கிறிஸ்துமசு தீவு

கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி (Territory of Christmas Island) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன[1]. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி
கொடி of கிறிஸ்துமஸ் தீவு
கொடி
நாட்டுப்பண்: Advance Australia Fair
அரச வணக்கம்: கோட் சேவ் த குயிண்
கிறிஸ்துமஸ் தீவுஅமைவிடம்
தலைநகரம்பிளையிங் பிஷ் கோவ் ("குடியேற்றம்")
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (நடப்பின் படி)
அரசாங்கம்கூட்டாட்சி யாப்பு முடியாட்சி
• அரசி
இரண்டாம் எலிசபெத்
• ஆத்திரேலியப் பொதுநலவாயத்தின் ஆளுநர்

குவெண்டின் பிரிசு
• நிருவாகி
பிறையன் லேசி
• உள்ளூராட்சித் தலைவர்
கோர்டன் தொம்சன்
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகள்
• ஆட்சி
அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்

1957
பரப்பு
• மொத்தம்
135 km2 (52 sq mi)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
361 (ஏப்ரல் 2009) (220வது)
• அடர்த்தி
10.39/km2 (26.9/sq mi) (n/a)
நாணயம்அவுஸ்திரேலிய டொலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+7
அழைப்புக்குறி61
இணையக் குறி.cx

வரலாறு

தொகு

1643 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் தலைவன் கப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் கிறிஸ்துமசு நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார்[2]. 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் டச்சு நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு மோனி எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை[3]. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த சிக்னெட் கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை[4]. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போர்ணியோ தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன.

தேங்காய் நண்டு

தொகு

இந்த தீவில் அரியவை உயிரினங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இவற்றில் தேங்காய் நண்டு பிரசித்தி பெற்றதாகும். இந்த வகை நண்டுகள் 3 அடிகள் நீளத்துடன், 4 கிலோ எடைகள் கொண்டதாக உள்ளது. இது தன் ஒரு காலால் ஒரு தேங்காயை உடைக்கும் திறன் படைத்ததாக உள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Save Christmas Island - Introduction". The Wilderness Society. 2002-09-19. பார்க்கப்பட்ட நாள் 2007-04-14.
  2. "Department of the Environment, Water, Heritage and the Arts – Christmas Island History". Australian Government. 8 சூலை 2008. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Digital Collections – Maps – Goos, Pieter, ca. 1616–1675. Paskaerte Zynde t'Oosterdeel Van Oost Indien (cartographic material) : met alle de Eylanden deer ontrendt geleegen van C. Comorin tot aen Iapan". National Library of Australia. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Carney, Gerard (2006). The constitutional systems of the Australian states and territories. Cambridge University Press. p. 477. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521863058. The uninhabited island was named on Christmas Day 1643 by Captain William Mynors as he sailed past, leaving to William Dampier the honour of first landing ashore in 1688.
  5. மசாலா: ராட்சச நண்டுகள்! தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016

10°29′S 105°38′E / 10.483°S 105.633°E / -10.483; 105.633


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்துமசு_தீவு&oldid=4092600" இலிருந்து மீள்விக்கப்பட்டது