கேடிஎம் இடிஎஸ்

மலாயா மின்சார தொடருந்து சேவை அல்லது கேடிஎம் இடிஎஸ் அல்லது இடிஎஸ், (மலாய்: Perkhidmatan Tren Elektrik KTM ஆங்கிலம்: KTM Electric Train Service); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் மலேசியப் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தினால் இந்தச் சேவை நடத்தப்படுகிறது.[2]


மலாயா மின்சார தொடருந்து சேவை
KTM ETS
KTM Electric Train Service

கம்பார் நிலையத்தில் KTM Class 93 அதிவிரைவு தொடருந்து
கம்பார் நிலையத்தில்
KTM Class 93 அதிவிரைவு தொடருந்து
பொது தகவல்
உரிமையாளர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTMB)
முக்கிய இடங்கள்பாடாங் பெசார் - பட்டர்வொர்த் - ஈப்போ - கோலாலம்பூர் - கிம்மாஸ் - (ஜொகூர் பாரு 2025-இன் மத்தியில்)
பயண வகை இண்டர்சிட்டி அதிவிரைவு தொடருந்து
தடங்களின் எண்ணிக்கை2
நிறுத்தங்கள்36 (15 சனவரி 2022)[1]
தினசரி பயணிகள்11,361 (2018)
ஆண்டு பயணிகள்4.147 மில்லியன் (2019)[1]
( 16.3%)
இணையதளம்www.ktmb.com.my/ETS.html
செயற்பாடு
தொடக்கம்12 ஆகத்து 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-08-12)
நடத்துநர்(கள்)KTM இன்டர்சிட்டி பிரிவு
பயன்பாட்டு வண்டிகள்
  • ஆறு பெட்டிகள் கொண்ட 5 KTM Class 91 வண்டிகள்
  • ஆறு பெட்டிகள் கொண்ட 19 KTM Class 93 வண்டிகள்
தொழிநுட்பத் தரவுகள்
திட்ட நீளம்தற்போது:
755 km (469 mi) (பாடாங் பெசார்-கிம்மாஸ்)
கட்டுமானத்தில் உள்ளது:
197 km (122 mi) (கிம்மாஸ்-ஜேபி சென்ட்ரல்)
தட அளவி1,000 mm (3ft 3.38in)
மின்வசதி25 kV 50 Hz AC
சராசரி வேகம்140 km/h (87 mph)
அதியுயர் வேகம்160 km/h (99 mph)

இந்த நிறுவனம் பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டாவது மின்சார தொடருந்து சேவையாகும். இதற்கு முன்னர் மலாயா பயணிகள் தொடருந்து (KTM Komuter) சேவை; மற்றும் மலாயா பன்னகர தொடருந்து (KTM Intercity) சேவை; ஆகிய இரு சேவைகள் பயன்பாட்டில் இருந்தன.

பொது

தொகு

மலாயா மின்சார தொடருந்து சேவை, மலேசியாவின் வேகமான தொடருந்து சேவையாகும். தீபகற்ப மலேசியாவில் கிம்மாஸ் மற்றும் பாடாங் பெசார் இடையே மின்மயமாக்கப்பட்ட மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் இரட்டைப் பாதையில் இது செயல்படுகிறது. இதற்கு முன்பு மலாயா பன்னகர தொடருந்து சேவை வழங்கியது.

இந்தச் சேவை தற்போது மலாயா பன்னகர தொடருந்து பிரிவால் இயக்கப் படுகிறது. இது முன்னர் இடிஎஸ் நிறுவனத்தால் (ETS Sendirian Berhad) இயக்கப்பட்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம், அதன் முழு உரிமையாளராக இருந்தது.

தொடருந்து சேவைகள்

தொகு
 
கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளின் வழித்தடம்
பாதை சேவை நிலையம் பயணங்கள்
கோலாலம்பூர் நடுவண்ஈப்போ   Gold   4 (கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், சுங்கை பூலோ, ரவாங், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை, தாப்பா ரோட், கம்பார், பத்து காஜா, ஈப்போ) 4 (EG9022-EG9035)
  Silver   14 (கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், கெப்போங், சுங்கை பூலோ, ரவாங், பத்தாங் காலி, கோலாகுபு பாரு, தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை, தாப்பா ரோட், கம்பார், பத்து காஜா, ஈப்போ) 1 (ES9051, ES9052)
கோலாலம்பூர் நடுவண்பாடாங் பெசார்   Platinum   15/16 (கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், சுங்கை பூலோ, தஞ்சோங் மாலிம், கம்பார், பத்து காஜா, ஈப்போ, கோலாகங்சார், தைப்பிங், பாரிட் புந்தார், தாசேக் குளுகோர், சுங்கை பட்டாணி, அலோர் ஸ்டார், ஆராவ், பாடாங் பெசார்) 6-7 (2) (EP9272-EP9279), (9283, 9286)
கோலாலம்பூர் நடுவண்பட்டர்வொர்த்   Platinum   12 (கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், சுங்கை பூலோ, தஞ்சோங் மாலிம், கம்பார், பத்து காஜா, ஈப்போ, கோலாகங்சார், தைப்பிங், பாரிட் புந்தார், புக்கிட் மெர்தாஜாம், பட்டர்வொர்த்) 5 (2) (EP9171-EP9180), (9181, 9184)
பாடாங் பெசார்கிம்மாஸ்   Gold   29 (கிம்மாஸ், பத்தாங் மலாக்கா, புலாவ் செபாங், சிரம்பான், காஜாங், பண்டார் தாசேக் செலாத்தான், கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், சுங்கை பூலோ, ரவாங், தஞ்சோங் மாலிம், தாப்பா ரோட், கம்பார், பத்து காஜா, ஈப்போ, சுங்கை சிப்புட், கோலாகங்சார், பாடாங் ரெங்காஸ், தைப்பிங், பாடாங் செராய், பாரிட் புந்தார், நிபோங் திபால், தாசேக் குளுகோர், சுங்கை பட்டாணி, குரூண், அலோர் ஸ்டார், அனாக் புக்கிட், ஆராவ், பாடாங் பெசார்) 1 (EG9420, EG9425)
பட்டர்வொர்த்கிம்மாஸ்   Gold   24 (கிம்மாஸ், பத்தாங் மலாக்கா, புலாவ் செபாங், சிரம்பான், காஜாங், பண்டார் தாசேக் செலாத்தான், கோலாலம்பூர் நடுவண், கோலாலம்பூர், சுங்கை பூலோ, பத்தாங் காலி, தஞ்சோங் மாலிம், தாப்பா ரோட், கம்பார், பத்து காஜா, ஈப்போ, சுங்கை சிப்புட், கோலாகங்சார், பாடாங் ரெங்காஸ், தைப்பிங், பாடாங் செராய், பாரிட் புந்தார், நிபோங் திபால், புக்கிட் மெர்தாஜாம், பட்டர்வொர்த்) 1 (EG9321, EG9322)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "PERKHIDMATAN ETS" (PDF) (in ஆங்கிலம்). KTMB. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  2. "KTM ETS currently operates along the electrified and double-tracked stretch of the West Coast Line between Gemas and Padang Besar on the Malaysia-Thai border. The ETS train schedule in Malaysia can be categorized into the Gemas – Padang Besar and Padang Besar – Gemas routes". www.ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடிஎம்_இடிஎஸ்&oldid=3877372" இலிருந்து மீள்விக்கப்பட்டது