பட்டர்வொர்த்
பட்டர்வொர்த் என்பது (மலாய்: Butterworth; ஆங்கிலம்: Butterworth; சீனம்: 北海) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். தவிர இது ஒரு மிகப்பெரிய நகர்ப்புறக் குடியேற்றப் பகுதியாகும். மலேசியாவிலும் பினாங்கு மாநிலத்திலும் பழைமையான நகரங்களில் பட்டர்வொர்த் நகரமும் ஒன்றாகும்.
பட்டர்வொர்த் | |
---|---|
Butterworth | |
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°23′39″N 100°21′59″E / 5.39417°N 100.36639°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம் |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2021[1]) | |
• மொத்தம் | 1,07,591 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 120xx to 134xx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6043 (தரைவழித் தொடர்பு) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my/ |
பினாங்கு தலைநகரமான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, பட்டர்வொர்த் நகரத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 71,643.[2][3]
வரலாறு
தொகு1850-ஆம் ஆண்டுகளில் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளின் (Straits Settlements) ஆளுநராக இருந்த வில்லியம் ஜான் பட்டர்வொர்த் (William John Butterworth) என்பவரின் பெயரில் பட்டர்வொர்த் நகரத்திற்கும் பெயரிடப்பட்டது.[4]
தைப்பிங் நகரில் இருந்து ஈயம் கொண்டு வருவதற்காக 1900-ஆம் ஆண்டுகளில் பட்டர்வொர்த் நகரில் ஓர் இ ரயில் நிலையம் கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் இப்போதும் செயல்படுகிறது.
1957-ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1960-களில் பட்டர்வொர்த் நகரத்தை ஒரு தொழில்பேட்டை நகரமாக மாற்றுவதற்கு பினாங்கு மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டது.
மாக் மண்டின் தொழில்பேட்டை
தொகுஅந்த வகையில் பினாங்கின் முதல் தொழில்பேட்டையாக மாக் மண்டின் தொழில்பேட்டை அமைக்கப்பட்டது.[5] 1953-ஆம் ஆண்டில், பட்டர்வொர்த் நகரம் ஒரு நகராட்சி மன்றமாகத் தகுதி உயர்த்தப்பட்டது. பின்னர் 1976-ஆம் ஆண்டில் செபாராங் பிறை நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.[5]
மலேசியாவின் விமானப்படை தலைமையகம் பட்டர்வொர்த் நகரத்தில் தான் அமைந்து உள்ளது. தவிர பினாங்கு சென்டிரல் எனும் ஒருங்கிணைந்த இரயில், படகு, பேருந்து போக்குவரத்து மையமும் இங்குதான் உருவாக்கப்பட்டு உள்ளது.
பிறை ஆற்றுப் பாலம்
தொகுவட செபராங் பிறை மாவட்டத்தின் தெற்கில் பிறை ஆறு; மேற்கில் பினாங்கு நீரிணை; இவற்றுக்கு இடையில் பட்டர்வொர்த் நகரம் அமைந்துள்ளது. பிறை ஆறு பட்டர்வொர்த்திற்கும்; அருகில் இருக்கும் செபராங் பிறை நகரத்திற்கும்; இடையில் ஓர் இயற்கையான எல்லையை உருவாக்குகிறது. பிறை ஆற்றுப் பாலம் வழியாக இரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
பட்டர்வொர்த் நகருக்குள் பாகான் ஆஜாம்; பாகான் டாலாம்; பாகான் ஜெர்மால்; பாகான் லூவார்; தெலுக் ஆயர் தாவார் போன்ற நகர்ப் புறங்களும் உள்ளன.[6]
மக்கள் தொகை
தொகுமலேசியாவின் புள்ளிவிவரத் துறையின் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பட்டர்வொர்த்தின் மக்கள் தொகை 71,643 ஆகும். இது செபராங் பிறை மக்கள் தொகையில் 9% விழுக்காட்டுக்குச் சமம்.[1] இதன் வழி செபராங் பிறை நகராட்சியில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் பட்டர்வொர்த் நகரம் மிகப்பெரிய நகரமாக அமைகின்றது.
பட்டர்வொர்த்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சீனர்கள். அடுத்த பெரும்பான்மையினர் மலாய்க்காரர்கள். குறிப்பிடத்தக்க அளவில் இந்தியர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
தொகுபினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கருதப் படுகிறது. இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள்; ஒரு நவீன சிற்றுண்டிச்சாலை; குளிர்சாதன வசதி கொண்ட நூல்நிலையம்; ஒரு மாநாட்டு அறை; ஒரு மருத்துவச் சிகிச்சை அறை; போன்ற வசதிகளுடன் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.[7]
இந்தத் தமிழ்ப்பள்ளி பட்டர்வொர்த் நகரில் அமைந்து உள்ளது. கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி, இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி என்று இருந்த இரு தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளியாக உருவானது.
பட்டர்வொர்த் நகரில் இருக்கும் மாக் மண்டின் தொழில்பேட்டையில் இந்தப் பள்ளி அமைந்து இருப்பதால் அந்தப் பெயரிலேயே மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப் படுகின்றது. இந்தப் பள்ளியில் 1010 மாணவர்கள் பயில்கிறார்கள். 48 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
முக்கிய இடங்கள்
தொகுசெபாராங் பிறை நகராட்சி திடல்
தொகுநகரம் மையத்தில் இந்த திடலில் தேசிய தின அணிவகுப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
பெர்சே கடற்கரை
தொகுஉள்ளூர் மக்களால் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது .
பினாங்கு பறவைகள் பூங்கா
தொகுமலேசியாவில் மிகப் பெரிய பறவை பூங்காக்களில் ஒன்றாகும். 1988-ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டது. பினாங்கு மாநிலத்தின் பிரதான பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைந்து உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்; மீன்கள்; உடும்புகள் பாதுகாப்பாக பராமரிக்கப் படுகின்றன. பறவை இனங்களில் 150-க்கும் மேற்பட்டவை மலேசிய இனத்தைச் சேர்ந்தவை.[8]
டாவ் பூ காங் கோவில்
தொகுஒரு பெரிய தாவோயிஸ்ட் கோவில்
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Key Summary Statistics For Local Authority Areas, Malaysia 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
- ↑ "Background". spu.penang.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-02-06.
- ↑ "Population of Butterworth, Malaysia". Mongabay. Archived from the original on 2010-05-06. பார்க்கப்பட்ட நாள் 2010-09-23.
- ↑ "About Butterworth". Penang Travel Tips. பார்க்கப்பட்ட நாள் 2010-09-24.
- ↑ 5.0 5.1 "Butterworth remains the Ugly Duckling". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.
- ↑ "Pelan Blok Perancangan RTD Seberang Perai Utara. Jabatan Perancang Bandar dan Desa Negeri Pulau Pinang". Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ பினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கருதப் படுகிறது.
- ↑ The first & largest bird park of its kind in Malaysia, established since 1988, the 5-acre park on the mainland portion of Penang State, has a collection of more than 300 species of birds from all over the world, of which more than 150 species are of Malaysian Species.