பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்


பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Butterworth Railway Station மலாய்: Stesen Keretapi Butterworth); சீனம்: 北海火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டம், பட்டர்வொர்த் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பட்டர்வொர்த் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.

பட்டர்வொர்த்
Butterworth
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் இடிஎஸ் கேடிஎம் கொமுட்டர்
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பட்டர்வொர்த், பினாங்கு
ஆள்கூறுகள்5°23′36″N 100°21′59″E / 5.393333°N 100.366389°E / 5.393333; 100.366389
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் 1   மலாயா மேற்கு கடற்கரை 
 ETS  கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள் சுல்தான் அப்துல் அலீம் படகுத்துறை முனையம்
alt text பினாங்கு சென்ட்ரல்
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது14 செப்டம்பர்1967
மறுநிர்மாணம்2011
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   பட்டர்வொர்த்   அடுத்த நிலையம்

(தொடக்கம்)
    புக்கிட் தெங்கா
புக்கிட் தெங்கா
   
(தொடக்கம்)

<<< பாடாங் பெசார்
 

  Express  
  புக்கிட் தெங்கா >>> கோலாலம்பூர் சென்ட்ரல்

(தொடக்கம்)
 

  Platinum  
  புக்கிட் மெர்தாஜாம் >>> கோலாலம்பூர் சென்ட்ரல்

(தொடக்கம்)
 
  Gold  
  புக்கிட் மெர்தாஜாம் >>> கிம்மாஸ்
அமைவிடம்
Map
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் இந்த நிலையம் உள்ளது.

பொது

தொகு

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தாசேக் குளுகோர் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.

இதற்கு முன்பு தாய்லாந்து, பாங்காக், பன்னாட்டு விரைவு தொடருந்து (International Express) சேவையின் தெற்கு முனையமாகச் செயல்பட்டது. இந்தச் சேவை இப்போது பாடாங் பெசார் நிலையத்தில் முடிவடைகிறது.[1]

சுல்தான் அப்துல் அமீத் படகுத் துறை

தொகு

பினாங்கு சென்ட்ரல் மற்றும் சுல்தான் அப்துல் அலீம் படகுத்துறை ஆகிய மையங்களுக்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் பினாங்கு தீவுக்குச் செல்வதற்கான படகுகளுக்கும்; பேருந்துகளுக்கும் அங்கு பாதசாரிகள் நடைபாதைகளும் உள்ளன.[2]

இந்த நிலையம் மலேசியக் கூட்டரசு சாலை 1 வழியாக பட்டர்வொர்த் நகரத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் செபராங் பிறை, பட்டர்வொர்த், செபராங் ஜெயா, பிறை மற்றும் பினாங்கு தீவுக்கு சேவை செய்யும் ஒரு முக்கியமான நிலையமாகவும் கருதப்படுகிறது.[3]

ரேபிட் பினாங்கு

தொகு

பட்டர்வொர்த் நகரத்தில் இருந்து பினாங்கு தீவுக்குச் செல்லவும்; பினாங்கு தீவில் இருந்து பட்டர்வொர்த் வருவதற்கும்; ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பெரி படகு சேவைகள் உள்ளன. 2021-ஆண்டு முதல் பாதசாரிகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது.[4]

பட்டர்வொர்த் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பினாங்கு சென்ட்ரல் பேருந்து முனையம் உள்ளது. அங்கு இருந்து ரேபிட் பினாங்கு மூலமாக பினாங்கு தீவிற்குச் செல்லலாம்.[5]

தொடருந்து சேவைகள்

தொகு

மலாயா தொடருந்து நிறுவனத்தின் கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் வழங்கும் தொடருந்து சேவைகள்:

முன்னாள் சேவைகள்

தொகு

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "NO MORE BUTTERWORTH-BANGKOK INTERNATIONAL EXPRESS 36; NOW PADANG BESAR-BANGKOK TRAIN 46". April 15, 2017. Archived from the original on நவம்பர் 8, 2022. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 19, 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "The Butterworth Railway Station is located along Jalan Bagan Dalam in Butterworth about 100 meters from Pengkalan Sultan Abdul Halim, the ferry terminal. As of February 2017, the temporary transport terminal for Penang Sentral is sited next to the railway station. Passenger rail services to Penang began in July 1899, when the railway line was extended from Bukit Mertajam to Perai". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
  3. Derrick Vinesh (23 August 2011). "End of the line for train stop". The Star (Kuala Lumpur) இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170315001218/http://www.thestar.com.my/story/?file=%2f2011%2f8%2f23%2fnorth%2f9348511&sec=North. பார்த்த நாள்: 13 August 2015. 
  4. "The nearby Penang Sentral terminal building now accommodates the bus terminal (local and long-distance) and ferry terminal for boats over to Penang Island (Georgetown)". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
  5. "Butterworth Railway Station is the closest train station to Penang Island. From Butterworth Railway Station passengers can travel to George Town on the car ferry or to other destinations in Penang via two bridges connecting the island to the mainland". 10 July 2018. பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு