செபராங் பிறை
செபராங் பிறை; (மலாய்: Bandaraya Seberang Perai; ஆங்கிலம்: City of Seberang Perai; சீனம்: 威省; ஜாவி: سبرڠ ڤراي) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம். பினாங்கு தீவுக்கு எதிரே அக்கரையில் அமைந்துள்ளது. இந்த மாநகரத்திற்கு வடக்கு - கிழக்கு திசைகளில் கெடா மாநிலம்; தெற்கில் பேராக் மாநிலம்; எல்லைகளாகக் கொண்டு உள்ளன.
செபராங் பிறை அக்கரை | |
---|---|
மாநகரம் | |
City of Seberang Perai Bandaraya Seberang Perai | |
![]() | |
![]() செபராங் பிறை (சிவப்பு) மலேசியத் தீபகற்பம் | |
ஆள்கூறுகள்: 5°24′N 100°28′E / 5.400°N 100.467°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
பிரித்தானியப் பேரரசு | 17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957 |
சப்பானியப் பேரரசு | 19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945 |
மலேசியா | 31 ஆகஸ்ட் 1957 |
மாநகரம் | 16 செப்டம்பர் 2019 |
செபராங் பிறை நகராட்சி | 1976 |
தலைநகரம் | பட்டர்வொர்த் |
அரசு | |
• செபராங் பிறை நகராட்சி மேயர் | ரொசாலி முகமட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 751 km2 (290 sq mi) |
மக்கள்தொகை (ஜுலை 2018) | |
• மொத்தம் | 946,200 |
• அடர்த்தி | 1,089.5/km2 (2,822/sq mi) |
அஞ்சல் குறியீடு | 12xxx to 14xxx |
இணையதளம் | http://mpsp.gov.my/ |

இந்த மாநகரத்தின் நகர மையம் பட்டர்வொர்த். இதன் உள்ளூர் நிர்வாகத்திற்குப் புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள செபராங் பிறை நகர சபை பொறுப்பு வகிக்கிறது. முன்பு செபாராங் பிறை ஒரு மாவட்டமாக இருந்தது. ஆனால் 2019 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி செபராங் பிறைக்கு மாநகரம் என தகுதி உயர்த்தப்பட்டது.
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, செபராங் பிறை மக்கள் தொகை 946,200 ஆக இருந்தது. அந்த வகையில் மலேசியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமாகவும் மாறியது.[1][2]
செபராங் பிறை நிலப்பகுதி தொகு
மலாயாவின் 1957-ஆம் ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பின்னர், பல பத்தாண்டுகளாக செபராங் பிறை நிலப்பகுதி, கணிசமான அளவிற்குப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது.[3]
செபராங் பிறையில் பாரிய தொழில்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1974-ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுகத்தின் முக்கிய நடவடிக்கைகளை பட்டர்வொர்த்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனால் செபராங் பிறை நகரத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.[4]
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பினாங்கு பாலம்; மற்றும் பினாங்கு இரண்டாவது பாலம் போன்ற பல முக்கிய திட்டங்களால் செபராங் பிறையின் இணைப்புகளும்; போக்குவரத்துகளின் கட்டமைப்புகளும் எளிதாக்கப்பட்டு உள்ளன. அதனால் இன்று, மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான பினாங்கின் ஒரு பகுதியாகச் சிறப்பு பெறுகிறது.[5]
சொல் பிறப்பியல் தொகு
இன்றைய செபராங் பிறை மாநகரத்தைக் கொண்ட நிலப்பகுதி, முன்னர் காலத்தில் கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1800-ஆம் ஆண்டில் அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரிட்டிஷ்காரர்கள் அந்த நிலப்பகுதியை வெல்லஸ்லி மாநிலம் (Province Wellesley) என்று பெயரிட்டனர். 1867-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் முடியாட்சியின் காலனியாக மாற்றப்பட்டது.
1797-ஆம் ஆண்டில் இருந்து 1805-ஆம் ஆண்டு வரை ரிச்சர்ட் வெல்லஸ்லி (Richard Wellesley) என்பவர் மெட்ராஸ் மாநில ஆளுநராகவும்; வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாகவும் பணியாற்றியவர். அவரின் நினைவாக, செபராங் பிறைக்கு புரோவின்ஸ் வெல்லஸ்லி என்று பெயரிடப்பட்டது. செபராங் பிறையின் பழைய பெயர் புரோவின்ஸ் வெல்லஸ்லி.[6][7]
பட தொகுப்பு தொகு
-
பட்டர்வொர்த் படகு துறை
-
பட்டர்வொர்த் ரயில் நிலையம்
மேலும் பார்க்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. 34 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708202650/http://www.statistics.gov.my/ccount12/click.php?id=2127. பார்த்த நாள்: 29 May 2021.
- ↑ "Key summary statistics for Local Authority areas, Malaysia, 2010". Department of Statistics, Malaysia இம் மூலத்தில் இருந்து 27 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150205090002/http://www.statistics.gov.my/portal/download_Population/files/population/03ringkasan_kawasan_PBT_Jadual1.pdf. பார்த்த நாள்: 29 Dec 2017.
- ↑ Seberang Prai has come a long way from a sleepy cowboy town, it comes across a bustling and developing giant. Many major developments are now focused in Seberang Prai which has been touted as Penang's catalyst for growth in the 21st century.
- ↑ "Seberang Perai’s path to city status began in July 2018 after it fulfilled the criteria of having a population of more than 500,000 and revenue of RM100 million." இம் மூலத்தில் இருந்து 2019-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191206180451/https://www.freemalaysiatoday.com/category/nation/2019/09/16/seberang-perai-becomes-countrys-largest-city/.
- ↑ With a more organized and complete road network, Seberang Perai has the potential to be a growth area and is the future for the state of Penang.
- ↑ Waite, Arthur Edward (2007). A New Encyclopedia of Freemasonry. vol. I. Cosimo, Inc.. பக். 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60206-641-0.
- ↑ "WELLESLEY, Richard Colley, 2nd Earl of Mornington [I (1760-1842), of Dangan Castle, co. Meath."]. History of Parliament. http://www.historyofparliamentonline.org/volume/1790-1820/member/wellesley-richard-colley-1760-1842.