தொட்டு செல்

மலேசியாவில் ஒரு மின்னணுக் கட்டண முறைமை

தொட்டு செல்; (தச் அண்ட் கோ) (ஆங்கிலம்: Touch 'n Go; மலாய் மொழி: Touch 'n Go; சீனம்: 一觸即通) என்பது மலேசிய விரைவு சாலை; நெடுஞ்சாலை (Malaysian Expressway System) அமைப்பின் நடத்துனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணுக் கட்டண (Electronic Payment System (EPS) முறைமையாகும்.

தொட்டு செல்
Touch 'n Go
அமைவிடம்மலேசியா
தொடங்கப்பட்டது18.03.1997
தொழினுட்பம்
  • 1. MIFARE Classic
  • 2. Contactless Smart Card
முகாமையாளர்1. தச் அண்ட் கோ நிறுவனம்
2. Touch 'n Go Sdn Bhd
நாணயம்MYR
சேமிக்கப்பட்ட மதிப்பு1. நீங்கள் செல்லும்போது பணம் செலுத்துங்கள்
2. பொதுவான அட்டை
கடன் காலாவதி12 மாதங்கள்
Auto rechargeதச் அண்ட் கோ சிங் அட்டை
(Touch 'n Go Zing Card)
வரம்பற்ற பயன்பாடுரேபிட் கே.எல்.
Rapid KL 1. ரிங்கிட் 50
2. ரிங்கிட் 100[1]
செல்லுபடி
சில்லறை விற்பனை
  • 1. Touch 'n Go மையங்கள்
  • 2. Touch 'n Go
    பகிரலை மையங்கள்
மாறுபாடுகள்
  • 1. பொதுவான அட்டை
  • 2. நிறுவன அட்டை
  • 3. தானாகப் புதுப்பித்துக் கொள்ளும் அட்டை
  • 4. டிஜிட்டல் பணப்பை eWallet
இணையதளம்Touch 'n Go இணையத்தளம்

அந்த மின்னணுக் கட்டண முறைமையில் நெகிழியால் தயாரிக்கப்பட்ட கடன் அட்டை (Credit Card) அளவிலான ஒரு நுண்ணறி அட்டையில் (Smart Card); நுண்சில்லுகள் (Microchips) பொதிக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.

அந்த நுண்ணறி அட்டையில், பிலிப்ஸ் (Philips) நிறுவனத்தினர் தயாரிக்கும் மிபாரே கிலாசிக் (MIFARE Classic) நுண்சில்லுகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த அட்டையை எண்ணிம நாணயச் சூட்டிகை அட்டை என்றும் சொல்லலாம்.[2]

பொது

தொகு

சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் வரிசை நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில், இந்தத் ’தொட்டு செல்’ (Touch 'n Go) அமைப்பு முறைமை வடிவமைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 800 வாகனங்களைக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தைக் கொண்டது.

அத்துடன், நுண்ணறி அட்டையில் திறன் ஒட்டு (SmartTAG) இணைக்கப்பட்டு இருக்குமானால், இந்தத் ’தொட்டு செல்’ அமைப்பு முறைமை, ஒரு மணி நேரத்தில் 1200 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும்.

இப்போது உள்ள இந்தப் புதிய நவீன முறைமை, 3 வினாடிக்குள் ஒரு வாகனத்தைக் கண்காணித்து, வெட்ட வேண்டிய கட்டணத்தை நுண்ணறி அட்டையில் இருந்து வெட்டிக் கொண்டு, அந்த வாகனத்தை அனுப்பி விடுகிறது. சுங்கச் சாவடியில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வாகனம் வந்த வேகத்திலேயே நிற்காமலேயே போய் விடலாம்.

வரலாறு

தொகு
 
சுனாகா தொட்டு செல் திறன் அட்டைகள்
 
தொட்டு செல் விளம்பரப் பலகை

1997-ஆம் ஆண்டில், தெராஸ் டெக்னோலஜி நிறுவனத்தால் (Teras Teknologi Sdn Bhd) தொட்டு செல் (தச் அண்ட் கோ) அமைப்பு மலேசியாவில் உருவாக்கப்பட்டது.

ஆனாலும் ரங்காயான் சேகார் (Rangkaian Segar Sdn Bhd) எனும் நிறுவனம் அதைச் சொந்தமாக்கிக் கொண்டது. அந்த ரங்காயான் சேகார் நிறுவனம் தான் இப்போது தச் அண்ட் கோ என்று அழைக்கப் படுகிறது.[3]

1997 மார்ச் 18-ஆம் தேதி, முதல் ’டச் என் கோ’ அமைப்பு, கோலாலம்பூர், ஜாலான் பகாங் சுங்கச் சாவடியில் நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோலாலம்பூர், ஜாலான் செராஸ் சுங்கச் சாவடியில் அமல்படுத்தப்பட்டது.

அடுத்து 1997 ஏப்ரல் 15-ஆம் தேதி, கிழக்கு-மேற்கு இணைப்பு விரைவுச்சாலை (East–West Link Expressway - (MES-E|37) சுங்கச் சாவடியில் அமல்படுத்தப்பட்டது.

1998 நவம்பர் 15-ஆம் தேதி வடக்கு-தெற்கு விரைவுசாலையின் (MES-E|1); (MES-E|2) 848 கி.மீ. முழுமைக்கும் ’டச் 'என் கோ’ கட்டண முறை செயல்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Locations". Archived from the original on 9 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. MIFARE (1 December 2009). "The success of MIFARE". Mifare.net.
  3. "CONCESSION CARDS". பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டு_செல்&oldid=3763930" இலிருந்து மீள்விக்கப்பட்டது