ரமணன் ராமகிருஷ்ணன்

மலேசிய அரசியல்வாதி

டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ([Ramanan Ramakrishnan; சீனம்: 拉马南·拉马克里希南); என்பவர் 2022 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் சிலாங்கூர் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார். பி.கே.ஆர் கட்சியின் தலைமை தகவல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.[1][2]

ரமணன் ராமகிருஷ்ணன்
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 திசம்பர் 2023
ஆட்சியாளர்கள்அப்துல்லா
(2023–2024)
இப்ராகிம் இசுகந்தர்
(2024 முதல்)
பிரதமர்அன்வர் இப்ராகீம்
அமைச்சர்எவோன் பெனடிக்
முன்னையவர்சரசுவதி கந்தசாமி
தொகுதிசுங்கை பூலோ
மலேசிய இந்திய சமூக
மாற்றப் பிரிவின் சிறப்புக் குழுவின் தலைவர்
பதவியில்
18 ஏப்ரல் 2023 – 7 பெப்ரவரி 2024
பிரதமர்அன்வர் இப்ராகிம்
பின்னவர்பிரபாகரன் பரமேசுவரன்
சுங்கை பூலோ மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 நவம்பர் 2022
முன்னையவர்சிவராசா ராசையா
(பா.அமநீக)
பெரும்பான்மை2,693 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1981 (1981-02-11) (அகவை 43)
கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிமலேசிய இந்திய காங்கிரசு (மஇகா)
(–2014)
மக்கள் நீதிக் கட்சி (மநீக)
(2020 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய முன்னணி (தேமு)
(–2014)
பாக்காத்தான் அரப்பான் (பாஅ)
(2020 முதல்)
உறவுகள்தேவகி கிருஷ்ணன் (பாட்டியார்)
முன்னாள் கல்லூரிகுயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்datoramanan.com

2023 ஏப்ரல் 18-ஆம் தேதி முதல், மலேசியப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவின் சிறப்புத் தலைவராகவும் (MITRA) டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுள்ளார்.[3]

மித்ரா

தொகு

மித்ரா செயற்குழுவுக்கான புதிய நியமனங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் 2023 ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவித்தார். மஇகாவின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன், கிள்ளான் மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதிராவ் விருமன், சிகாமட் மக்களவை தொகுதி உறுப்பினர் யுனேசுவரன் ராமராஜ் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் ரவிந்திரன் நாயர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மலேசிய இந்தியச் சமூகத்தில், குறிப்பாக B40 குழுவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு அரசாங்கப் பிரிவாக மித்ரா எனும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவு 2019-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (செடிக்) என்று அழைக்கப் பட்டது.

தேர்தல் முடிவுகள் 2022

தொகு

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ மக்களவை தொகுதியில் ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

மலேசியாவின் ஆளும் கட்சியாக விளங்கிய பாரிசான் கூட்டணியின் மூத்த அரசியல்வாதியான கைரி சமாலுடின்; 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ரமணன் ராமகிருஷ்ணனிடம் 2,693 வாக்குகளில் தோல்வி கண்டார். கைரி சமாலுடின், பாரிசான் கூட்டணியில் அம்னோ கட்சியின் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் ஆகும்.

மேலும், மலேசிய சுகாதார அமைச்சர்; மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்; மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய அமைச்சர் பதவிகளை வகித்தவர் ஆகும்.

மலேசிய நாடாளுமன்றம்
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2022 P107 சுங்கை பூலோ, சிலாங்கூர் ரமணன்
ராமகிருஷ்ணன்

(பி.கே.ஆர்)
50,943 39.30% கைரி சமாலுடின்
(அம்னோ)
48,250 37.22% 130,846 2,693 82.00%
முகமட் கசாலி அமின்
(பாஸ்)
29,060 22.42%
அக்மால் யூசோப்
(பெஜுவாங்)
829 0.64%
அகமட் சூரி பைசால்
(மக்கள் கட்சி)
279 0.22%
சையது ரசாக் அலசுகோ
(சுயேச்சை)
165 0.13%
நுர்சிலிண்டா பாசிரி
(சுயேச்சை)
113 0.09%

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramanan is an active dedicated member of Parti Keadilan Rakyat (PKR); Deputy Information Chief I (PKR)". datoramanan.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
  2. Calon PRU Ramanan Ramakrishnan
  3. "Ramanan Ramakrishnan appointed new Mitra chief". The Star. 18 April 2023. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணன்_ராமகிருஷ்ணன்&oldid=4162142" இலிருந்து மீள்விக்கப்பட்டது