தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை

பேராக்; சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை

தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 1 (மலேசியா) 1; (ஆங்கிலம்: Tanjung Malim–Slim River Highway அல்லது Malaysia Federal Route 1; மலாய்: Lebuhraya Tanjung Malim–Slim River) என்பது மலேசியா, பேராக் - சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.

தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை
Tanjung Malim–Slim River Highway
மலேசியக் கூட்டரசு சாலை 1
(பகுதி)
Part of Federal Route 1
வழித்தட தகவல்கள்
நீளம்:20 km (12 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சிலிம் ரிவர்
 JKR(A) 121 சிலிம் சாலை
(Jalan Slim)
193 பேராங்-தஞ்சோங் மாலிம் நெடுஞ்சாலை
(Behrang–Tanjung Malim Highway)
258 புரட்டோன் நகர் நெடுஞ்சாலை
Proton City Highway
E1 AH2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடம்
North–South Expressway Northern Route
தெற்கு முடிவு:தஞ்சோங் மாலிம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
ஈப்போ
சிலிம் ரிவர்
பேராங்
சபாக் பெர்ணம்
கோலாலம்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசியாவின் முதல் சுங்கச் சாவடி நெடுஞ்சாலையான இந்த நெடுஞ்சாலை; 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் புகழ்பெற்றது. தஞ்சோங் மாலிம் - சிலிம் ரிவர் பழைய பாதை 33 கி.மீ. நீளம் கொண்டது. அத்துடன் ஒரு காட்டுப் பகுதியில் குன்று பகுதிகளில் ஊடுருவிச் சென்றது.[1]

பொது தொகு

இந்தச் சாலை 1966-ஆம் ஆண்டு சுங்கச்சாவடியாக மேம்படுத்தப்பட்டு, அதே ஆண்டில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி காலை 6 மணிக்கு கட்டண வசூல் தொடங்கியது. கார்களுக்கு 50 காசு, பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு RM1 மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 20 காசு கட்டணம் வசூலிக்கப்பட்டது.[2]

1994-ஆம் ஆண்டில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடி அகற்றப்பட்டு, கட்டணமில்லா நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, B. Nantha (5 September 2020). "The first toll plaza in Malaysia was once located on the main road between Slim River to Tanjung Malim which opened in 1964. This 20km two-way road is called the Tanjung Malim-Slim River Highway. Also, one of the oldest ...". Malaysiakini. https://www.malaysiakini.com/news/541376. பார்த்த நாள்: 13 September 2022. 
  2. 2.0 2.1 "The North-South Highway that was built in 1988 was finally completed in early 1994. With the completion of the new highway, the government finally decided to abolish toll collection on the Slim River - Tanjung Malim Highway in April 1994 and the status of this road was changed to a federal road". www.orangperak.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.

மேலும் பார்க்க தொகு

மலேசிய விரைவுச்சாலை முறைமை