மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம்

மலேசியாவில் இரப்பர் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம்

மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (மலாய்: Institut Penyelidikan Getah Malaysia; ஆங்கிலம்: Rubber Research Institute of Malaysia) என்பது மலேசியாவில் இரப்பர் தொழில் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்யும் ஒரு மையமாகும்.

மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிலையம்
Rubber Research Institute of Malaysia
Institut Penyelidikan Getah Malaysia
துறை மேலோட்டம்
அமைப்பு29 சூன் 1925
ஆட்சி எல்லைஅம்பாங், கோலாலம்பூர்
மூல அமைப்புமலேசிய இரப்பர் வாரியம்

வரலாறு

தொகு

1925-ஆம் ஆண்டு சூன் மாதம் 29-ஆம் தேதி மலாயாவின் இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தை (Rubber Research Institute of Malaya) உருவாக்கும் மசோதா மலேசிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது.

1926-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் நாள் முனைவர் பிரைசு (Dr G. Bryce) என்பவர் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1926 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி பெட்டாலிங் தோட்டத்தில் (Petaling Estate) இருந்த இதன் ஆய்வகம் மூடப்பட்டது.

தற்காலிக ஆய்வகம்

தொகு

1926-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி, இரப்பர் விவசாயிகள் சங்கத்தின் (Rubber Growers' Association) உபகரணங்களையும் தளவாடங்களையும் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துக் கொண்டது. மேலும் இதே 1926-ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் சிலாங்கூரின் டாமன்சாரா சாலையில் தற்காலிகமாக ஓர் ஆய்வகக் கட்டிடத்தை அமைக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியது.[1]

மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோரிக்கை அரசாங்கத்தல் ஏற்கப்பட்டது. பின்னர் டாமன்சாரா சாலையில் இருந்த ஒரு பழைய கட்டடம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

புதிய கட்டிடம்

தொகு

1936-ஆம் ஆண்டில், அம்பாங் சாலையில் உள்ள ஒரு புதிய கட்டிடத்திற்கு தன் நிறுவனத்தை மாற்ற முடிவு செய்தது. இந்த கட்டிடம் சிலாங்கூர் சுல்தான் சுலைமான் அவர்களால் (Sultan Sulaiman of Selangor) 1936 ஏப்ரல் 22-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் அதன் செயல்பாட்டை 1937 மே 19-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Information - The Origin and Establishment of RRIM". lgm.gov.my. Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  2. "Test Report" (PDF). Insulflex. Rubber Research Institute of Malaysia. 27 April 1995. Archived from the original (PDF) on 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு