மலேசிய விரைவுச்சாலை முறைமை

மலேசியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு

மலேசிய விரைவுச்சாலை முறைமை (மலாய்: Sistem Lebuh Raya Ekspres Malaysia; ஆங்கிலம்: Malaysian Expressway System); (சுருக்கம்: MES) என்பது மலேசியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பாகும். இந்த அமைப்பு மலேசிய தேசிய நெடுஞ்சாலைகளின் முதன்மையான முதுகெலும்பு வலையமைப்பை உருவாக்குகிறது.

மலேசிய விரைவுச்சாலை முறைமை
Malaysian Expressway System
Sistem Lebuh Raya Ekspres Malaysia
மலேசிய விரைவுசாலைகளின் சின்னம்

மலேசிய விரைவுச்சாலைகள்
2018 வரைபடம்
தகவல்
உரிமையாளர்மலேசிய நெடுஞ்சாலை வாரியம்
(Malaysian Highway Authority) (MHA)
அமைவிடம்மலேசியா
போக்குவரத்து
வகை
நெடுஞ்சாலைகள்; விரைவுச் சாலைகள்
முதல் நெடுஞ்சாலைதஞ்சோங் மாலிம் - சிலிம் ரீவர் நெடுஞ்சாலை
Tanjung Malim–Slim River tolled road
(Federal Route 1)
உருவாக்கம்16 மார்ச் 1966
தலைமையகம்பாங்கி, சிலாங்கூர், மலேசியா
இணையத்தளம்www.llm.gov.my
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1966[1]
நுட்பத் தகவல்
விரைவுச்சாலைகள்
நீளம்
2001 கி.மீ. ((1,243 mi)

மலேசிய நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும்; மலேசிய அரசாங்கத்தின் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (Malaysian Highway Authority) எனும் வரியத்தின் மேற்பார்வையின் கீழ் தனியார் நிறுவனங்களால் கட்டப் படுகின்றன.

பொது

தொகு

இதன் முதல் நெடுஞ்சாலை உருவாக்கச் சேவை தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Tanjung Malim–Slim River Highway); எனும் (கூட்டரசு சாலை 1) (ஆங்கிலம்: Malaysia Federal Route 1) உருவாக்கத்தில் தொடங்குகிறது. இந்தச் சாலை 1966 மார்ச் 16-ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[1]

இதற்கு அடுத்து வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway (NSE); 1988-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. 1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[2]

கண்ணோட்டம்

தொகு
 
ஆசிய நெடுஞ்சாலைகள் வரைப்படம்

மலேசியாவின் விரைவுச்சாலை முறைமை, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுக்குப் பிறகு ஆசியாவிலேயே சிறந்த விரைவுச்சாலை அமைப்பாகக் கருதப்படுகிறது. மலேசிய நெடுஞ்சாலை அமைப்பு; ஜப்பானிய நெடுஞ்சாலை அமைப்பையும் (Japanese Expressway System) மற்றும் சீன நெடுஞ்சாலை அமைப்பையும் (Chinese Expressway System) போன்றது [3]

மேற்கு மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவில் பல நெடுஞ்சாலைகளும்; அதிவேக நெடுஞ்சாலைகளும் உள்ளன. இருப்பினும், மேற்கு மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலைகள் சிறப்பாக இணைக்கப்பட்டு உள்ளன.

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மேற்கு மலேசியாவின் அனைத்து முக்கிய நகரங்களான பினாங்கு, ஈப்போ, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூர் பாரு ஆகிய நகரங்களை இணைக்கிறது. அதே சமயத்தில் போர்னியோவில் உள்ள பான் போர்னியோ நெடுஞ்சாலை (Pan-Borneo Highway) சபா; சரவாக்; புரூணை ஆகிய நிலப் பிரிவுகளை இணைக்கின்றது.

ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு

தொகு

மலேசியாவில் உள்ள சில முக்கிய விரைவுச் சாலைகள் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் (Asian Highway Network) ஒரு பகுதியாகவும் செயல் படுகின்றன. ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு என்பது ஆசியாவில் உள்ள நாடுகளையும்; நகரங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூலமாக இணைக்கும் அமைப்பு முறையாகும்.[4]

இந்தத் திட்டம் ஆசியாவில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும், ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளும் கூட்டாகச் செயல் படுத்தும் ஒரு திட்டம் ஆகும்.[5]

இந்தத் திட்டம் 1959-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. ’ஆசியத் தரைவழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம்’ (Asian Land Transport Infrastructure Development (ALTID) எனும் திட்டத்தின் கீழ், சில ஆசிய நாடுகள் படிப்படியாகச் சில திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏழு ஆசிய நெடுஞ்சாலைகள் மலேசியா வழியாகச் செல்கின்றன.

மலேசியாவில் ஆசிய நெடுஞ்சாலைகள்

தொகு
 
ஆசிய நெடுஞ்சாலை தூர அடையாளம்.

ஏழு ஆசிய நெடுஞ்சாலைகள் மலேசியா வழியாக செல்கின்றன:[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 The first tolled road in Malaysia
  2. Constructed in phases over a period of seven years (from 1988 to 1995), the North-South Expressway was completed 15 months ahead of schedule and was fully operational by February 1994.
  3. Official data from Malaysian Highway Authority பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்
  4. Kamat, Rahul The Great Asian Highway பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம், Project Monitor website, 31 January 2005. Retrieved 2009-05-05
  5. "Priority Investment Needs for the Development for the Asian Highway Network" பரணிடப்பட்டது சூலை 20, 2007 at the வந்தவழி இயந்திரம், accessed July 14, 2007
  6. Malaysian Sectional Asian Highway data (XLS) பரணிடப்பட்டது 2011-01-25 at the வந்தவழி இயந்திரம் - from the official UNESCAP Asian Highway Network website.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 ERIA Study Team. "Current Status of ASEAN Transport Sector". ASEAN Strategic Transport Plan 2011–2015 (Jakarta: ASEAN Secretariat and ERIA): 3-1 - 3-95. http://www.eria.org/Chapter%203.pdf. பார்த்த நாள்: 16 November 2013. 
  8. 8.0 8.1 8.2 "Asian Highway Database: AH Network in Member Countries". United Nations Economic and Social Commission for Asia and the Pacific. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.

வெளி இணைப்புகள்

தொகு