மலாயா

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது.

மலாயா
Malaya
கி.மு.2000 தொடங்கி 1963 வரை–1963
கொடி of மலாயா
மலாயா (1950–1963)
சின்னம் of மலாயா
சின்னம்
தலைநகரம்கோலாலம்பூர்
பேசப்படும் மொழிகள்மலாய் ஆங்கிலம் தமிழ் சீனம்
அரசாங்கம்அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு
மாட்சிமை தங்கிய பேரரசர் 
வரலாறு 
• தொடக்கம்
கி.மு.2000 தொடங்கி 1963 வரை
• சுதந்திரம்
31 ஆகஸ்டு 1957[1]
• உருவாக்கம் மலேசியா
16 செப்டம்பர் 1963 1963
பரப்பு
1963132,364 km2 (51,106 sq mi)
நாணயம்மலாயா ரிங்கிட்; பிரித்தானிய போர்னியோ டாலர்]]
பின்னையது
}
Malaysia

ஏற்கனவே இருந்த மலாயாவுடன் சிங்கப்பூர், சரவாக், சபா மாநிலங்கள் இணைந்து மலேசியா எனும் ஓர் அமைப்பை உருவாக்கின. அந்த மலேசிய அமைப்பில் இருந்து 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலகிக் கொண்டது. மலாயா என்பது வேறு. மலாயா கூட்டமைப்பு என்பது வேறு.

1948-ஆம் ஆண்டில் இருந்து 1963-ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு (Federated Malays States) என்று அழைத்தனர். அந்தக் கால கட்டத்திற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேசுவரா காலத்தில், தீபகற்ப மலாயாவை மலாயா என்றே அழைத்தார்கள். இராசேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது மலைநாடு மலாயா என்றே அழைக்கப்பட்டது. கம்போடியப் பேரரசை உருவாக்கிய ஜெயவர்மன் II; ஜெயவர்மன் V - சூரியவர்மன் II காலத்திலும் மலாயாத் தீபகற்பம்; மலாயா என்றுதான் அழைக்கப்பட்டு உள்ளது.

வரலாறு தொகு

மலாயாவின் வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தனர். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தனர்.[2]

கி.மு.11,000 தொகு

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழைமையானது எனக் கணக்கிடப் பட்டுள்ளது. 8,000 ஆண்டுகள் பழைமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.[3] மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழைமையானவை.

கி.மு.4,000 தொகு

பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் மற்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் ஈப்போ மாநகருக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கே ஒரு பழைமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழைமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.[4] இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனிதர்கள், அவர்கள் தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாக மலாயாவைப் பயன் படுத்தி உள்ளனர். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து இந்த உண்மை தெரிய வருகின்றது.

கி.மு.2,000 தொகு

மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர். கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். இவர்கள் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள்.[5]

இந்தக் கால கட்டத்தைக் கற்காலம் என்று வரலாறு சொல்கின்றது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளர்ப்புப் பிராணிகளும் இவர்களிடம் இருந்துள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளனர்.

கி.மு.200 தொகு

கி.மு. 200-ஆம் ஆண்டிற்குப் பிந்தியவை வெண்கலக் காலம். இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் என்றும் அழைக்கின்றனர். இது இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது. ஆனால், இந்த டோங் சோன் கலாசாரம் வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றியது.[6] ஆனால், அது எப்படி இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது.

டோங் சோன் கலாசாரம் தொகு

டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன?[7]

 • முறையாக நெல் சாகுபடி செய்தல்,
 • நெல் பயிரிட எருமை மாடுகளை முறையாகப் பழக்குதல்,
 • அதிகமான மாமிசம் தரும் பன்றிகளை வளர்த்தல்,
 • வலை பின்னி மீன் பிடித்தல்,
 • பாய்மரங்களைக் கட்டிப் படகு விடுதல்,
 • மரத்தைக் குடைந்து படகுகளைச் செய்தல்

கி.பி.200-கி.பி.300 தொகு

கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்தது இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப் பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப் பட்டன.[8]

அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்துள்ளனர். பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன.

கி.பி.400-கி.பி.1200 தொகு

கெடா எனப் படும் கடாரத்தில் 4 - 12 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினர். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன.[9]

மலாய் ஆட்சியாளர்கள் தொகு

மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமத்திராவில் இருந்து வந்த மலாய் ஆட்சியாளர்களின் ஆளுமை மலாயாவில் வேர் ஊன்றியுள்ளது. பலேம்பாங்கில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மலாய் அரசு இருந்து இருக்கிறது.

கி,பி.600-ஆம் ஆண்டு சீன வரலாற்று ஆவணங்களில் அதற்கான சான்றுகள் உள்ளன. இந்தியர்களின் ஆதிக்கம் படைத்த புத்த மத அரசாங்கம் அங்கே காணப் படுகிறது.

அதற்கு ஸ்ரீவிஜய அரசு என்று பெயரும் உள்ளது. ஸ்ரீவிஜய அரசு மலாயாவின் இலங்காசுகம், கெடா, கிளாந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்தும் உள்ளது. 1200-ஆம் ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மலாயாவினுள் இஸ்லாம் சமயத்தைக் கொண்டு வந்தனர்.[10]

மஜாபாகித் இந்து அரசு தொகு

பலேம்பாங்கைச் சார்ந்த ஓர் அரசப் பரம்பரையினர் கி.பி.1200-1300-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் ஒரு தனி அரசாங்கத்தை உருவாக்கி அதற்கு துமாசிக் என்றும் பெயர் சூட்டினர். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அந்த அரசாங்கத்தை 1360-இல் மஜாபாகித் எனும் அரசு தாக்கி ஆட்சியாளர்கள் அனைவரையும் அழித்து ஒழித்தது.

மலாயா தீபகற்பத்தை ஆள வேண்டும் எனும் எண்ணம் மஜாபாகித் மன்னருக்கு ஏற்படவில்லை. துமாசிக்கை நாசம் செய்து விட்டு அப்ப்டியே போய் விட்டனர். ஆனால், மஜாபாகித் ஆளுமையின் தாக்கத்தை இன்றும் மலாயாவின் கிளாந்தான், தாய்லாந்தின் பட்டாணி மாநிலங்களில் காண முடிகிறது.

மலாக்கா பேரரசு தொகு

துமாசிக் என்று முன்பு அழைக்கப் பட்ட சிங்கப்பூர், மஜாபாகித் அரசாங்கத்தால் அழிக்கப் பட்டதும் அதற்கு ஈடாக மலாக்கா நகரம் தோற்றுவிக்கப் பட்டது. மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா.

மஜாபாகித்தின் அடுத்து வரும் தாக்குதலில் இருந்து பரமேசுவரா தப்பிக்க நினைத்தார். அங்கேயே இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

பரமேசுவரா தன்னுடன் சில நம்பிக்கையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலக காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது தான் மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேசுவரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேசுவராவுக்குப் பிடிக்கவில்லை.

செனிங் ஊஜோங் தொகு

ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாக அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.

தொடக்கக் காலத்தில் அவருக்கு சியாம் நாட்டில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் வந்தன. அதற்கும் காரணம் உண்டு. சியாம் நாட்டின் பாதுகாப்பில் இருந்த துமாசிக்கைப் பரமேசுவரா அடித்துப் பிடித்து கைப்பற்றியதனால் அவர் சியாம் நாட்டின் எதிர்ப்புகளைச் சமபாதித்துக் கொண்டார்.

சீனாவின் பாதுகாப்பு தொகு

சியாம் நாட்டில் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர் உதவிகளைத் தேடி சீனா விற்குச் சென்றார். சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைத்தது. அதன் வழியாகப் பரமேசுவரா மலாக்காவின் அரசராகப் பதவி உயர்வு பெற்றார். அதுவே சியாம் நாட்டின் படையெடுப்புகளைத் தவிர்க்கவும் வைத்தது.

15 ஆம் நூற்றாண்டுகளில் மலாக்கா மிகச் சிறப்பான வணிகத் தளமாக விளங்கியது. பரமேசுவரா இஸ்லாமியச் சமயத்தைத் தழுவியதால் அரபு வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். வியாபாரமும் பெருகியது. சீனர்களின் வியாபாரமும் மலாக்காவின் வளப்பத்திற்குக் கை கொடுத்தது.

ஐரோப்பியர்களின் வருகை தொகு

1511ல் அல்பான்சோ டி அல்புகர்க் எனும் போர்த்துகீசியக் கடலோடி மலாக்காப் பேரரசைக் கைப்பற்றினார். அப்போது மலாக்காவை சுல்தான் முகமது ஷா என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஜொகூரில் உள்ள ரியாவ் தீவுகளுக்குத் தப்பித்துச் சென்றார். அங்கே அவர் ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தனர்.

மலாக்கா வாழ் மக்களைக் கிறிஸ்துவச் சமயத்திற்கு கொண்டு வர போர்த்துகீசியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இஸ்லாமியச் சமயத்தில் இருந்து அவர்களைத் திசை திருப்ப முடியவில்லை.

இஸ்லாமியச் சமயம் மலாக்காவில் நன்றாக வேரூன்றி இருந்தது. அதனால் போர்த்துகீசியர்கள் தங்கள் கவனத்தை முழுமூச்சாக வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களிலும் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவும் இல்லை.

1641ல் போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்களிடம் தோல்வி அடைந்தனர். டச்சுக்காரர்களின் முக்கிய நோக்கம் வியாபாரம் செய்வது. பொருள் சேர்த்து வீடு பக்கம் போய்ச் சேர்வது. 1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்தது.

டச்சு-ஆங்கிலோ உடன்படிக்கை தொகு

பின்னர் 1818 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுக்காரர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப் பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1824 ஆம் ஆண்டு டச்சு-ஆங்கிலோ உடன்படிக்கை ஐரோப்பாவில் கையெழுத்தானது. அதன்படி மலாக்கா ஆங்கிலேயரின் வசம் வந்தது. சுமத்திராவில் ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

பூகிஸ்காரர்கள் தொகு

போர்த்துகீசியர்களிடம் இருந்து தப்பி ஓடிய சுல்தான் முகமது ஷா 1699 ஆம் ஆண்டு ரியாவ் தீவில் கொல்லப் பட்டார். அத்துடன் பரமேசுவராவின் பாரம்பரியம் ஒரு முடிவுக்கு வந்தது. சுலாவசி தீவில் இருந்த பூகிஸ்காரர்கள் ரியாவ் அரசின் மீது அடிக்கடி படை எடுத்து அந்த அரசை மேலும் மேலும் பலகீனப் படுத்தி வந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பூகிஸ்காரர்கள் மலாயா பக்கம் தங்கள் கவனத்தைத் திசை திருப்பினர். காலப் போக்கில் சிலாங்கூர் மாநிலத்தில் காலூன்றி தங்களின் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டனர். இப்போது சிலாங்கூரில் பூகிஸ்காரர்கள் தான் அதிகமாக வாழ்கின்றனர்.

கிழக்கு இந்தியக் கம்பெனி தொகு

1786ல் சர் பிரான்சிஸ் லைட் என்பவர் பினாங்குத் தீவைக் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கீழ் கொண்டு வந்தார். அதுவரை பினாங்குத் தீவு கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அப்போதைய கெடா சுல்தானுக்குப் பூகிஸ்காரர்களின் அச்சுறுத்தல் தொல்லைகள் இருந்து வந்தன.

அத்துடன் சயாம் அரசின் ஆதிக்க வெறியும் தலை விரித்தாடியது. எதிரிகளிடம் இருந்து கெடாவைக் காப்பாற்ற கெடா சுல்தான் வேறு வழி இல்லாமல் பினாங்குத் தீவை ஆங்கிலேயர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்.

இருப்பினும் 1821 ஆம் ஆண்டு சயாமியர்கள் தாக்குதல் நடத்தி கெடாவைக் கைப்பற்றிக் கொண்டனர். 1842 வரை கெடா சியாமியர்களின் பிடியில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தலையிடவில்லை. 1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சியாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் பின்னர் சியாமியர்களின் அச்சுறுத்தல்களும் மலாயாவின் வட பகுதிகளில் ஒரு முடிவிற்கு வந்தன.(வளரும்)--ksmuthukrishnan 08:14, 19 மே 2011 (UTC)

மலாயாவுக்குச் சுதந்திரம் தொகு

1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப் பட்டது. ஏற்கனவே இருந்த மலாயாவுடன் சிங்கப்பூர், சரவாக், சபா மாநிலங்கள் இணைந்து மலேசியா எனும் ஓர் அமைப்பை உருவாக்கின.

அந்த மலேசிய அமைப்பில் இருந்து 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலகிக் கொண்டது. மலாயா என்பது வேறு. மலாயா கூட்டமைப்பு என்பது வேறு. 1948-ஆம் ஆண்டில் இருந்து 1963-ஆம் ஆண்டு வரை மலாயாவை மலாயா கூட்டமைப்பு (Federated Malays States) என்று அழைத்தனர்.

அந்தக் காலக் கட்டத்திற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப் பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

நூல்கள் தொகு

 • Aljunied, Syed Muhd Khairudin; Heng, Derek (2009), Reframing Singapore: Memory - Identity - Trans-Regionalism, Amsterdam University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-8964-094-9
 • Buyers, Christopher, The Ruling House of Malacca – Johor, பார்க்கப்பட்ட நாள் 2019-11-07
 • Commonwealth Secretariat (2004), Commonwealth Yearbook 2006, Commonwealth Secretariat, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549629-4-4
 • Heng, Derek (2005), "Continuities and Changes : Singapore as a Port-City over 700 Years", Biblioasia, National Library Board, 1, பன்னாட்டுத் தர தொடர் எண் 0219-8126

மேற்கோள் தொகு

 1. "Federation of Malaya is inaugurated - Singapore History". eresources.nlb.gov.sg. Archived from the original on 8 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
 2. Lekenvall, Henrik. LATE STONE AGE COMMUNITIES IN THE THAI-MALAY PENINSULA. Journal of Indo-Pacific Archaeology 32 (2012): 78-86.
 3. ‘Perak Man’ is the name given to the skeletal remains of a man thought to have lived about 11,000 years ago in the Lenggong Valley district of Hulu Perak.
 4. Gua Tambun Cave Paintings were ‘discovered’ in 1959 by Lt. RL Rawlings, a British army officer with the 2nd Battalion of the 6th QEO Gurkha Rifles.
 5. Migration of people southward from present-day Yunnan in China and eastward from the peninsula to the Pacific islands, where Malyo-Polynesian languages still predominate.
 6. Schliesinger, Joachim (2018). Origin of the Tai People 6―Northern Tai-Speaking People of the Red River Delta and Their Habitat Today Volume 6 of Origin of the Tai People. Booksmango,. pp. 3–4, 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1641531835.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
 7. Ferlus, Michael (2009). "A Layer of Dongsonian Vocabulary in Vietnamese". Journal of the Southeast Asian Linguistics Society 1: 95-108. https://hal.archives-ouvertes.fr/file/index/docid/991634/filename/Ferlus2009_Dongsonian_JSEALS.pdf. 
 8. Excavation team had found beads from the Roman period and ancient Persian era and Chinese ceramics from the Song Dynasty dated back to 6th century.
 9. "In 1955, G. de G. Sieveking conducted the second excavation in Kuala Selinsing. He recovered a remarkable total of > 3000 glasses and polished stone beads from an 18 inch layer". Archived from the original on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
 10. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4155-67-5.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா&oldid=3925525" இலிருந்து மீள்விக்கப்பட்டது