புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம்

புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Pulau Sebang Tampin Railway Station; மலாய்: Stesen KTMB Pulau Sebang) என்பது மலேசியா, மலாக்கா - நெகிரி செம்பிலான் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும் இதன் வடக்கில் தம்பின்; தெற்கில் புலாவ் செபாங் நகரங்கள் உள்ளன.[1]

புலாவ் செபாங் / தம்பின்
 KB17  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் இடிஎஸ் கேடிஎம் கொமுட்டர்
Seremban Line நகரிடை தொடருந்து | கொமுட்டர்

Pulau Sebang Tampin Station
புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் (2022)
பொது தகவல்கள்
அமைவிடம்புலாவ் செபாங் மலாக்கா  மலேசியா
ஆள்கூறுகள்2°27′45″N 102°13′37″E / 2.462629°N 102.227041°E / 2.462629; 102.227041
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர் மலாயா தொடருந்து
தடங்கள் பத்துமலை–புலாவ் செபாங்
கேடிஎம் இடிஎஸ்
மேற்கு கடற்கரை
நடைமேடை2 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம் கட்டணம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB17 
வரலாறு
திறக்கப்பட்டது1905
மறுநிர்மாணம்1995; 2013
மின்சாரமயம்2013
முந்தைய பெயர்கள்தம்பின் நிலையம்
சேவைகள்
முந்தைய நிலையம்   மலாயா தொடருந்து   அடுத்த நிலையம்
   
ரெம்பாவ்
பத்துமலை
 
 புலாவ் செபாங் 
 
தம்பின்
(முனையம்)
சிரம்பான்
பாடாங் பெசார்
 
  Gold    பாடாங்  பெசார்   கிம்மாஸ் 
 
பத்தாங் மலாக்கா
கிம்மாஸ்
சிரம்பான்
பட்டர்வொர்த்
 
  Gold      பட்டர்வொர்த்   கிம்மாஸ் 
 
பத்தாங் மலாக்கா
கிம்மாஸ்
அமைவிடம்
Map
புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம்

முன்பு இந்த நிலையம் தம்பின் தொடருந்து நிலையம் (Tampin Railway Station) என்று அழைக்கப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை பெரும் வழித்தடத்தின் (KTM West Coast Railway Line), சிரம்பான் துணை வழித்தடத்தில் அமைந்துள்ளது.[2]

பொது

தொகு

நிலவியல் அடிப்படையில் இந்த நிலையம் மலாக்கா மாநிலத்தில் அமைந்துள்ளது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் மலாக்கா மாநிலத்திற்கான இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். மலாக்கா மாநிலத்தில் உள்ள மற்றொரு தொடருந்து நிலையம் பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் ஆகும். பொதுவாக இந்த நிலையம் மலாக்கா மாநிலத்திற்கு கூடுதலாகச் சேவை செய்கிறது.[3]

சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் இடிஎஸ், கேடிஎம் இண்டர்சிட்டி மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் இந்த நிலையம் சேவை செய்யப்படுகிறது. அத்துடன் சிரம்பான் வழித்தடத்தின் தெற்குப் பகுதியின் கடைசி நிலையமும் இதுவே ஆகும்.[4]

பெயர் பிரச்சினை

தொகு

இந்த நிலையம் மலாக்காவின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள புலாவ் செபாங் நகரில் அமைந்துள்ளது. இருப்பினும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் நகருக்கு மிக மிக அருகில் உள்ளது.

இந்த நிலையம் புவியியல் ரீதியாக புலாவ் செபாங்கில் அமைந்து இருந்தாலும், "தம்பின் இரயில் நிலையம்" என்று பெயரிடப்பட்டது. அதனால் சர்ச்சைகள் ஏற்பட்டன. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மக்கள் இந்த நிலையத்தை "தம்பின் இரயில் நிலையம்" என்றும்; மலாக்கா மக்கள் "புலாவ் செபாங் இரயில் நிலையம்" என்றும் அழைத்தனர்.[5]

தம்பின்/புலாவ் செபாங் அறிவிப்புப் பலகை

தொகு

மலாயா தொடருந்து நிறுவனம் அதன் பங்கிற்கு இந்த நிலையத்தின் பெயர் "புலாவ் செபாங்" நிலையம் அல்ல "தம்பின்" நிலையம் என்று உறுதிப்படுத்தியது. நிலையத்தின் நடைமேடைகளில் "தம்பின்/புலாவ் செபாங்" என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதன் பிறகும் பெயர்த் தகராறு தொடர்ந்தது.

இருப்பினும், ஜனவரி 4, 2013-இல், மலாக்கா மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், மலாயா தொடருந்து நிறுவனம் இந்த நிலையத்தின் பெயரை புலாவ் செபாங்/தம்பின் நிலையம் என நிரந்தரமாக மாற்றியது. அதன் மூலம் பெயரிடும் சர்ச்சையும் தீர்க்கப்பட்டது.

வரலாறு

தொகு

1905-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் கட்டுமானம் சிரம்பான் நகரில் இருந்து தம்பின் நகரை அடைந்தபோது இந்த நிலையம் செயல்படத் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 1, 1905-இல், 34 கி.மீ. (21 மைல்) தம்பின் - மலாக்கா பாதை திறக்கப்பட்டது.[6]

ஓர் ஆண்டு கழித்து 1 அக்டோபர் 1906-இல் கிம்மாஸ் பிரதான வழித்தடம் திறக்கப்பட்டது. தம்பின் - மலாக்கா வழித்தடத்தின் தண்டவாளங்கள் பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களால் அகற்றப்பட்டது.

சேவைகள்

தொகு
  • கேடிஎம் இடிஎஸ்
    • ETS Gold Train No. 9420/9425 பாடாங் பெசார் - கிம்மாஸ்
    • ETS Premium Train No. 9204/9371 பட்டர்வொர்த் - கிம்மாஸ்[7]
  கேடிஎம் இடிஎஸ்
சேவைகள் தொடருந்து புறப்படு நேரம் இலக்கு குறிப்பு
கேடிஎம் இடிஎஸ் 9321 14:19 கிம்மாஸ், நெகிரி செம்பிலான்
கேடிஎம் இடிஎஸ் 9322 15:54 பட்டர்வொர்த், பினாங்கு
கேடிஎம் இடிஎஸ் 9420 08:37 பாடாங் பெசார், பெர்லிஸ்
கேடிஎம் இடிஎஸ் 9425 23:39 கிம்மாஸ், நெகிரி செம்பிலான்
  கொமுட்டர்
சேவைகள் தொடருந்து புறப்படு நேரம் இலக்கு குறிப்பு
கொமுட்டர் 2002 04:42 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2602 05:30 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2006 05:37 பத்துமலை, சிலாங்கூர்
கொமுட்டர் 2008 06:05 பத்துமலை, சிலாங்கூர்
கொமுட்டர் 2010 06:42 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2016 07:53 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2028 11:23 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2032 11:31 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2050 16:54 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்
கொமுட்டர் 2058 18:00 பத்துமலை, சிலாங்கூர் வார இறுதி நாட்கள்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Pulau Sebang/Tampin Railway Station is a railway station in Negeri Sembilan. It is located to the south of the Rembau Railway Station. The station is served by the KTM ETS, KTM Komuter Southern Sector and the KTM Intercity trains". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  2. Berhad, Keretapi Tanah Melayu. "KTMB -Book ticket online for ETS Train, Intercity Train and View Train Timetable in Malaysia Map & Routes". www.ktmb.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Pulau Sebang/Tampin Railway Station is the closest railway station to the popular tourist town of Melaka and the reason most tourists travel from or to Pulau Sebang/Tampin Railway Station is because of its proximity to Melaka". 2023 Malaysia Trains. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  4. "Tampin / Pulau Sebang KTM Station – klia2.info". The Tampin / Pulau Sebang KTM station is served by the KTM ETS, KTM Komuter Southern Sector and KTM Intercity services. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  5. "The Station itself is situated in Malaccan territory, being one of the two stations on the West Coast Line that serves the state of Malacca, the other being Batang Melaka". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  6. "We can revive Tampin-Malacca rail service | New Straits Times". 24 July 2015.
  7. "KTM Train Schedule".

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு