ஜனநாயக செயல் கட்சி

ஜனநாயக செயல் கட்சி அல்லது ஜசெக (ஆங்கிலம்: Democratic Action Party (DAP); மலாய்: Parti Tindakan Demokratik; சீனம்: 民主行动党) என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[1] 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2]

ஜனநாயக செயல் கட்சி
டி.ஏ.பி
Democratic Action Party
民主行动党
நிறுவனர்தேவன் நாயர்
ஆலோசகர்
பொதுச் செயலாளர்
லிம் கிட் சியாங்
லிம் குவான் எங்
துணை பொதுச் செயலாளர்கள்இராமசாமி பழனிச்சாமி
சொங் எங்
ஙா கூ ஹாம்
தற்காலிகத் தேசிய தலைவர்டான் கோக் வேய்
தேசிய உதவித் தலைவர்கள்எம். குலசேகரன்
சொங் சிஏங் ஜென்
சோவ் கோன் யாவ்
அரிபின் ஒமர்
தொடக்கம்1965
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
செய்தி ஏடுராக்கெட்
இளைஞர் அமைப்புசோசலிச இளைஞர்
கொள்கைசோசலிச ஜனநாயகம்
அரசியல் நிலைப்பாடுஇடது-மையம்
தேசியக் கூட்டணிமக்கள் யோசனை (1989–1996)
மாற்று பாரிசான் (1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2008–2015)
பாக்காத்தான் ஹரப்பான் (2015–present)
நிறங்கள்வெள்ளை, சிவப்பு, நீலம்
மக்களவை தொகுதிகள்
42 / 222
சட்டமன்ற தொகுதிகள்
89 / 607
மேலவை2
மாநில முதல்வர்1
இணையதளம்
dapmalaysia.org

அண்மைய தேர்தல்களில் ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, இந்த பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடும் சவால்களைக் கொடுத்து வருகின்றது. மலேசியர்களுக்கு மலேசியா எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று இந்தக் கட்சி போராடி வருகின்றது.[3] இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன.

ஜனநாயக செயல் கட்சியின் தமிழ்த் தலைவர்கள் தொகு

இராமசாமி பழனிச்சாமி தொகு

பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுயிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில், அவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னைத் தோற்கடித்தார்.[4] பேராசிரியர் இராமசாமி, தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[5]

சிவகுமார் வரதராஜன் தொகு

வி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட், இவரை பேராக் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராக்கியது.

மலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத்தின் சபாநாயகர் பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும். தற்சமயம் கட்சியின் அனைத்துலகச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[6]

எம். குலசேகரன் தொகு

எம். குலசேகரன் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ,ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார்.[7]

கஸ்தூரி பட்டு தொகு

2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த முதல் தமிழ்பெண் ஆவார்.[8]

காணொளிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. DAP Website: About Us: The Party. Retrieved 12 Feb. 2008.
  2. "Pakatan Harapan is new opposition pact, supports Anwar for PM - The Malaysian Insider". Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  3. The vision of the party is to establish a peaceful and prosperous social democracy that can unite its disparate races and diverse religions and cultures. பரணிடப்பட்டது 2015-01-10 at the வந்தவழி இயந்திரம் Retrieved 12 Jan. 2015.
  4. Known to many in the state as “Prof”, DAP deputy secretary-general Ramasamy Palanisamy achieved what was thought the unthinkable in the 2008 general election. He stood in the parliamentary seat of Batu Kawan against then chief minister of Penang Tan Sri Dr Koh Tsu Koon, who had helmed the state for 18 years, and won by a majority of 9,485. பரணிடப்பட்டது 2015-01-10 at the வந்தவழி இயந்திரம் Retrieved 12 Jan. 2015.
  5. Prof. P. Ramasamy, Deputy Secretary-General. பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் Retrieved 12 Jan. 2015.
  6. The 2009 Perak constitutional crisis was a political dispute in Malaysia regarding the legitimacy of the Perak state government formed in February 2009.
  7. M. Kula Segaran, Vice Chairman. பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் Retrieved 12 Jan. 2015.
  8. Kasthuriraani a/p Patto Pusat Khidmat Rakyat Parlimen Batu Kawan பரணிடப்பட்டது 2015-01-12 at the வந்தவழி இயந்திரம் Retrieved 12 Jan. 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாயக_செயல்_கட்சி&oldid=3610730" இலிருந்து மீள்விக்கப்பட்டது