பிளஸ் விரைவுச்சாலைகள்
பிளஸ் விரைவுச்சாலைகள் அல்லது பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (ஆங்கிலம்: PLUS Expressways; அல்லது PLUS Expressways Berhad (PEB); மலாய்: PLUS Expressways Berhad அல்லது Projek Lebuhraya Utara Selatan Berhad (PLUS) என்பது மலேசியாவில் மிகப்பெரிய நெடுஞ்சாலைக் கட்டுமான-செயலாக்க முதலீட்டு நிறுவனமாகும்.[1]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 27 சூன் 1986 |
தலைமையகம் | பெர்சாடா பிளஸ் (Persada PLUS) சுபாங் மாற்றுச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா |
தொழில்துறை | நெடுஞ்சாலை சலுகைகள் |
பணியாளர் | + 3,500 |
தாய் நிறுவனம் | யுஇஎம் குழு UEM Group |
இணையத்தளம் | www |
பொதுவாக, இந்த நிறுவனம் பிளஸ் (ஆங்கிலம்; மலாய்: PLUS) என்றே அழைக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அதிவேக நெடுஞ்சாலை இயக்கச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் விரைவுச்சாலை சுங்கச் சாவடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. அத்துடன் உலகில் 8-ஆவது பெரிய விரைவுச்சாலை நிறுவனமாகவும் அறியப்படுகிறது.[2]
பொது
தொகுபிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் 27 சூன் 1986-இல் மலேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டது. 13 மே 1988 அன்று, அதன் பெயரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் (Projek Lebuhraya Utara Selatan Berhad) (PLUS) என மாற்றியது.[3]
29 சனவரி 2002 அன்று, பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாக மலேசிய பங்குச் சந்தையில் இணைக்கப்பட்டது.
மாநிலச் சாலைகளின் குறியீடுகள்
தொகுமலேசியாவில் உள்ள மாநிலங்களில், கீழ்க்கண்டவாறு சாலைகளின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு முறையையே பிளஸ் நிறுவனமும் பயன் படுத்தி வருகிறது.
- A: பேராக்
- B: சிலாங்கூர்
- C: பகாங்
- D: கிளாந்தான்
- J: ஜொகூர்
- K: கெடா
- M: மலாக்கா
- N: நெகிரி செம்பிலான்
- P: பினாங்கு
- R: பெர்லிஸ்
- SA: சபா
- T: திராங்கானு
- W: மலேசிய கூட்டரசு பிரதேசம் (கோலாலம்பூர்)
- Q: சரவாக்
நிறுவன உறுப்பினர்களின் பட்டியல்
தொகுஉள்நாடு
தொகுசின்னம் | பெயர் | அமைவு | செயல்பாடு |
---|---|---|---|
Projek Lebuhraya Usaha Sama Berhad |
உசகா சமா விரைவுச்சாலைத் திட்ட நிறுவனம் Projek Lebuhraya Usaha Sama Berhad (PLUS) |
2011 | மலேசியாவின் அனைத்து விரைவுச்சாலைகள்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை |
PLUS Helicopter Services Sdn. Bhd. |
பிளஸ் உலங்கூர்தி சேவைகள் நிறுவனம் PLUS Helicopter Services Sdn Bhd (PLUS Heli) |
2010 | உலங்கூர்தி சேவைகள் |
தெராஸ் தொழில்நுட்ப நிறுவனம் | 1994 | தொழில்நுட்ப சேவைகள் | |
தொட்டு செல் | 1996 | மின்னியல் கட்டண முறை (Electronic Toll Collection) Touch 'n Go Smart TAG (பங்குதாரர்) |
பன்னாடு
தொகுசின்னம் | பெயர் | அமைவு | செயல்பாடு |
---|---|---|---|
PLUS Expressways International Berhad (PEIB) |
பிளஸ் பன்னாட்டு விரைவுச்சாலை நிறுவனம் PLUS Expressways International Berhad (PEIB) |
2011 | பன்னாட்டு விரைவுச்சாலைகள்: யுனிகெஸ்ட் இன்ப்ரா வெஞ்சர்ஸ் நிறுவனம் (Uniquest Infra Ventures Private Limited) (இந்தியா) சிக்காம்பெக்-பாலிமனான் சாலை (Cikampek–Palimanan Toll Road) (இந்தோனேசியா) |
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ "Plus Berhad". Touch 'N Go Information System.
- ↑ "PLUS Expressways Berhad is a Malaysia-based investment holding company. The Company is engaged in providing expressway operation services". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Subsidiaries: Projek Lebuhraya Utara-Selatan Berhad". PLUS Malaysia Berhad. Archived from the original on 31 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.