மலேசிய கூட்டரசு சாலை 2
மலேசிய கூட்டரசு சாலை 2 (ஆங்கிலம்: Malaysia Federal Route 2) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். 276.9 கி.மீ. (172 மைல்) நீளம் கொண்டது. 1887-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாலை. அந்த வகையில் இந்தக் கூட்டரசு சாலை 2, மலேசியாவில் வரலாறு படைக்கும் சாலைகளில் ஒன்றாகும்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்தையும்; பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் துறைமுகத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது.[1]
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு - மேற்கு கடற்கரைகளை இணைக்கும் சாலை அமைப்பின் முதுகெலும்பாக இருந்தது. இந்தச் சாலையின் மேம்பாட்டுச் சாலையாக இப்போது வந்து உள்ள சாலை (East Coast Expressway E8). கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை .
பின்னணி
தொகுமலேசிய கூட்டரசு சாலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) மற்றும் கோலாலம்பூர் - குவாந்தான் சாலை (Kuala Lumpur–Kuantan Road). இரண்டு பிரிவுகளும் கோலாலம்பூர் மாநகரில் இணைகின்றன. கூட்டரசு சாலை 2, கிள்ளான் துறைமுகத்தில் அதன் தொடக்கம் தொடங்குகிறது. அதாவது அதன் ’0’ கி.மீ.
இந்தக் கூட்டரசு சாலை , முதன்முதலில் 1887-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது இதன் தொடக்கம் பகாங் பெந்தா நகரில் அமைந்து இருந்தது. அங்கு இருந்து குவாந்தான் நகர் வரை நீடித்தது. 1928-ஆம் ஆண்டில் கூட்டரசு சாலை 2, பெந்தா நகரில் இருந்து கோலாலம்பூர் வரை இணைக்கப்பட்டது.
2004 ஆகஸ்டு 1-ஆம் தேதி கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை திறக்கப்பட்டது. அதுவரையில் இந்தக் கூட்டரசு சாலை 2 தான் முதன்மைச் சாலையாக விளங்கியது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Inventori Rangkaian Jalan Utama Persekutuan Semenanjung Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2009. pp. 66–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-44278-2-5.