தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்


தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanjung Malim Railway Station மலாய்: Stesen Keretapi Tanjung Malim); சீனம்: 丹绒马林火车站) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம், தஞ்சோங் மாலிம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.

தஞ்சோங் மாலிம்
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்35900, தஞ்சோங் மாலிம், மலேசியா
ஆள்கூறுகள்3°41′04″N 101°31′05″E / 3.68444°N 101.518°E / 3.68444; 101.518
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
ETS கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை1 நடை மேடை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA15 
வரலாறு
திறக்கப்பட்டது1900
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்2007
சேவைகள்
முந்தைய நிலையம்   தஞ்சோங் மாலிம்   அடுத்த நிலையம்
தஞ்சோங் மாலிம் (தொடக்கம்)
 
 
கோலா குபு பாரு >>> கோலாலம்பூர்
சிலிம் ரிவர்
 

  Gold  
 
கோலா குபு பாரு >>> கோலாலம்பூர்
சிலிம் ரிவர்
 
  Silver  
 
கோலா குபு பாரு >>> கோலாலம்பூர்
கம்பார் (பாடாங் பெசார்)
 
  Platinum  
  சுங்கை பூலோ
கம்பார் (பட்டர்வொர்த்)
 
  Platinum  
  சுங்கை பூலோ
தாப்பா (பாடாங் பெசார்)
 
  Gold  
 
ரவாங்
தாப்பா (பட்டர்வொர்த்)
 
  Gold  
  பத்தாங்காலி கொமுட்டர்
அமைவிடம்
Map
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்

தஞ்சோங் மாலிம், பேராங், களும்பாங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் தஞ்சோங் மாலிம் நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.

பொது

தொகு

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தஞ்சோங் மாலிம் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

தஞ்சோங் மாலிம் நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

பேராக், முவாலிம் மாவட்டத்தில் தஞ்சோங் மாலிம் நகரின் மையப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை வழியாக அணுகலாம்.

இந்த நிலையத்திற்கு அருகில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் உள்ளது. அத்துடன் புரோட்டோன் சிட்டி எனும் புரோட்டோன் கார் தயாரிப்பு தொழிற்சாலை நகரமும் தஞ்சோங் மாலிம் நகருக்கு அருகில் தான் உள்ளது.

தொடருந்து சேவைகள்

தொகு

பேராக் இரயில்வே சேவை

தொகு

1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது.

பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிலிம் ரிவர் நகரிலும் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது.[1]

ரவாங் - ஈப்போ இரட்டை வழித்தடம்

தொகு

ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் சிலிம் ரிவர் நிலையம் உள்ளது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது.

இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[2]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை

தொகு

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது.

ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது.[3]

பழைய தஞ்சோங் மாலிம் நிலையம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "First railway station in Ipoh was constructed in 1894. It served the town for 20 years. It was a single storey building with no accommodations". 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. "DRB-Hicom taken to task over delay", The Star (Malaysia), p. 8, 1 July 2005
  3. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு