மலேசியத் தலைமை நீதிபதி
மலேசியத் தலைமை நீதிபதி (ஆங்கிலம்: Chief Justice of Malaysia; மலாய்: Ketua Hakim Negara) என்பவர் மலேசிய நீதித் துறையின் தலைவர் ஆவார். மலேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எனவும் அழைக்கப் படுகிறார். 1994-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எனும் பதவி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர், கூட்டரசு நீதிமன்றப் பிரபுத் தலைவர் (Lord President of the Federal Court) என அழைக்கப்பட்டது.
மலேசியத் தலைமை நீதிபதி
Chief Justice of Malaysia Ketua Hakim Negara Malaysia | |
---|---|
உறுப்பினர் | மலேசிய உச்சநீதிமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா, மலேசிய நீதி அரண்மனை |
பரிந்துரையாளர் | மலேசியப் பிரதமர் |
நியமிப்பவர் | மலேசியப் பேரரசர் பிரதமரின் ஆலோசனையுடன் நியமனம் |
பதவிக் காலம் | 65 - 66 வயதில் கட்டாய ஓய்வு |
அரசமைப்புக் கருவி | மலேசிய அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜேம்ஸ் பெவரிட்ஜ் தாம்சன் James Beveridge Thomson |
துணை மலேசியத் தலைமை நீதிபதி | மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் |
ஊதியம் | MYR 36,000 மாத ஊதியம்[1] |
இணையதளம் | www |
மலேசியத் தலைமை நீதிபதி பதவிக்கு அடுத்த நிலைப்பதவி, மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (President of the Court of Appeal) பதவி ஆகும். அடுத்த பதவி மலாயா தலைமை நீதிபதி; அதற்கும் அடுத்த பதவி சபா சரவாக் தலைமை நீதிபதி ஆகும்.[2]
2 மே 2019 முதல் தற்போது வரையில் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் தெங்கு மைமுன் துவான் மாட் ஆவார்.
மலேசியாவின் தலைமை நீதிபதிகள்
தொகு- துன் அப்துல் அமீட் ஒமார் (1994; அதற்கு முன்னர் பிரபுத் தலைவர்)
- துன் முகமட் யூசோப் சின் (1994 to 2000)
- துன் முகமட் சாய்டின் அப்துல்லா (2000 to 2003)
- துன் அகமட் பைருசு அப்துல் ஆலிம் (2003 to 2007)
- துன் அப்துல் அமீட் முகமட் (2007 to 2008)
- துன் சாக்கி அசுமி (2008 to 2011)[3]
- துன் அரிபின் சக்காரியா (2011 தொடக்கம்)
- துன் முகமட் ரவுஸ் சரீப் (Md Raus Sharif) (2017-2018)[4]
- துன் ரிச்சர்ட் மலாஞ்சும் (Richard Malanjum) (2018-2019)[5]
- துன் தெங்கு மைமுன் துவான் மாட் (Tengku Maimun Tuan Mat) (2019-kini)[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lim, Ida (18 June 2018). "A look at the resignation of Malaysia's two top judges and what's next". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
- ↑ "The Malaysian Judiciary: Operation of the court" பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம், Malaysian Court. Accessed: January 15, 2015.
- ↑ Tun Zaki Azmi appointed as judge at Dubai financial courts .
- ↑ "Md Raus appointed new Chief Justice". The Star. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
- ↑ "Richard Malanjum Ketua Hakim Negara yang baharu". Bernama. Berita Harian. 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ "Tengku Maimun named new chief justice". Free Malaysia Today. 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.