சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 15 அல்லது சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 15; மலாய்: Laluan Persekutuan Malaysia 15 என்பது தீபகற்ப மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு சாலையாகும்.
மலேசிய கூட்டரசு சாலை 15 Malaysia Federal Route 15 Laluan Persekutuan Malaysia 15 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 21.82 km (13.56 mi) |
பயன்பாட்டு காலம்: | 1963 – |
வரலாறு: | கட்டுமானம்1965 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சுங்கை பூலோ |
சுங்கை பூலோ நெடுஞ்சாலை B9 கம்போங் மெலாயு சுபாங் சாலை B9 சுபாங்-பத்து தீகா சாலை AH2 AH141 கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை | |
தெற்கு முடிவு: | பெர்சியாரான் கெவாஜிப்பான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோத்தா டாமன்சாரா; சுபாங்; புக்கிட் ஜெலுத்தோங்; சா ஆலாம்; சுபாங் இஸ்கைபார்க் (சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்) ; கிளானா ஜெயா; சுபாங் ஜெயா; UEP சுபாங் ஜெயா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
21.82 கிமீ (13.56 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது. சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை என்பது சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலைய நெடுஞ்சாலை எனவும் அடையாளப்படுத்தப் படுகிறது.
சுபாங்கில் உள்ள கம்போங் மெலாயு சுபாங் எனும் கிராமப்பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை, சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் தொடங்கி இஸ்கைபார்க் வரை ஒரு முக்கிய இணைப்பை வழங்கி சுபாங் ஜெயாவில் முடிவடைகிறது.[1]
அமைவு
தொகுமலேசிய கூட்டரசு சாலை 15-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது சுபாங் ஜெயாவில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 15-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
சிறப்புக் கூறு
தொகுஇந்த நெடுஞ்சாலை 1999 வரை செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் மரங்களால் சூழப்பட்டு இருந்தது. தற்போது அங்கு ஆரா டாமன்சாரா போன்ற புதிய நகரப் பகுதி உருவாகியுள்ளது.
விளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.