுன் (1826–1832) சிங்கப்பூர் (1832–1946) |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
பேசப்படும் மொழிகள் | |
அரசாங்கம் | முடியாட்சி காலனி |
வரலாற்று சகாப்தம் | British Empire |
நாணயம் |
|
அந்த நீரிணைக் குடியிருப்புகள் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை. இந்த மாநிலங்கள் அனைத்தும் முன்பு பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தன.
வரலாறு
தொகு1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு (Anglo-Dutch Treaty of 1824) ஒப்பந்தத்திற்குப் பிறகு, பினாங்கு மாநிலம், லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor) என்பவரால் நிர்வகிக்கப் பட்டது. மலாக்கா; மற்றும் சிங்கப்பூர் மாநிலங்கள் ஆளுநர் (Resident) என்பவரால் நிர்வகிக்கப் பட்டன.
1826-ஆம் ஆண்டில், பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து பேராக் மாநிலத்தில் இருந்த டிண்டிங் (Dinding) எனும் பகுதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[1]
கொக்கோசு (கீலிங்) தீவுகள்
தொகுஇந்த நான்கு பகுதிகளும் நீரிணைக் குடியிருப்புகள் (Straits Settlements) எனும் பெயரில் அழைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பு, நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதையும்; நிர்வாகத் தரதை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது.
1886-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸ் தீவு (Christmas Island) மற்றும் கொக்கோசு தீவுகள் (Cocos Islands); நீரிணைக் குடியிருப்புகளில் சேர்க்கப்பட்டன.[2][3]
லபுவான் தீவு
தொகு1 சனவரி 1907 முதல் போர்னியோ கடற்கரைக்கு அப்பால் உள்ள லபுவான் தீவும் நீரிணைக் குடியேற்றக் காலனியில் இணைக்கப்பட்டது. இருப்பினும் 1912-ஆம் ஆண்டில் லபுவான் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. நீரிணைக் குடியேற்றப் பகுதியில் இருந்த பெரும்பாலான பிரதேசங்கள், தற்சமயம் மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ளன. 1965-இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து சென்றது.
1955-ஆம் ஆண்டில், கொக்கோசு தீவுகள் ஆஸ்திரேலியா நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் எஞ்சி இருந்த கிறிஸ்மஸ் தீவு 1958-இல், அதே ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டது.
காட்சியகம்
தொகு-
1910-இல் பினாங்கு துறைமுகம்
-
1860–1900-ஆம் ஆண்டுகளில் மலாக்கா
-
1860–1900-ஆம் ஆண்டுகளில் பினாங்கு
-
1912-ஆம் ஆண்டில் மலாக்கா
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Straits Settlements was formed by the amalgamation of Penang, Malacca and Singapore in 1826 followed by Labuan, which joined in 1906. Christmas Island and the Cocos-Keeling Islands became part of the Straits Settlements after they were incorporated into the settlement of Singapore in 1900 and 1903 respectively". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
- ↑ The Straits Settlements, 1826–1867: Indian Presidency to Crown Colony. Athlone Press, London. 1972. p. 3. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
{{cite book}}
:|first1=
missing|last1=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Christmas Island, Cocos Islands, and Labuan island would later fall under the Straits Settlements administration". WW2DB. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
வெளி இணைப்புகள்
தொகு