பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்

மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் தொடருந்து சேவை
(சிரம்பான் வழித்தடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் அல்லது சிரம்பான் வழித்தடம் (ஆங்கிலம்: Seremban Line அல்லது Batu Caves–Pulau Sebang Line; மலாய்: Laluan Seremban அல்லது Laluan Komuter Seremban) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.

பத்துமலை-புலாவ் செபாங்
Batu Caves–Pulau Sebang Line
KL சென்ட்ரலில் KTM 92 ரக இரயில்
கண்ணோட்டம்
நிலைசெயலில் உள்ளது
உரிமையாளர்மலாயா தொடருந்து நிறுவனம்
வழித்தட எண் (நீலம்)
வட்டாரம்சிலாங்கூர்
கோலாலம்பூர்
நெகிரி செம்பிலான்
மலாக்கா
முனையங்கள்
நிலையங்கள்26 + 3 நிலையங்கள்
இணையதளம்www.ktmb.com.my
சேவை
அமைப்புகேடிஎம் பயணிகள்
KTM Komuter
சேவைகள்பத்துமலை - தம்பின் - புலாவ் செபாங்
பாதை எண்1
செய்குநர்(கள்)மலாயா தொடருந்து நிறுவனம்
பணிமனை(கள்)சிரம்பான்
சுழலிருப்பு37 தொடருந்துகள் (six-car trains)
வரலாறு
திறக்கப்பட்டது14 ஆகத்து 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-08-14)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்135 km (84 mi)
தட அளவி1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
மின்மயமாக்கல்வார்ப்புரு:25 kV 50 Hz
இயக்க வேகம்Up to 120 km/h (75 mph)
வழி வரைபடம்
வார்ப்புரு:Seremban Line
Map
சிரம்பான் தொடருந்து வழித்தடம் (பெரிய அளவிற்கு படத்தைச் சொடுக்கவும்)

இந்த வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.

இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.

15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த வழித்தட அமைப்பு கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்; என நீல நிறத்தில் அடையாளமிடப்பட்டு உள்ளது. அந்த முன்னாள் சிரம்பான் வழித்தடத்திற்கு சிரம்பான் தொடருந்து நிலையத்தின் பெயரிடப்பட்டது.

வரலாறு

தொகு

கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) என்பது 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பயணிகள் இரயில் சேவையாகும். குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பயணிகளுக்குப் பெரிதும் உதவியது.

கோலாலம்பூரில் பணிபுரியும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநகரத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இது ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாக இருந்தது. பெட்டிகள் நவீன மற்றும் குளிரூட்டப் பட்டவை.

சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதை

தொகு

1886-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்தப் பாதை தொடங்கியது. நவீன கால சிரம்பான் பாதையானது 1895-இல் திறக்கப்பட்டது.[1]

கோலாலம்பூர் - கிள்ளான் இரயில் பாதையில் இருந்து சுல்தான் சாலை நிலையம் வழியாக, 1895-இல் சிரம்பானுக்குத் திறக்கப்பட்டது.[2]

1990-களின் முற்பகுதியில் ரவாங் - சிரம்பான் சேவையும்; செந்தூல் - கிள்ளான் துறைமுகச் சேவையும் மின்மயமாக்கப் பட்டன.

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

தொகு

நிலையங்கள்

தொகு

பத்துமலை - சிரம்பான் - தம்பின் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையில் எந்தெந்த நிலையங்களில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்துகள் நின்று செல்கின்றன எனும் விவரங்கள்:

நிலையக் குறியீடு நிலையத்தின் பெயர்
 KC05  பத்துமலை கொமுட்டர் நிலையம்
 KC04  தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
 KC03  கம்போங் பத்து நிலையம்
 KC02  பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
 KC01  செந்தூல் கொமுட்டர் நிலையம்
 KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்
 KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
 KA02  கோலாலம்பூர் தொடருந்து நிலையம்
 KA01 
 KS01 
கோலாலம்பூர் சென்ட்ரல்
 KB01  மிட் வெளி கொமுட்டர் நிலையம்
 KB02  செபுத்தே கொமுட்டர் நிலையம்
 KB03  சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்
 KB04  பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
 KB05  செர்டாங் தொடருந்து நிலையம்
 KB06  காஜாங் தொடருந்து நிலையம்
 KB07  காஜாங் 2 தொடருந்து நிலையம்
 KB08  யூகேஎம் கொமுட்டர் நிலையம்
 KB09  பாங்கி கொமுட்டர் நிலையம்
 KB010  பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம்
 KB011  நீலாய் கொமுட்டர் நிலையம்
 KB012  லாபு கொமுட்டர் நிலையம்
 KB013  திரோய் கொமுட்டர் நிலையம்
 KB014  சிரம்பான் தொடருந்து நிலையம்
 KB015  செனவாங் கொமுட்டர் நிலையம்
 KB016  சுங்கை காடுட் கொமுட்டர் நிலையம்
 KB017  ரெம்பாவ் தொடருந்து நிலையம்
 KB018  புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "History of Railways in Selangor". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
  2. "Old Railway Station ~ Places to Visit in Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.

மேலும் காண்க

தொகு