மலேசிய மாநிலச் சாலைகள்

மலேசிய மாநிலச் சாலைகள் (மலாய்: Sistem Laluan Negeri Malaysia; ஆங்கிலம்: Malaysian State Roads System); என்பது மலேசியாவில் உள்ள மாநிலச் சாலைகளின் வலையமைப்பாகும். 2021 டிசம்பர் மாதம் வரையில் மலேசிய மாநிலச் சாலைகளின் மொத்த நீளம் 247,027.61 கி.மீ.[1]

மலேசிய மாநிலச் சாலைகள்
Malaysian State Roads System
Sistem Laluan Negeri Malaysia
கெடா மாநிலத்தில் ஒரு மாநிலச் சாலையின் அறிவிப்புச் சின்னம்
தகவல்
பராமரிப்புமலேசிய பொதுப்பணி துறை
(Malaysian Public Works Department)
மலேசிய பொதுப் பணி அமைச்சு (JKR)
அமைவிடம்மலேசியா
போக்குவரத்துமலேசிய மாநிலச் சாலைகள்
உருவாக்கம்1880

மாநிலச் சாலைகளின் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றை மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் மலேசிய பொதுப்பணித் துறையின் (Jabatan Kerja Raya) (JKR) மூலம் நிர்வகிக்கப் படுகின்றன; மற்றும் அவற்றுக்கான பராமரிப்புச் செலவுகளை மாநில அரசாங்கங்களே ஏற்றுக் கொள்கின்றன.[2]

பொது

தொகு

மாநிலச் சாலைகளின் அமைப்பு முறை; அவற்றின் குறியீட்டு முறையைத் தவிர மற்றபடி மலேசிய கூட்டரசு சாலைகளின் (Malaysian Federal Roads System) அமைப்பு முறையுடன் ஒத்திருக்கின்றன.

மாநிலச் சாலைகளுக்கான குறியீடுகள்; மாநிலக் குறியீடுகளைத் தொடர்ந்து சாலை எண்ணுடன் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஜொகூர் மாநிலத்தின் மூவார் - லாபிஸ் சாலை J32 என பெயரிடப்பட்டுள்ளது.

மாநிலக் குறியீடு

தொகு

இதில் J என்பது ஜொகூர் மாநிலத்தைக் குறிப்பிடுவதாகும்; 32 என்பது மூவார் - லாபிஸ் சாலையைக் குறிப்பிடுவதாகும்.

ஒரு மாநிலச் சாலை ஒரு மாநிலத்தின் எல்லையைக் கடந்ததும், அதன் மாநிலக் குறியீடு மாறும். எடுத்துக்காட்டாக, சிலாங்கூர் மாநிலத்தின் சாலாக் திங்கியில் உள்ள சாலை B20 என சிலாங்கூர் மாநிலத்திற்குள் குறிப்பிடப் படுகிறது. அதே சாலை சிலாங்கூர் மாநிலத்தைக் கடந்து நெகிரி செம்பிலான் எல்லைக்குள் சென்றதும் N20 என மாற்றம் காணும்.

மாநிலச் சாலைகளின் குறியீடுகள்

தொகு
 
மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் பெஸ்தாரி ஜெயாவில் (முன்னர் பத்தாங் பெர்சுந்தை) உள்ள ஒரு மாநிலச் சாலைப் பலகை

மேற்கோள்கள்

தொகு
  1. Malaysian Road Statistic 2021 by Public Works Department (JKR) Malaysia https://www.jkr.gov.my/sites/default/files/upload/Statistik%20Jalan%20Malaysia%20Edisi%202021.pdf பரணிடப்பட்டது 2022-07-05 at the வந்தவழி இயந்திரம்
  2. "Shah Alam Bandaraya Anggerik Part 2: Kenali sistem kod jalan perbandaran Shah Alam". Blog Jalan Raya Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மாநிலச்_சாலைகள்&oldid=4109980" இலிருந்து மீள்விக்கப்பட்டது