மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல்
மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல் (ஆங்கிலம்: Railway Electrification in Malaysia; மலாய்: Landasan Elektrik di Malaysia) என்பது மலேசிய தொடருந்து போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அண்மைய காலத்து மின்மயமாக்க மாற்றத்தைக் குறிப்பிடுவதாகும்.
மலேசியாவின் முதல் தொடருந்து சேவை 1885-ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றாலும், 1995 ஆகத்து 3-ஆம் தேதியில்தான் கேடிஎம் இடிஎஸ் (ETS KTM Electric Train Service) மூலமாக முதல் மின்மயமாக்கப்பட்ட தொடருந்து சேவை செயல்படத் தொடங்கியது.
மலேசியத் தொடருந்து மின்மயமாக்கல் என்பது மலாயா தொடருந்து நிறுவனத்தின் மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தைக் குறிக்கின்றது.
அத்துடன் இந்தத் திட்டத்தின் வழியாக; பாடாங் பெசார் தொடங்கி ஜொகூர் பாரு வரையிலான தொடருந்து வழித்தடங்களில், பாதசாரிகள் பயன்படுத்திய சாலைக் கடவுகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக பாதசாரிகள்; மற்றும் இலகு வாகனங்களுக்கான மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன.
பொது
தொகுஅம்பாங் ஒற்றைத் தண்டூர்தி வழித்தடம்
தொகுநவம்பர் 2015-இல், பாடாங் பெசார் - கிம்மாஸ் நகரங்களுக்கு இடையிலான தொடருந்து மின்மயமாக்கல் திட்டம் நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு தொடருந்துச் சேவைகளான கேடிஎம் கொமுட்டர், கேடிஎம் இடிஎஸ் ஆகியவற்றின் சேவைகளும் தொடங்கப்பட்டன.
மலேசியாவில் விரைவுப் போக்குவரத்து (Rapid Transit) மற்றும் ஒற்றைத் தண்டூர்தி (Monorail) ஆகிய இரண்டு போக்குவரத்துச் சேவைகளும் முற்றிலும் புதியவை. அந்த வகையில் மலேசியாவில் முதல் ஒற்றைத் தண்டூர்தி சேவை அம்பாங் வழித்தடத்தில் அமலாக்கம் செய்யப்பட்டது. அந்தச் சேவை 16 டிசம்பர் 1996-இல் தொடங்கப்பட்டது. அத்துடன் அந்தச் சேவை அவை முழுமையாக மின்மயமாக்கப்பட்ட வழித்தடச் சேவையாகும்
மின் முறைமை
தொகு- 25 kV AC தொடருந்து மின்மயமாக்கம் - பயன்பாடு: கேடிஎம் கொமுட்டர்
மின்மயமாக்கம்
தொகுரவாங் - ஈப்போ
தொகுரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நீட்சியானது கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் போது, பல பிரச்சனைகள் மற்றும் பல தாமதங்கள் ஏற்பட்டன. 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[1]
டிஆர்பி ஐகோம் நிறுவனம்
தொகுஇந்தத் திட்டம் கோலாலம்பூருக்கும் ஈப்போவிற்கும் இடையிலான பயண நேரத்தை 2.5 மணிநேரமாகக் குறைத்தது. அதே வேளையில் இந்தத் திட்டத்தின் மூலமாக கேடிஎம் கொமுட்டர் சேவை தஞ்சோங் மாலிம் வரையிலும் நீட்டிக்கப் பட்டது.[2]
2000-ஆம் ஆண்டில் MYR 2,579,920,005 மதிப்புள்ள உள்கட்டமைப்பு பணிகள் டிஆர்பி ஐகோம் (DRB-Hicom Berhad) நிறுவனத்திடம் முதலில் வழங்கப்பட்டது. அடுத்து ஜப்பான் மிட்சுய் (Mitsui of Japan) நிறுவனத்திடம் MYR 1.9 பில்லியன் மதிப்புள்ள மின்மயமாக்கல் திட்டம் வழங்கப்பட்டது. டிஆர்பி ஐகோம் நிறுவனத்திற்கும் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் இடையே 2 ஏப்ரல் 2001 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
யூஇஎம் கட்டுமான நிறுவனம்
தொகுடிசம்பர் 2003-க்குள் உள்கட்டமைப்பு பணிகளை டிஆர்பி ஐகோம் நிறுவனம் செய்து முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இருப்பினும் இந்தத் திட்டம் பற்பல தாமதங்களையும் பற்பல சிக்கல்களையும் சந்தித்தது. இதன் பின்னர் மலேசிய அரசாங்கம் டிஆர்பி ஐகோம் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து 1 சூன் 2005 முதல் இந்தத் திட்டத்தை யூஇஎம் (UEM Construction Sdn Bhd) எனும் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்தது. 17 சனவரி 2008 அன்று, ரவாங் மற்றும் ஈப்போ இடையிலான இரட்டைப் பாதை திட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுற்றது.
ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதை மின்மயமாக்கல் திட்டம் நிறைவேறிய போதிலும், கேடிஎம் இடிஎஸ் தன் சேவைகளை 2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் மட்டுமே செயல்படுத்தியது.
செந்தூல் - கிள்ளான் துறைமுகம் - பத்துமலை
தொகுசெந்தூல் புறநகரில் இருந்து பத்துமலை வரையிலான 7.2 கி.மீ. மின்மயமாக்கல் திட்டம் 2006-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது. திட்டச் செலவு MYR 515 மில்லியன் ஆகும். இந்தத் திட்டம் ஆரம்பத்தில் டிஆர்பி ஐகோம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. ஒப்பந்தம் செய்து கொண்டது போல எந்த வேலையும் நிறைவாக நிறைவேறவில்லை.
அதனால் மலேசிய அரசாங்கம் அதன் ஒப்பந்தத்தை மீட்டுக் கொண்டது. பின்னர் 17 நவம்பர் 2006-இல் ஒய்டிஎல் கார்ப்பரேசன் பெர்காட் (YTL Corporation Berhad) எனும் நிறுவனத்திடம் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. செந்தூல் - பத்துமலை திட்டம் ஆகத்து 2010-இல் நிறைவடைந்தது.[3]
சிரம்பான் - கிம்மாஸ்
தொகு7 சனவரி 2008-இல், MYR 3.45 பில்லியன் மதிப்புள்ள சிரம்பான் - கிம்மாஸ் இரட்டைப் பாதை மின்மயமாக்கல் திட்டம், இந்திய நிறுவனமான இர்கான் இன்டர்நேசனல் (Ircon International) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[4] 100 கி.மீ. (62 மைல்) சிரம்பான் - சுங்கை காடுட் இரட்டைப் பாதை திட்டம் 2010-ஆம் ஆண்டிலும், கிம்மாஸ் இரட்டைப் பாதை திட்டம் 2012-ஆம் ஆண்டிலும் முடிக்க திட்டமிடப்பட்டது.[5]
இந்தத் திட்டம் 30 அக்டோபர் 2013-இல் நிறைவடைந்தது.[6] [7]
ஈப்போ - பாடாங் பெசார்
தொகுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல் திட்டம், 2002-ஆம் ஆண்டில், ரவாங் - ஈப்போ இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்டது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் இரண்டு கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.[8]
ஈப்போ மற்றும் பாடாங் பெசார் இடையிலான 329 கி.மீ. (204 மைல்) வடக்குப் பகுதி திட்டம்; இந்திய தொடருந்து கட்டுமான நிறுவனம் இர்கான் (Ircon); டிஆர்பி - ஐகோம் பெர்காட் (DRB-Hicom Berhad) நிறுவனம்; மற்றும் எம்ரைல் (Emrail Sdn Bhd) நிறுவனம்; ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பால் கையாளப்பட்டது.[9][10]
சீனா தொடருந்து பொறியியல் நிறுவனம்
தொகுசிரம்பான் மற்றும் ஜொகூர் பாரு இடையிலான தெற்குப் பகுதி; சீனா தொடருந்து பொறியியல் நிறுவனம் (China Railway Engineering Corporation); சீனா தொடருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் (China Railway Telecommunications Corporation); டிஆர்பி - ஐகோம் பெர்காட் (DRB-Hicom Berhad) நிறுவனம்; மற்றும் இக்மாட் ஆசியா (Hikmat Asia Sdn Bhd) நிறுவனம்; ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பால் கையாளப்பட்டது.[11]
அக்டோபர் 2014-இல் ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "DRB-Hicom taken to task over delay", The Star (Malaysia), p. 8, 1 July 2005
- ↑ "Electrified Double Track Project Between Rawang and Ipoh". Archived from the original on 15 September 2007. பார்க்கப்பட்ட நாள் 14 June 2007.
- ↑ "Landasan Berkembar Elektrik Sentul-Batu Caves (Sentul-Batu Caves double tracking and electrification)". Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 14 June 2007.
- ↑ "NASDAQ's Homepage for Retail Investors". NASDAQ.com.
- ↑ "Loh & Loh accepts rail project terms". Business Times. 27 May 2008. http://www.btimes.com.my/Current_News/BTIMES/Tuesday/BizBriefs/loh226.xml/Article/.
- ↑ "IRCON gets major Malaysian rail contract". The Economic Times. 14 January 2018. http://economictimes.indiatimes.com/Railways/IRCON_gets_major_Malaysian_rail_contract/articleshow/2680293.cms.
- ↑ "Seremban-Gemas Electrified Double Tracking Project To Start In October". Bernama. 31 July 2008. http://www.bernama.com/bernama/v3/news.php?id=349847.
- ↑ "Malaysia Business & Finance News, Stock Updates - The Star Online". biz.thestar.com.my.
- ↑ Yong, Teresa (22 April 2007), "Ipoh-Padang Besar work begins year-end", New Straits Times, p. 27
- ↑ Nik Anis, Mazwin (17 March 2007), "Double tracking project on again", The Star (Malaysia), p. 4
- ↑ "Group's History: History of Gamuda Berhad". Archived from the original on 16 May 2007. பார்க்கப்பட்ட நாள் 13 June 2007.