13 மே இனக்கலவரம்

13 மே இனக்கலவரம், 13 மே சம்பவம் அல்லது 1969 மலேசிய இனக்கலவரம் என்பது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சீன மலாய் குழுவாத வன்முறை நிகழ்வாகும்.[1] இந்த இனக்கலவரம், 1969-ஆம் ஆண்டு மலேசியாவில் ஒரு தேசிய அவசரகாலத் தன்மைக்கு வழிவகுத்தது. கோலாலம்பூர், அப்போது சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த வன்முறைக்குப் பின்னர், மலேசியப் பேரரசர் தேசிய அவசரகாலத்தை உடனடியாக நாடு முழுமைக்கும் பிரகடனம் செய்தார். நாடாளுமன்ற நடைமுறைகளையும் மலேசிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி வைத்தது. அரசாங்க நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் எனும் தற்காலிகச் செயல்பாட்டு நிர்வாகம், 1971 வரை ஏற்று நடத்தியது.

13 மே சம்பவம்
13 May Incident
Peristiwa 13 Mei
ڤريستيوا ١٣ مي
五一三事件
தேதி13 மே 1969
அமைவிடம்
காரணம்1969 மலேசியப் பொதுத் தேர்தலில், ஆளும் கூட்டணிக் கட்சி (பாரிசான் நேசனல்; ஜனநாயக செயல் கட்சி மற்றும் கெராக்கான் கட்சிகளிடம் இடங்களை இழந்தது.
முறைகள்பரவலான கலவரம், கொள்ளை, தாக்குதல், தீ வைப்பு, போராட்டங்கள், சொத்து சேதம், கொலை
முடிவு= யாங் டி பெர்துவான் அகோங் மூலம் தேசிய அவசரக்காலப் பிரகடனம்.
தரப்புகள்
மலேசிய மலாய் மக்கள்; அம்னோ ஆதரவாளர்கள்
மலேசியச் சீன மக்கள்; ஆதரவாளர்கள்
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
25 பேர் கொல்லப்பட்டனர் (அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம், சர்ச்சைக்குரியது)
143 பேர் கொல்லப்பட்டனர் (அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம், சர்ச்சைக்குரியது)

அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 1969 மே 13-இல் இருந்து, 1969 சூலை மாதம் 31 வரையில், ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக 196 பேர் உயிரிழந்தனர். எனினும் பத்திரிகையாளர்களும் பிற பார்வையாளர்களும் அந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

பின்புலம் தொகு

வன்முறையாளர்கள், காவல்துறையினர், மலேசிய இராணுவப் படையினரால் கோலாலம்பூரில் மட்டும் 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கோலாலம்பூர் பொது மருத்துவமனை வளாகத்தில் இறந்தவர்களின் உடல்கள் அவசரம் அவசரமாகப் புதைக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. ஆனால், அந்தத் தகவல் அதிகாரப் பூர்வமானதாக இல்லை.

சதித் திட்டம் தொகு

புதிய பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாகச் செயலாக்கம் செய்ததே வன்முறைகளுக்கான மூல காரணங்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. சொல்லியும் வருகிறது.

ஆனால், அப்போதைய பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமான் அவர்களைப் பதவியில் இருந்து வீழ்த்துவதற்காக அம்னோ மேல்தட்டு வர்க்கத்தினர் உருவாக்கிய சதித் திட்டம் என்றும் பலர் சொல்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=13_மே_இனக்கலவரம்&oldid=3408579" இருந்து மீள்விக்கப்பட்டது