கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு

பெரும் கோலாலம்பூர் ஒருங்கிணைந்த போக்குவரத்து வலையமைப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (ஆங்கிலம்: Klang Valley Integrated Transit System மலாய்: Sistem Transit Bersepadu Lembah Klang); சீனம்: 巴生谷综合运输系统) என்பது கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பெரும் கோலாலம்பூர் பகுதிகளுக்கு முதன்மைப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த போக்குவரத்து வலையமைப்பு ஆகும்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
Klang Valley Integrated Transit System
Sistem Transit Bersepadu Lembah Klang
Rapid KL Express Rail Link KTM Komuter
பொது தகவல்
முக்கிய இடங்கள்கிள்ளான் பள்ளத்தாக்கு
பயண வகைபயணிகள் தொடருந்து சேவை, விரைவுப் போக்குவரத்து & விரைவுப் பேருந்து போக்குவரத்து
தடங்களின் எண்ணிக்கை11
நிறுத்தங்கள்197 கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து நிலையங்கள்
தினசரி பயணிகள்822,929 (2023)[1]
(ரேபிட் கேஎல் மட்டும்)
ஆண்டு பயணிகள்248,434,575 (2023)[2]
இணையதளம்https://myrapid.com.my/
செயற்பாடு
தொடக்கம்14 ஆகத்து 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-08-14)
நடத்துநர்(கள்)
தொழிநுட்பத் தரவுகள்
திட்ட நீளம்555.7 km (345 mi)
தட அளவி
மின்வசதி
  • 25 kV 50 Hz
  • 750 V DC

இந்த அமைப்பு ஆகஸ்டு 1995-இல் கோலாலம்பூர் - ரவாங் நகரங்களுக்கு இடையே இருக்கும் பயணிகள் தொடருந்துச் சேவையை அறிமுகப்படுத்தியதன் வழியாகச் செயல்படத் தொடங்கியது.

இந்த அமைப்பு விரிவடைந்து தற்போது 11 முழுமையாக இயங்கும் தொடருந்து வழிததடங்களைக் கொண்டுள்ளது.

தொடருந்து வழிததடங்கள்

தொகு

இந்த அமைப்பு 528.4 கிலோமீட்டர்கள் (328.3 மைல்) தரம் பிரிக்கப்பட்ட 197 தொடருந்து; பேருந்து நிலையங்களை உள்ளடக்கியது.

வரலாறு

தொகு

1886-இல் கோலாலம்பூரிலிருந்து கிள்ளானுக்கு அருகில் புக்கிட் கூடா (Bukit Kuda) வரை தொடருந்து பாதை திறக்கப்பட்டது. அதில் இருந்து கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் தொடருந்துப் போக்குவரத்தும் தொடங்கியது. அந்த முதல் தொடருந்து வழித்தடம் தான் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் (Tanjung Malim-Port Klang Line) என இன்று வரை செயல்பட்டு வருகிறது.

1995-இல் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்குப் புறநகர் பகுதிகளில் உள்ளூர் தொடருந்து சேவைகளை வழங்குவதற்கான முதல் தொடருந்து போக்குவரத்து அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பெயர் கேடிஎம் கொமுட்டர்.[3]

ஓர் ஆண்டு கழித்து திசம்பர் 1996-இல், இஸ்டார் இலகு தொடருந்து சேவையில் இணைந்தது. அதைத் தொடர்ந்து புத்ரா இலகு தொடருந்து ( PUTRA LRT) செப்டம்பர் 1998-இல் தொடங்கப்பட்டது.[4]

பிரசரானா மலேசியா

தொகு

இஸ்டார் இலகு தொடருந்து (STAR LRT); புத்ரா இலகு தொடருந்து (PUTRA LRT) ஆகிய இரண்டும் சொந்தமாக இலகு தொடருந்துகளை உருவாக்குவதும், சொந்தமாக நிர்வகிப்பதுமே தொடக்கத் திட்டம் ஆகும். இருப்பினும், இரு நிறுவனங்களும் நிதிச் சிக்கல்களில் சிக்கின. 2001-ஆம் ஆண்டு வாக்கில் இரன்டு நிறுவனங்களுமே பெரிய அளவில் கடனில் சிக்கின.

அதன் பின்னர் அந்த இரண்டு இலகு தொடருந்து நிறுவனங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தற்போது பிரசரானா மலேசியா (Prasarana Malaysia) என அழைக்கப்படுகிறது.[5][6] அதன் பின்னர் முந்தைய இரண்டு இலகு தொடருந்து நிறுவனங்களின் வழித்தடங்கள் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் என மறுபெயரிடப்பட்டன.

வலையமைப்பு

தொகு
 
கிள்ளான் பள்ளத்தாக்கின் தொடருந்து வழித்தடங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid Rail Performance Update".
  2. "Rail Services Performance".
  3. An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
  4. "Klang Valley urban rail service turns 10 - Community | The Star Online". 2017-04-25. Archived from the original on 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2024-02-17.
  5. "Cover Story: Malaysian rail's chequered past". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2024-02-17.
  6. LRT to be bailed out, govt confirms

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு