தீபகற்ப மலேசியா
தீபகற்ப மலேசியா (ஆங்கிலம்: Peninsular Malaysia; மலாய்: Semenanjung Malaysia); என்பது மலேசியாவின் மேற்கு நிலப் பகுதியைக் குறிப்பதாகும். மலேசியாவின் இன்னொரு பகுதியான, சபா, சரவாக் பகுதிகளைக் கொண்ட கிழக்கு மலேசியா என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும்.
இது மலேசிய மூவலந் தீவில் இருந்து தென்சீனக் கடலால் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி. முன்னர் மலாயா, என்பது மலாயா தீபகற்பத்தில் (மலேசிய மூவலந்தீவில்) அமைந்திருக்கிறது.
தீபகற்ப மலேசியா மலேசியாவின் ஒரு பகுதியாகும். தீபகற்ப மலேசியா மேற்கு மலேசியா (Malaysia Barat) அல்லது மலாயா மாநிலங்கள் (Negeri-negeri Tanah Melayu) என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
இதன் பரப்பளவு 131,598 சதுர கி.மீ. (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே தாய்லாந்து நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே சிங்கப்பூர் உள்ளது. மேற்கே மலாக்கா நீரிணைக்கு மறுகரையில் சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. கிழக்கே தெற்கு சீனக் கடலுக்கு மறுகரையில் கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) உள்ளது.[3] இது ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
மாநிலங்களும் பிரதேசங்களும்
தொகுதீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும், இரண்டு நடுவண் பிரதேசங்களும் அமைந்துள்ளன:
- வடக்குப் பகுதி: பெர்லிசு, கெடா, பினாங்கு, பேராக்
- கிழக்குக்கரைப் பகுதி: கிளாந்தான், திரங்கானு, பகாங்
- மத்திய பகுதி: சிலாங்கூர், நடுவண் பிரதேசங்கள் கோலாலம்பூர், புத்ராசெயா
- தெற்குப் பகுதி: நெகிரி செம்பிலான், மலாக்கா, சொகூர்[4]
மக்கள் பரம்பல்
தொகுதீபகற்ப மலேசியாவின் பெரும்பான்மையான மக்கள் மலாய் மக்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் முசுலிம்கள் ஆவர்.[5] கணிசமான அளவில் சீனர், இந்தியர் மக்களும் வாழ்கின்றனர்.
இப்பகுதியின் மரபுவழி மகக்ள் மலேசியப் பழங்குடியினர் ஆவர். கிட்டத்தட்ட 140,000 பழங்குடியினர். பெரும்பாலும் மலாயா தீபகற்பத்தின் உட்பகுதிகளில் வாழ்கின்றனர்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Mohamed Anwar Omar Din (2012). "Legitimacy of the Malays as the Sons of the Soil". Canadian Center of Science and Education. pp. 80–81. பன்னாட்டுத் தர தொடர் எண் 1911-2025.
- ↑ Reid, Anthony (2010). Imperial alchemy : nationalism and political identity in Southeast Asia. Cambridge University Press. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-87237-9.
- ↑ Malaya. http://www.travelfish.org/region/malaysia/peninsular_malaysia.
- ↑ Reid, Anthony (2010). Imperial alchemy : nationalism and political identity in Southeast Asia. Cambridge University Press. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-87237-9.
- ↑ Some aspects of Malay-Muslim Ethnicity in Malaya. June 1981.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: தீபகற்ப மலேசியா