லிம் குவான் எங்

மலேசிய அரசியல்வாதி

லிம் குவான் எங் (ஆங்கிலம்: Lim Guan Eng, பிறப்பு: டிசம்பர் 8, 1960) பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்போதைய பொதுச் செயலாளர் ஆவார். இவர் பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பினாங்குத் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன முதலமைச்சர்.

லிம் குவான் எங்
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்
பின்னவர்சாவ் கொன் யாவ்
தொகுதிதண்ணீர் மலை
நாடாளுமன்ற உறுப்பினர்
பட்டர்வொர்த்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 8, 2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புchildren
8 திசம்பர் 1960 (1960-12-08) (அகவை 64)
ஜொகூர் பாரு , ஜொகூர் , மலேசியா
இறப்புchildren
இளைப்பாறுமிடம்children
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி பொதுச் செயலாளர்
உறவுகள்லிம் கிட் சியாங்
பெற்றோர்
  • children
வேலைசட்டப் பேரவை உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர்
இணையத்தளம்limguaneng.com
cm.penang.gov.my

அரசியல் வாழ்க்கை

தொகு

அரசியலுக்கு வரும்முன் , லிம் ஒரு வங்கியில் கணக்காளராக இருந்தார்[1]. 1986 ஆம் ஆண்டு கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 1987 இல், அவர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் ஏப்ரல் 1989 இல், 12 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்[2] . பின்னர் 1990 மற்றும் 1995 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் கோட்டா மலாக்காவில் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆனார். அவர் மலாக்கா உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவரும் ஆவார். லிம், 1989 ஆம் ஆண்டு ஜனநாயக செயல் கட்சி இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில், அவர் கட்சித் துணை பொதுச் செயலாளர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2004 ல் கட்சி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பினாங்கு முதலமைச்சர்

தொகு

2008 மலேசிய பொதுத் தேர்தலில், பாக்காத்தான் ராக்யாட்ட்டின் ஜனநாயக செயல் கட்சி 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சி 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சி 1 இடமும் வென்றன[3]. ஜனநாயக செயல் கட்சி பெரிய வெற்றி பெற்று லிம் பினாங்கு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழரைத் துணை முதல்வர் ஆக்கியது

தொகு

பொறுப்பேற்ற முதல்வர் லிம், பினாங்குத் துணை முதல்வராக பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமியை நியமித்தார். மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் துணை முதல்வர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lim Guan Eng's Biodata".
  2. "Guan Eng calls for apology on Ops Lalang anniversary - See more at: http://blog.limkitsiang.com/2012/10/28/guan-eng-calls-for-apology-on-ops-lalang-anniversary/#sthash.N8zVTHFh.dpuf". {{cite web}}: External link in |title= (help)
  3. "Penang State Assembly Election Result". Archived from the original on 2008-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிம்_குவான்_எங்&oldid=3947474" இலிருந்து மீள்விக்கப்பட்டது