உருக்குன் நெகாரா
ருக்குன் நெகாரா (மலாய்: Rukun Negara; ஆங்கிலம்: Rukun Negara); என்பது மலேசியத் தேசியத் தத்துவத்தின் பிரகடனம் ஆகும். இந்தப் பிரகடனம் ஐந்து கோட்பாடுகளைக் கொண்டது.
1969-ஆம் ஆண்டு நடைபெற்ற 13 மே சம்பவம் என அழைக்கப்படும் இனக் கலவரத்திற்கு எதிர்வினையாக, 1970-ஆம் ஆண்டு மெர்டேகா தினத்தில் அந்தப் பிரகடனம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய இன சமநிலையின் உறுதித் தன்மை பலகீனமாக இருந்தது என்பதை அந்தச் சம்பவம் நிரூபித்துக் காட்டியது.[1]
மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வலுப்பெற வேண்டும்; நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்; அவையே ருக்குன் நெகாராவின் தலையாய நோக்கங்களாகும்.
ருக்குன் நெகாரா உருவாக்கம்
தொகுநாட்டின் 2-ஆவது பிரதமரான அப்துல் ரசாக் உசேன் அவர்களின் எண்ணத்தில் ருக்குன் நெகாரா உருவானது. அப்போது அவர் தேசிய ஆலோசனைக் குழுவின் (மலாய்: Majlis Perundingan Negara; ஆங்கிலம்: National Consultative Council); தலைவராக இருந்தார்.
அதன் பிறகு, 1971-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy 1971-1990) தொடங்கப்பட்டது.
சமூகங்களுக்கு இடையில் சமத்துவம்
தொகுமலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவது; மலேசியாவின் சீனர் சமூகம், இந்தியர்ச் சமூகம் ஆகிய இரு சமூகங்களுக்கும்; மலாய் பூமிபுத்ரா சமூகத்திற்கும் இடையே நிலவிய பொருளாதார இடைவெளியைக் குறைப்பது; பொருளாதாரச் சமத்துவத்தை உருவாக்குவதே அந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கமாகும்.
மலேசியாவின் ருக்குன் நெகாரா கோட்பாடு, அண்டை நாடான இந்தோனேசியாவின் பஞ்ச சீலா (Pancasila) தேசிய சித்தாந்தத்துடன் ஒத்து உள்ளது.[2]
ருக்குன் நெகாரா கோட்பாடுகள்
தொகுதமிழ் மொழியில் ருக்குன் நெகாரா |
ஆங்கில மொழியில் ருக்குன் நெகாரா |
மலாய் மொழியில் ருக்குன் நெகாரா |
---|---|---|
நாங்கள், மலேசியாவில் வாழ்பவர்கள், இந்தக் கொள்கைகளால் வழிநடத்தப்படும் இலக்குகளை அடைவதற்கு எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறோம்:
|
WE, residents of Malaysia, pledge our united efforts to attain these ends guided by these principles:
|
MAKA KAMI, rakyat Malaysia, berikrar akan menumpukan seluruh tenaga dan usaha kami untuk mencapai cita-cita tersebut berdasarkan atas prinsip-prinsip yang berikut:
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Jeong, Chun Hai, 1973- (2007). Principles of public administration : an introduction. Nor Fadzlina Nawi. Shah Alam, Selangor: Karisma Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-195-253-5. இணையக் கணினி நூலக மைய எண் 298421717.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Rukun Negara and Pancasila: The parallels". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
{{cite web}}
: CS1 maint: url-status (link)