பினாங்கு நீரிணை

மலேசிய நீரிணைகளில் ஒன்றாகும்.

பினாங்கு நீரிணை (ஆங்கிலம்: Penang Strait அல்லது Straits of Penang; மலாய் மொழி: Selat Pulau Pinang; சீனம்: 槟威海峡; தாய் மொழி: ช่องแคบปีนัง; ஜாவி: مضيق بينانج) என்பது தீபகற்ப மலேசியாவையும், பினாங்கு தீவையும் இணைக்கும் நீரிணை ஆகும். இந்த நீரிணை 11 கி.மீ. அகலம் கொண்டது.[1]

பினாங்கு நீரிணை
Penang Strait
பினாங்கு நீரிணை is located in மலேசியா
பினாங்கு நீரிணை
பினாங்கு நீரிணை
அமைவிடம்பினாங்கு
ஆள்கூறுகள்5°20′14″N 100°21′00″E / 5.3371°N 100.35°E / 5.3371; 100.35
Part ofமலாக்கா நீரிணை
முதன்மை வரத்துபினாங்கு தீவு:

செபராங் பிறை:

வடிநில நாடுகள்மலேசியா
அதிகபட்ச அகலம்3 km (1.9 mi) - 11.265 km (7.000 mi)
Islandsதீவுகள்
அமான் தீவு, கெடோங் தீவு, செரஜாக் தீவு
குடியேற்றங்கள்குடியிருப்புகள்
பினாங்கு தீவு:

செபராங் பிறை:

இந்த நீரிணையின் மேற்கில் பினாங்கு தீவு உள்ளது. அதே சமயத்தில் பினாங்கு மாநிலத்தின் பிரதான நிலப் பகுதியான செபராங் பிறை, இந்த நீரிணையின் கிழக்கில் உள்ளது. நீரிணையின் வடக்கு முனையும் தெற்கு முனையும் மலாக்கா நீரிணையில் இணைகின்றன. மலாக்கா நீரிணை உலகின் பரபரப்பான கடல் வழித் தடங்களில் ஒன்றாகும்.

பொது தொகு

பினாங்கு நீரிணை, தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பினாங்குத் துறைமுகத்திற்கு (Port of Penang) ஆழ்கடல் வழியை வழங்குகிறது. பினாங்குத் துறைமுகம், செபராங் பிறையில் உள்ள பட்டர்வொர்த்தில் அமைந்துள்ளது. பினாங்குத் துறைமுகம், முதலில் துறைமுக நகரமான ஜார்ஜ் டவுனில் அமைந்து இருந்தது.

1969-ஆம் ஆண்டில், பினாங்கு துறைமுகத்தின் இலவசத் துறைமுகத் தகுதியை, மலேசிய நடுவண் அரசாங்கம் ரத்து செய்தது.[2][3] 1974-ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுகம், பட்டர்வொர்த்திற்கு மாற்றப்பட்டது.

1786-ஆம் ஆண்டில் பினாங்கு நிறுவப் பட்டதில் இருந்து, பினாங்கு நீரிணை ஒரு பரபரப்பான கப்பல் பாதையாக இருந்து வருகிறது.[4][5]

நிலவியல் தொகு

பினாங்கு நீரிணை, பினாங்குத் தீவை தீபகற்ப மலேசியாவில் இருந்து கிழக்கே பிரிக்கின்றது. பின்னர் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் மலாக்கா நீரிணையுடன் இணைகின்றது. பினாங்கு நீரிணையை வடக்கு கால்வாய் என்றும் தெற்கு கால்வாய் என்றும் பிரிக்கலாம்.

வடக்கு கால்வாய் என்பது ஜார்ஜ் டவுன் அமைந்துள்ள வடகிழக்கு முகத்துவாரத்தின் நீர்நிலையைக் குறிக்கிறது. தெற்கு கால்வாய் அந்த முகடுக்குத் தெற்கே உள்ள நீர்நிலையை உள்ளடக்கியது.

பினாங்கு நீரிணையில் பாயும் ஆறுகள் தொகு

 
பினாங்கு நீரிணையில் கெடோங் தீவு; அமான் தீவு

பினாங்கு நீரிணையில் பாயும் ஆறுகள்:

பினாங்கு தீவு:

செபராங் பிறை:

வரலாறு தொகு

 
 
எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பல்

1786-ஆம் ஆண்டு ஜார்ஜ் டவுன் நகரம் நிறுவப்பட்டதில் இருந்து, பினாங்கு மாநிலத்திற்கு ஒரு முக்கியமான கப்பல் வழித்தடமாகப் பினாங்கு நீரிணை விளங்கி உள்ளது. 1974-ஆம் ஆண்டில், பினாங்கு துறைமுகத்தின் சரக்கு வசதிகள் பட்டர்வொர்த்துக்கு மாற்றப் பட்டன.[6][7]

இப்பொழுது, சரக்கு மற்றும் கொள்கலன் கப்பல் போக்குவரத்து பட்டர்வொர்த்தில் கையாளப்படுகிறது, அதே நேரத்தில் ஜார்ஜ் டவுனில் உள்ள பழைய துறைமுகம் இன்று வரை பயணக் கப்பல்களைப் பெற்று வருகிறது.[8] 2015-ஆம் ஆண்டில் மட்டும், 145 உல்லாசக் கப்பல்களின் வருகைகளைப் பதிவு செய்து உள்ளது.[5][9]

எம்டன் கப்பல் தொகு

முதலாம் உலகப் போரின் போது, 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி, பினாங்குப் போரின் (Battle of Penang) தொடக்க நிலை நிகழ்வுகள் பினாங்கு நீரிணையில் தான் நிகழ்ந்தன. ஜெர்மன் நாட்டுக் கடற்படைக் கப்பலான எஸ்.எம்.எஸ். எம்டன் (SMS Emden); ரஷ்யக் கடற்படைக் கப்பல் செம்சுக் (Imperial Russian Navy cruiser, Zhemchug) மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.

எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜெர்மனியக் கடற்படைக்காக, 1908-ஆம் ஆண்டில் போலந்து நாட்டில் கட்டப்பட்ட ஒரு போர்க் கப்பல் ஆகும். பின்னர், எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பல், வடமேற்கில் மலாக்கா நீரிணையை நோக்கி பயணித்து, வழியில் மற்றொரு பிரெஞ்சு நாட்டுக் போர்க் கப்பலையும் மூழ்கடித்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், பினாங்கு நீரிணையிலும் நேச நாட்டுப் படைகளின் போர்த் தாக்குதல்கள் நடந்து உள்ளன.[10]

மேற்கோள்கள் தொகு

  1. Ebook Sailing guide: Strait of Malacca (East). Sea-Seek. 2016. 
  2. Nordin, Hussin (1 December 2005). "Networks of Malay Merchants and the Rise of Penang as a Regional Trading Centre". Southeast Asian Studies 43 (3): 215–237. பன்னாட்டுத் தர தொடர் எண்:0563-8682. http://ci.nii.ac.jp/naid/110004067699/en. 
  3. Lewis, Su Lin (2016). Cities in Motion: Urban Life and Cosmopolitanism in Southeast Asia, 1920–1940. United Kingdom: Cambridge University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107108332. https://archive.org/details/citiesinmotionur0000lewi. 
  4. "The Changing Harbour Front" (in en-US). Penang Monthly. 2016-07-01. Archived from the original on 2017-02-20. https://web.archive.org/web/20170220012243/http://penangmonthly.com/the-changing-harbour-front/. 
  5. 5.0 5.1 "Is Penang's tourism on the right track?" (in en-US). Penang Monthly. 2015-10-01. Archived from the original on 2016-10-26. https://web.archive.org/web/20161026232636/http://penangmonthly.com/is-penangs-tourism-on-the-right-track/. 
  6. "Where the Sea Meets the City is Where the World Meets Penang". Penang Monthly. 2016-07-01. Archived from the original on 2017-02-20. https://web.archive.org/web/20170220013539/http://penangmonthly.com/where-the-sea-meets-the-city-is-where-the-world-meets-penang/. 
  7. "Container Services". http://penangport.com.my/Services/Container-Services. 
  8. "Penang records country’s second-most cruise arrivals last year". 2016-06-07. http://www.themalaymailonline.com/malaysia/article/penang-records-countrys-second-most-cruise-arrivals-last-year. 
  9. "Penang ready for 17,000 cruise ship passengers". http://www.thesundaily.my/news/2129453. 
  10. Paul H. Kratoska (1998). The Japanese Occupation of Malaya: A Social and Economic History. C. Hurst & Co. Publishers. பக். 296–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-284-7. https://books.google.com/books?id=bePxcx7BFLEC&pg=PA296. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_நீரிணை&oldid=3627567" இருந்து மீள்விக்கப்பட்டது