கோத்தா டாமன்சாரா

கோத்தா டாமன்சாரா (மலாய்: Kota Damansara; ஆங்கிலம்: Kota Damansara); சீனம்: 哥打白沙罗) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 4,000 ஏக்கர் (16.2 ச.கி.மீ) பரப்பளவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும்.

கோத்தா டாமன்சாரா
Kota Damansara
தென்மேற்கு திசையில் கோத்தா டாமன்சாரா (2021)
தென்மேற்கு திசையில்
கோத்தா டாமன்சாரா (2021)
Map
கோத்தா டாமன்சாரா is located in மலேசியா
கோத்தா டாமன்சாரா
      கோத்தா டாமன்சாரா
ஆள்கூறுகள்: 3°11′45.35″N 101°34′53.93″E / 3.1959306°N 101.5816472°E / 3.1959306; 101.5816472
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • மக்களவை உறுப்பினர்ரமணன் ராமகிருஷ்ணன்
(Ramanan Ramakrishnan)
மக்கள்தொகை
 (அக்டோபர் 2022)
 • மொத்தம்5,01,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
47810
மலேசிய தொலைபேசி எண்+603-61x, +603-76x
இணையதளம்www.mbpj.gov.my

அத்துடன் சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பெருநகரங்களுக்கு இடையே உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.[1]

பொது

தொகு

சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Sultan Abdul Aziz Shah Airport) மற்றும் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (Rubber Research Institute of Malaysia) ஆகியவை இந்த நகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்.

கோத்தா டாமன்சாரா நகர்ப்பகுதி, சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் (Sungai Buloh Parliamentary Constituency) கீழ் வருகிறது. கோத்தா டாமன்சாரா; பெட்டாலிங் ஜெயா உத்தாரா 5 (Seksyen PJU 5) (Petaling Jaya Utara 5) என்றும் அறியப்படுகிறது.

மலேசியப் பொதுத் தேர்தல், 2022 தேர்தலில், சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

வரலாறு

தொகு

கோத்தா டாமன்சாரா நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த நகர்ப்புற பகுதி சுங்கை பூலோ வன காப்பகத்தின் (Sungai Buloh Forest Reserve) ஒரு பகுதியாக இருந்தது. சுங்கை பூலோ வனக் காப்பகம் 1898-இல் மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது; மற்றும் இது மலேசியாவின் மிகப் பழமையான வனக் காப்பகமாகும்.[2]

1992-ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்திற்கு (Selangor State Development Corporation) (PKNS); சுங்கை பூலோ வன காப்பகத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டு; ஒரு புதிய நகரப் பகுதியை உருவாக்க உரிமை வழங்கப்பட்டது.[3]

சுங்கை பூலோ நகர மையம்

தொகு

இந்த நகரத்தின் தொடக்கப் பெயர் சுங்கை பூலோ நகர மையம் (Sungai Buloh Town Center). கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதியின் விரைவான வளர்ச்சியின் காரணமாக 1999-இல் கோத்தா டாமன்சாரா என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kota Damansara-History" (in ஆங்கிலம்). Liquisearch. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  2. S.M. Mohamed Idris (26 November 2018). "Sahabat Alam Malaysia Persoal Komitmen dan Iltizam Selangor Pertahan Hutan Simpanan Kekal". Sahabat Alam Malaysia. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  3. Karr Wei (14 January 2021). "Panduan kawasan dan kejiranan Kota Damansara". iProperty.com. iProperty.com Malaysia Sdn Bhd. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  4. "PKNS pilih nama Kota Damansara". Berita Harian (New Straits Times Press). 29 April 1999. https://www.klik.com.my/item/story/1957732/pkns-pilih-nama-kota-damansara. 

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_டாமன்சாரா&oldid=4123689" இலிருந்து மீள்விக்கப்பட்டது