மலாயா தொடருந்து
மலாயா தொடருந்து, (மலாய்: Keretapi Tanah Melayu ஆங்கிலம்: Malayan Railways; ஜாவி: كريتاڤي تانه ملايو برحد); என்பது மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | கோலாலம்பூர் |
அறிக்கை குறி | கே.டி.எம்.பி KTMB |
வட்டாரம் | தீபகற்ப மலேசியா |
செயல்பாட்டின் தேதிகள் | 1885–நடப்பில் |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
மின்மயமாக்கல் | 25 கிலோ வாட் (50 Hz) |
நீளம் | 2,783 km (1,729 mi)] |
கிரேத்தாப்பி தானா மெலாயு (Keretapi Tanah Melayu Berhad) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, பரவலாக கே.டி.எம். (KTM) என அழைக்கப்படுகிறது.
பொது
தொகுவகை | அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்; மலேசிய நிதி அமைச்சர் |
---|---|
நிறுவுகை | 1992 |
தலைமையகம் | சுல்தான் இசாமுதீன் சாலை 50621 கோலாலம்பூர், மலேசியா Jalan Sultan Hishamuddin, 50621 Kuala Lumpur, Malaysia |
முதன்மை நபர்கள் | முகமது ராணி இசாம் சம்சுதீன், தலைமை நிர்வாக அதிகாரி |
சேவைகள் |
|
இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது.
முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (Federated Malay States Railways) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம் (Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.
வரலாறு
தொகு1962-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயரான கிரேத்தாப்பி தானா மெலாயு என்று (சுருக்கமாக கே.டி.எம்.) அழைக்கப் படுகின்றது. 1992-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசாங்கத்தின் அரசுடைமைத் தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "KTM Berhad". Transport Malaysia.