கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு வடக்கு விரைவுச்சாலை (ஆங்கிலம்: New Klang Valley Expressway அல்லது North Klang Valley Expressway (NKVE) மலாய்: Lebuhraya Baru Lembah Klang) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை ஆகும்.[1]
Expressway 1 | |
---|---|
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை New Klang Valley Expressway Lebuhraya Baru Lembah Klang NKVE | |
வழித்தடத் தகவல்கள் | |
AH2 புக்கிட் லாஞ்சான்-சா ஆலாம் (Bukit Lanjan–Shah Alam) AH143 புக்கிட் ராஜா-ஜாலான் டூத்தா (Bukit Raja-Jalan Duta (DUKE)- இன் பகுதி | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் PLUS Expressways Berhad | |
நீளம்: | 35 km (22 mi) |
பயன்பாட்டு காலம்: | 1988 இன்று வரையில் – |
வரலாறு: | 1993-இல் கட்டி முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
தென்மேற்கு முடிவு: |
கிள்ளான் புதிய மாற்றுவழி வடக்குச் சாலை (New North Klang Straits Bypass) புக்கிட் ராஜா, சிலாங்கூர் |
கத்ரி விரைவுச்சாலை (Guthrie Corridor Expressway) வடக்கு–தெற்கு மத்திய இணைப்பு விரைவுச்சாலை சுபாங் வானூர்தி நிலையச் சாலை இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை வடக்கு–தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடம் (North–South Expressway Northern Route) டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) | |
வட கிழக்கு முடிவு: | ஜாலான் துவாங்கு அப்துல் அலிம் (Jalan Tuanku Abdul Halim) ஜாலான் டூத்தா, கோலாலம்பூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | செத்தியா ஆலாம், சா ஆலாம், சுபாங், டாமன்சாரா, சுபாங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, புக்கிட் லாஞ்சான் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்த விரைவுச் சாலை கிள்ளான் அருகே உள்ள புக்கிட் ராஜா (Bukit Raja) பகுதியில் தொடங்கி, கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டூத்தா (Jalan Duta) பகுதியில் முடிவடைகிறது. 35-கி.மீ. (22-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை; கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் அதிவேக விரைவுச் சாலைகளில் ஒன்றாகும்.[2]
இந்த விரைவுச்சாலை; வடக்கு–தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித் தடத்துடன் (North–South Expressway Northern Route) அதன் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.
வரலாறு
தொகு1985-ஆம் ஆண்டில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை கட்டப்பட்ட பின்னர் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு புதிய விரைவுச்சாலை (NKVE) அமைப்பதற்கான திட்டங்கள் தொடக்கப்பட்டன.
அந்தக் காலக் கட்டத்தில் JKR கோலாலம்பூர் - கிள்ளான் கூட்டரசு நெடுஞ்சாலை (Federal Highway (Malaysia); Part of Federal Route 2) (FH2) நெரிசல் மிகுந்த போக்குவரத்துச் சாலையாக மாறிவிட்டது. அதைத் தவிர்ப்பதற்கு ஒரு மாற்றுவழி தேடப்பட்டது.[3]
புக்கிட் ராஜா - டூத்தா சாலை
தொகு1988-ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கியது. 1990 டிசம்பர் 7-ஆம் தேதி, புக்கிட் ராஜா மற்றும் டாமன்சாரா ஆகிய இடங்களுக்கு இடையே கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் முதல் பகுதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[4]
1993 சனவரி மாதத்தில் கிள்ளான் புக்கிட் ராஜா புறநகருக்கும்; கோலாலம்பூர் ஜாலான் டூத்தா (டூத்தா சாலை) மாநகர்ப் பகுதிக்கும் இடையே கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1993 சனவரி 11-ஆம் தேதி; அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. நான்காவது மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது திறந்து வைத்தார்.
நான்காவது பாதை
தொகுஜூலை 2010-இல், சா ஆலாம் மாநகரில் இருந்து ஜாலான் டூத்தா வரைக்கும் நான்காவது பாதையை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை அரசாங்கம் வழங்கியதாக பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் அறிவித்தது. அதன்படி 2013-ஆம் ஆண்டில் கூடுதலான 4-ஆவது பாதையும் அமைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க அம்சங்கள்
தொகுகோலாலம்பூர் - கிள்ளான் கூட்டரசு நெடுஞ்சாலை (Federal Highway (Malaysia); Part of Federal Route 2) (FH2) எனும் கூட்டரசு நெடுஞ்சாலைக்குப் பின்னர், கிள்ளான் நகரில் இருந்து கோலாலம்பூர் மாநகருக்கு, இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை என்பது இரண்டாவது இணைப்பாக உருவெடுத்தது.
இதன் வழித்தடத்தில் ஓய்வு மற்றும் சேவை பகுதிகள் இல்லை என்றாலும் விரைவுச் சாலையில் ஆங்காங்கே பல பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
இந்த விரைவுச்சாலையில் பெஞ்சாலா, புக்கிட் லாஞ்சான் மற்றும் சிகாம்புட் பகுதிகளில் பாதைப் பாலங்கள் (Viaducts) உள்ளன.
கனரக வாகனங்களுக்குத் தடை
தொகுஇந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையில் சா ஆலாம் நகரில் இருந்து ஜாலான் டூத்தா (டூத்தா சாலை) வரைக்கும்; வேலை நாட்கள் நேரங்களில்; ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர) காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை, 10,000 கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடையுள்ள கனரக வாகனங்கள் (பேருந்துகள் மற்றும் நீர்க் கலச்சுமையுந்துகள் (Tankers) தவிர); இந்த விரைவுச் சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது இல்லை. விதியை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The 35km New Klang Valley Expressway (NKVE) refers to a stretch of the North-South Expressway (PLUS) in Peninsular Malaysia which starts from Bukit Raja near Klang town, and ends at Jalan Duta in Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ "New Klang Valley Expressway: NKVE is a 35-kilometre expressway running between Kuala Lumpur (Jalan Duta) and the New Klang industrial and urban area (Bukit Raja). The NKVE is a heavily-utilised route for residents in Kuala Lumpur, Petaling Jaya, Subang, Damansara, Sungai Buloh and Klang". www.plus.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ "New Klang Valley Expressway newspaper ads (page 6 and 11)". New Straits Times. 7 December 1990. https://news.google.com/newspapers?id=wLsTAAAAIBAJ&sjid=i5ADAAAAIBAJ&pg=6826,1887659&dq=tunku+abdul+rahman+1990&hl=en.
- ↑ "Parts of the expressway is open". New Straits Times. 8 December 1990. https://news.google.com/newspapers?id=wbsTAAAAIBAJ&sjid=i5ADAAAAIBAJ&pg=6906,2245769&dq=new+klang+valley+expressway&hl=en.
- ↑ "Heavy vehicles banned from three NSE stretches during peak hours - Nation - The Star Online". www.thestar.com.my.
மேலும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு{