சிரம்பான் தொடருந்து நிலையம்
சிரம்பான் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Seremban Railway Station; மலாய்: Stesen Keretapi Seremban; சீனம்: 芙蓉火车站) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் மாநகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். சிரம்பான் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், சிரம்பான் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.
KB14 | கொமுட்டர் Seremban Railway Station | |||||||||||||||||||||||||||||||
போருக்கு முந்தைய நிலையக் கட்டிடம் (2022) | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | சிரம்பான் நெகிரி செம்பிலான் மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°43′08″N 101°56′28″E / 2.71889°N 101.941°E | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | பத்துமலை–புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB14 | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | KB14 1910 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 1995-ஆம் ஆண்டில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 2015 முதல், பத்துமலை கொமுட்டர் நிலையம்; புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே செல்லும் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் மூலம் இந்த தொடருந்து நிலையம் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் முன்னாள் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தின் தெற்கு முனையமாகவும் சேவை செய்தது.
வரலாறு
தொகுஇந்த நிலையம் ஒரு காலக்கட்டத்தில் போர்டிக்சன் நகருக்காக்கான கிளைப் பாதையின் முக்கிய நிலையமாக விளங்கியது. 2008-ஆம் ஆண்டில் அந்தக் கிளைப்பாதை மூடப்படுவதற்கு முன்பு அந்த வழித்தடம் தொடருந்துகளுக்கான எரிபொருள் போக்குவரத்திற்குச் சேவை செய்தது.[1]
2022-ஆம் ஆண்டில் அந்த வழித்தடத்தில் இருந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. போர்ட் டிக்சன் கிளைப் பாதைக்கு புத்துயிர் வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன; இருப்பினும் இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.[2]
மலாயா தொடருந்து நிறுவனம்
தொகுமலேசியாவின் மிகப் பழமையான நிலையஙக்ளில் ஒன்றான சிரம்பான் தொடருந்து நிலையம் 1904 - 1910-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் RM 26,000.00 செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையம் நீண்ட காலமாக பற்பல தொடருந்து நிறுவனங்களின் கீழ் சேவை செய்துள்ளது.
1948-ஆம் ஆண்டில், மலாயாவில் இயங்கிய அனைத்து தொடருந்து வழித்தடங்களையும் நிர்வகிக்கும் பொறுப்புகளை மலாயா தொடருந்து நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம் (Malayan Railway); மலாயன் இரயில்வே நிர்வாகம் (Malayan Railway Administration) என அழைக்கப்பட்டது.
இந்த நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் வழியாக கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தது; அத்துடன் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.[3]
ரவாங்-சிரம்பான் வழிதடம்
தொகு6 பிப்ரவரி 1994 முதல் ஏப்ரல் 12, 1994 வரை, ரவாங் தொடங்கி சிரம்பான் வரையிலான கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையைத் தொடங்குவதற்கான திட்டத்தில், இந்த நிலையம் விரிவான மறுவடிவமைப்புகளுக்கு உள்ளானது.
எனினும், 1995-ஆம் ஆண்டில்தான் கேடிஎம் கொமுட்டர் சேவை தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், அந்தச் சேவை சுங்கை காடுட் வரை நீட்டிக்கப்பட்டது. அதுவரை, இந்த நிலையம் ரவாங்-சிரம்பான் வழிதடத்தின் தெற்கு முனையமாக இருந்தது.
2015-ஆம் ஆண்டில், தென் மாநிலங்களுக்கான கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சிரம்பான் நிலையம் மீண்டும் தெற்கு முனையம் ஆனது. ஆகத் தென்கோடியின் தெற்கு முனையமாக கிம்மாஸ் மற்றும் புலாவ் செபாங் - தம்பின் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.[4]
2026-ஆம் ஆண்டில் புதியக் கட்டிடம்
தொகுஇந்த நேரத்தில்தான், முன்பு இருந்த கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளுக்குப் பதிலாக, கேடிஎம் இடிஎஸ் சேவைகள் கிம்மாஸ் வரை நீட்டிக்கப்பட்டன.[5] 19 சனவரி 2024 இல், தற்போதைய சிரம்பான் நிலையத்தில் புதிய நிலையக் கட்டிடத்திற்கான கட்டுமான வேலைகள் தொடங்கின.
புதியக் கட்டிடம் 2026-ஆம் ஆண்டு சனவரி மாததிற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[6]
அமைவிடம்
தொகுசிரம்பான் நிலையக் காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Port Dickson Railway". Great Malaysian Railway Journeys (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
- ↑ "Plans to revive Seremban-PD rail line being studied, says Loke".
- ↑ "Seremban Railway Station". www.malayarailway.com.
- ↑ "KTMB perkenal perkhidmatan komuter baharu dari Seremban ke Gemas". 1 October 2015.
- ↑ "KTM Komuter Southern Sector Shuttle Train: Seremban - Tampin - Gemas (Defunct) • RailTravel Station". 21 October 2015.
- ↑ https://theedgemalaysia.com/node/698004