உள்நாட்டு போராளிகள் கட்சி

உள்நாட்டு போராளிகள் கட்சி (பெஜுவாங்) (ஆங்கிலம்: Homeland Fighter's Party; மலாய்: Parti Pejuang Tanah Air (PEJUANG); சீனம்: 祖國鬥士黨; என்பது மலேசியாவில் மலாய்க்காரர்கள் அடிப்படையிலான ஓர் அரசியல் கட்சியாகும். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) அவர்களால் 2020 ஆகத்து மாதம் உருவாக்கப்பட்டது.

உள்நாட்டு போராளிகள் கட்சி
Homeland Fighter's Party
Parti Pejuang Tanah Air
சுருக்கக்குறிPEJUANG
தலைவர்முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
செயலாளர் நாயகம்அமிருடின் அம்சா
நிறுவனர்மகாதீர் பின் முகமது
குறிக்கோளுரைகொள்கைப் போராளி
Pejuang Berprinsip
தொடக்கம்12 ஆகத்து 2020 (2020-08-12)
சட்ட அனுமதி8 சூலை 2021 (2021-07-08)
பிரிவுபெர்சத்து
தலைமையகம்N-02-08, Blok N, Conezion Commercial Centre, Lebuhraya IRC3, IOI Resort City, 62502 புத்ரா ஜெயா, மலேசியா
கொள்கைமலாய் மேலாதிக்கம்
மலாய் தேசியவாதம்
சமூக பழமைவாதம்
இசுலாம் சனநாயகம்
ஊழல் எதிர்ப்பு
அரசியல் நிலைப்பாடுமைய-வலது அரசியல்
தேசியக் கூட்டணிகெராக்கான் தானா ஆயர்
(2022–2023)
ஒருங்கிணைந்த கூட்டணி:
பாக்காத்தான் அரப்பான்
(2020–2022)
பெரிக்காத்தான் நேசனல்
(2023)
நிறங்கள்     நீல நிறம்
பண்உங்களுக்காக போராட்டம்
Berjuang Untukmu
மேலவை
0 / 70
மக்களவை
0 / 222
சட்டமன்றங்கள்
4 / 607
மந்திரி பெசார்
0 / 13
இணையதளம்
pejuang.org.my

அப்போதைய பிரதமரும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் (Malaysian United Indigenous Party) தலைவருமான டான் ஸ்ரீ மொகிதின் யாசின் (Tan Sri Muhyiddin Yassin) தலைமையிலான ஆளும் பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) மற்றும் பாரிசான் நேசனல் (Barisan Nasional) அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டு போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது.

பெஜுவாங் (PEJUANG) கட்சியின் சின்னம், கவர்ச்சியான ڤ (P) எனும் சாவி எழுத்துமுறையை கொண்டுள்ளது. இது "பெஜுவாங்" என்ற வார்த்தையின் முதல் எழுத்தாகும்.

வரலாறு

தொகு

மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது; 24 பிப்ரவரி 2020 அன்று தம்முடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். [1] அதே நாளில் ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து விலகுவதாகவும் அறிவித்தார்.[2]

2020 மார்ச் மாதம், பெர்சத்துவின் தலைவர் மொகிதின் யாசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

திடீர் திருப்பம்

தொகு

இந்த நிலையில், மகாதீர் பின் முகமது; மற்றும் கெடா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர்; முன்னாள் கல்வி அமைச்சர் மாசிலி மாலிக் (Maszlee Malik); மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் (Syed Saddiq); உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதின் யாசினையும், அவரின் புதிய பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) அரசாங்கத்தையும் ஆதரிக்கவில்லை.[3]

அதனால் அவர்கள் ஐவரும். 2020 மே மாதம் பெர்சத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களுடன் சாருதீன் முகமட் சாலே (Shahruddin Md Salleh) என்பவரும் வெளியேற்றப் பட்டார். இதன் பின்னர் மலேசிய பொதுப் பணி அமைச்சில் துணை அமைச்சராக இருந்த சாருதீன் முகமட் சாலே, மொகிதின் யாசினுக்கான தமது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு தம் அமைச்சர் பதவியையும் துறப்பு செய்தார்.

புதிய கட்சி உருவாக்கம்

தொகு

2020 ஆகத்து மாதம், மலாய்க்காரர்கள் அடிப்படையிலான ஒரு புதிய கட்சியை உருவாக்கப் போவதாக மகாதீர் பின் முகமது அறிவித்தார்.[4] அதன் பின்னர் 2020 ஆகத்து 12-ஆம் தேதி, உள்நாட்டு போராளிகள் கட்சி (Parti Pejuang Tanah Air) எனும் பெயரைக் கொண்ட ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டது.[5]

2020 ஆகத்து 21-ஆம் தேதி, உள்நாட்டு போராளிகள் கட்சியில் பங்கேற்காத ஒரே முன்னாள் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினரான சையத் சாதிக், அதற்குப் பதிலாக மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (மூடா) (Malaysian United Democratic Alliance - MUDA) எனும் புதிய கட்சியை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.[6]

மலேசியச் சங்கங்களின் பதிவாளர் நிராகரிப்பு

தொகு

உள்நாட்டு போராளிகள் கட்சி நிறுவப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2020 நவம்பர் 2-ஆம் தேதி, உள்நாட்டு போராளிகள் கட்சியின் உறுப்பினர் பதவியைத் துறப்பு செய்வதாக மாசிலி மாலிக் அறிவித்தார். மாசிலி மாலிக் தன்னை ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறிவித்தார். அதன் பின்னர் மாசிலி மாலிக், பி.கே.ஆர். எனும் மக்கள் நீதிக் கட்சியில் (Parti Keadilan Rakyat) இணைந்தார்.

2021 சனவரி மாதம், மலேசியச் சங்கங்களின் பதிவாளர் (Registrar of Societies - RoS) உள்நாட்டு போராளிகள் கட்சியின் பதிவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்தார்.[7] மலேசியச் சங்கங்களின் பதிவு அதிகாரியின் முடிவுக்கு எதிராக உள்நாட்டு போராளிகள் கட்சியால் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும் 5 மாதங்களுக்கும் மேல் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது. 2021 சூன் 21-ஆம் தேதி, உள்நாட்டு போராளிகள் கட்சியைப் பதிவு செய்வது குறித்து 14 நாட்களுக்குள் முடிவெடுக்க உள்துறை அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[8]

2022 பொதுத் தேர்தலில் தோல்வி

தொகு

2021 சூலை 8-ஆம் தேதி, இறுதியாக உள்நாட்டு போராளிகள் கட்சி ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[9] 2022 பொதுத் தேர்தலில், உள்நாட்டு போராளிகள் கட்சி 222 நாடாளுமன்ற இடங்களில் 158 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் தோல்வி கண்டது.[10]

உள்நாட்டு போராளிகள் கட்சியின் முக்கியப் புள்ளிகளான மகாதீர் பின் முகமது; முக்ரிஸ் மகாதீர்; ஆகிய இருவரும் 2022 பொதுத் தேர்தலில் படுதோலவி அடைந்தனர். அத்துடன் தங்களின் வைப்புத் தொகையையும் இழந்தனர்.

தலைவர்கள்

தொகு

மூத்த தலைவர்

No. பெயர்
(பிறப்பு-இறப்பு)
உருவப்படம் பதவிக்காலம்
1 மகாதீர் பின் முகமது
(b. 1925)
  12 ஆகத்து 2020 17 டிசம்பர் 2022

தலைவர்

No. பெயர்
(பிறப்பு-இறப்பு)
உருவப்படம் பதவிக்காலம்
1 முக்ரிஸ் மகாதீர்
(b. 1964)
  12 ஆகத்து 2020 பதவியில்

மேற்கோள்கள்

தொகு
  1. "BREAKING: Malaysia's Mahathir sends resignation letter to king". 24 February 2020. https://www.thejakartapost.com/seasia/2020/02/24/breaking-malaysias-mahathir-sends-resignation-letter-to-king.html. 
  2. "Bersatu umum keluar Pakatan Harapan". 24 February 2020. http://www.astroawani.com/berita-politik/bersatu-umum-keluar-pakatan-harapan-231535. 
  3. "Tun M dipecat dari Bersatu". 28 May 2020. https://www.hmetro.com.my/utama/2020/05/583424/tun-m-dipecat-dari-bersatu. 
  4. "Tun Mahathir umum akan tubuh parti Melayu baharu". 7 August 2020. http://www.astroawani.com/berita-politik/tun-mahathir-umum-akan-tubuh-parti-melayu-baharu-254290. 
  5. "Tun M umum nama parti baharu, Parti Pejuang Tanah Air". 12 August 2020. http://www.astroawani.com/berita-politik/tun-m-umum-nama-parti-baharu-parti-pejuang-tanah-air-255001. 
  6. "Syed Saddiq bayangkan tak sertai PEJUANG, tubuh parti baharu". 21 August 2020. https://www.bharian.com.my/berita/nasional/2020/08/723482/syed-saddiq-bayangkan-tak-sertai-pejuang-tubuh-parti-baharu. 
  7. "RoS rejects applications from Pejuang to be registered as political party | The Star". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.
  8. "Court orders home minister to decide on Pejuang's registration appeal within 14 days". The Sun Daily. 25 June 2021. https://www.thesundaily.my/home/court-orders-home-minister-to-decide-on-pejuang-s-registration-appeal-within-14-days-updated-FC8004968. 
  9. "Amid political tumult, Pejuang says now officially registered as a party". Malay Mail. 8 July 2021. https://www.malaymail.com/news/malaysia/2021/07/08/amid-political-tumult-pejuang-says-now-officially-registered-as-a-party/1988346. 
  10. "All 158 GTA-Pejuang Candidates Collectively Lose RM1.3 Million Of Deposit Money In #GE15". 20 November 2022. https://says.com/my/news/gta-pejuang-candidates-lose-rm1-3-million-deposit-money. 

மேலும் பார்க்க

தொகு