மலேசிய பொதுப் பணி அமைச்சு

மலேசிய பொதுப் பணி அமைச்சு (மலாய்: Kementerian Kerja Raya Malaysia; (KKR) ஆங்கிலம்: Ministry of Works Malaysia) என்பது மலேசியாவின் பொதுப் பணித் துறைகள் (Public Works); பொதுச் சாலைகள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.

மலேசிய பொதுப் பணி அமைச்சு
Ministry of Works Malaysia
Kementerian Kerja Raya Malaysia

(KKR)
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
முன்னிருந்த அமைப்பு
  • Ministry of Works and Public Amenities (Malaysia)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Kompleks Kerja Raya, Jalan Sultan Salahuddin, 50580 கோலாலம்பூர்
03°09′16″N 101°41′20″E / 3.15444°N 101.68889°E / 3.15444; 101.68889
பணியாட்கள்11,220 (2023)[1]
ஆண்டு நிதிMYR 8,439,060,200 (2022 - 2023)[1]
அமைச்சர்
  • * அலெக்சாண்டர் நந்தா லிங்கி
    (Alexander Nanta Linggi),
    துணை அமைச்சர்
துணை அமைச்சர்
  • * அப்துல் ரகுமான் முகமது
    (Abdul Rahman Mohamad)
அமைப்பு தலைமை
  • * வான் அகமது உசிர்
    (Wan Ahmad Uzir),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.kkr.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய பொதுப் பணி அமைச்சு

மலேசியாவின் பெரும்பாலான அமைச்சுகள் புத்ராஜெயாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் வேளையில், கோலாலம்பூர் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் மூன்று மலேசிய அமைச்சுகளில் மலேசிய பொதுப் பணி அமைச்சும் ஒன்றாகும்.

வரலாறு

தொகு

1954-இல், பிரித்தானிய அரசாங்கம் மலாயா தீபகற்பத்தின் (மலாயா) நிர்வாகத்தை சிங்கப்பூரில் மையப்படுத்தப்பட்ட அதன் முக்கிய நிர்வாகத்தில் இருந்து பிரிக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. அதுவே மலாயா தீபகற்பத்தில் உள்ள உள்ளூர் அரசாங்கத் துறைகள்; தங்கள் சொந்தக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

1956-ஆம் ஆண்டில், மலாய் தீபகற்பத்தின் கூட்டமைப்பை (Federation of Malay Peninsula) வழிநடத்த மந்திரி பெசார்கள் மற்றும் பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதே ஆண்டில், பணிகள் அமைச்சு உட்பட பல அமைச்சுகள் உருவாக்கப்பட்டன, பணிகள் அமைச்சு முதலில் பணிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு (Ministry of Works, Post and Telecom) என்று பெயரிடப்பட்டது. சார்டோன் அஜி சுபிர் (Sardon bin Haji Jubir) அந்த பணிகள் அமைச்சை வழிநடத்திய முதல் அமைச்சர் ஆவார்.

பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு

தொகு

பொதுப் பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தக்கவைக்கப்பட்டு, அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டன. 1957-இல், அமைச்சு மறுசீரமைக்கப்பட்டு பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு (Ministry of Works and Transportation) என மறுபெயரிடப்பட்டது.

1970-களில் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூகப் பொருளாதார நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது. 1978-இல் பணிகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சு (Ministry of Works and Public Amenities) என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், பொறுப்புகளின் நிபுணத்துவத்திற்கு ஏற்ப, 1980-களில் பணிகள் அமைச்சு (Ministry of Works Malaysia) என மறுபெயரிட்டது; 2014-ஆம் ஆண்டில் இருந்து பெயர் மாறாமல் உள்ளது.

பொறுப்பு துறைகள்

தொகு
  • பொது பணிகள் (Public Works)
  • நெடுஞ்சாலை ஆணையம் (Highway Authority)
  • கட்டுமான தொழில் (Construction Industry)
  • பொறியாளர்கள் (Engineers)
  • கட்டிடக்கலை நிபுணர்கள் (Architects)
  • அளவு ஆய்வாளர்கள் (Quantity Surveyors)

அமைப்பு

தொகு
  • பணித்துறை அமைச்சர்
    • பணிகள் துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்ட ஆலோசகர் அலுவலகம் (Legal Advisor's Office)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் மேம்பாடு)
          • நெடுஞ்சாலை திட்டமிடல் பிரிவு (Highway Planning Division)
          • பன்னாட்டு உறவுகள் பிரிவு (Policy and International Division)
          • வளர்ச்சி மற்றும் தனியார்மயமாக்கல் பிரிவு (Development and Privatization Division)
          • வசதிகள் மேலாண்மை பிரிவு (Facilities Management Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
          • நிதி பிரிவு (Finance Division)
          • நிறுமத் திட்டமிடல் பிரிவு (Corporate Planning Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)

கூட்டரசு துறைகள்

தொகு

கூட்டரசு நிறுவனங்கள்

தொகு
  • மலேசிய நெடுஞ்சாலை ஆணையம்
  • மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம்
  • மலேசிய பொறியாளர்கள் வாரியம்
  • மலேசிய கட்டிடக் கலையாளர்கள் வாரியம்
  • மலேசிய அளவாய்வாளர்கள் வாரியம்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Kementerian Kerja Raya Malaysia (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு