மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள்
மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் (State Legislative Assembly, மலாய்: Dewan Undangan Negeri, DUN, சீனம்: 马来西亚州议会) என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில்; ஒவ்வொன்றிலும் உள்ள மாநில அரசாங்கங்களின் சட்டமன்றக் கிளைகள் ஆகும்.[1]
மலேசிய அரசியலமைப்பின் வழி மாநிலச் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை இந்தச் சட்டமன்றங்கள் கொண்டுள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற கட்சி மாநில அரசாங்கத்தை அமைக்கின்றது.[2]
பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் மாநில அரசாங்கத்தை அமைக்கின்றார். பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலங்களில் அந்தக் கட்சியின் தலைவர் மந்திரி பெசார் என்று அழைக்கப்படுகிறார். அதே வேளையில் பரம்பரை ஆட்சியாளர்கள் இல்லாத மாநிலங்களில் முதலமைச்சர் என்று அழைக்கப் படுகிறார்.[3]
பொது
தொகுமலேசிய நாடாளுமன்றத்தில், மக்களவை (மலேசியா); மேலவை (மலேசியா); என இரு அவைகள் உள்ளன. மலேசிய நாடாளுமன்ற அமைப்பைப் போல் அல்லாமல், மாநில சட்டமன்றங்கள் ஒரே ஒரு சபையைக் கொண்டு இயங்குகின்றன. மந்திரி பெசார் அல்லது முதலமைச்சர்; இவர்களின் ஆலோசனையின் பேரில் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்க பரம்பரை ஆட்சியாளர்களும் (சுல்தான்கள்); யாங் டி பெர்துவாக்களும் (ஆளுநர்கள்) அதிகாரம் பெற்றுள்ளனர்.
மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட அறுபது (60) நாட்களுக்குள் இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக, சரவாக், சபா மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
மாநிலங்களின் முடியாட்சிகள்
தொகு- யாங் டி பெர்துவான் நெகாரா
- யாங் டி பெர்துவா மலாக்கா
- யாங் டி பெர்துவா பினாங்கு
- யாங் டி பெர்துவா சபா
- யாங் டி பெர்துவா சரவாக்
தீபகற்ப மலேசியாவின் கெடா, கிளாந்தான், ஜொகூர், பெர்லிஸ், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானு ஆகிய ஏழு மாநிலங்களின் முடியாட்சிகள், ஆண்வழி மரபு ஆதிக்கத்தில் (agnatic primogeniture), மூத்த தலைமகனை ஆட்சியாளராகத் தேர்வு செய்கின்றன்.
பேராக்
தொகுபேராக் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அரச குடும்பத்தின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் மூத்த நிலை அடிப்படையில், ஆட்சியாளர் ஒருவர் தேர்வு செய்யப் படுகிறார். அந்த ஏழு மாநிலங்களின் ஆட்சியாளர்களும் சுல்தான் எனும் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நெகிரி செம்பிலான் முடியாட்சி
தொகுநெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அங்கே ஒரு வகையான தேர்வுநிலை முடியாட்சி நடைபெறுகிறது. அதாவது அந்த மாநிலத்தின் பரம்பரைத் தலைவர்களால், அரச குடும்பத்தின் ஆண்களில் ஒருவர் ஆட்சியாளராகத் தேர்வு செய்யப் படுகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் பெசார் என்றும் யாம் துவான் பெசார் என்றும் அழைக்கப்படுகிறார்.
பெர்லிஸ் ராஜா
தொகுதீபகற்ப மலேசியாவின் வடக்கில், தாய்லாந்து எல்லையில் அமைந்து இருக்கும் பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சியாளர் ராஜா என்று அழைக்கப் படுகிறார். சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் என்பவர் பெர்லிஸ் சுல்தானாக பதவிக்கு வந்தார்.
இவர் அரபு நாட்டைச் சேர்ந்த ஹாட்ராமி அராப் சாயுட் என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி ராஜா என்று மாற்றம் அடைந்தது. அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் ராஜா என்றே இன்றும் அழைக்கப்படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்னும் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.[4]
சட்டமன்றங்கள்
தொகுமாநிலம் | மாநில சட்டமன்றம் (தமிழ்) | மாநில சட்டமன்றம் (மலாய்) | மாநில சட்டமன்றம் (ஆங்கிலம்) |
---|---|---|---|
ஜொகூர் | ஜொகூர் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Johor | Johore State Legislative Assembly |
கெடா | கெடா மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Kedah | Kedah State Legislative Assembly |
கிளாந்தான் | கிளாந்தான் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Kelantan | Kelantan State Legislative Assembly |
மலாக்கா | மலாக்கா மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Melaka | Malacca State Legislative Assembly |
நெகிரி செம்பிலான் | நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Sembilan | Negeri Sembilan State Legislative Assembly |
பகாங் | பகாங் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Pahang | Pahang State Legislative Assembly |
பினாங்கு | பினாங்கு மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Pulau Pinang | Penang State Legislative Assembly |
பேராக் | பேராக் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Perak | Perak State Legislative Assembly |
பெர்லிஸ் | பெர்லிஸ் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Perlis | Perlis State Legislative Assembly |
சிலாங்கூர் | சிலாங்கூர் மாநில சட்டமன்றம் | Dewan Negeri Selangor | Selangor State Legislative Assembly |
திராங்கானு | திராங்கானு மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Terengganu | Terengganu State Legislative Assembly |
சபா | சபா மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Sabah | Sabah State Legislative Assembly |
சரவாக் | சரவாக் மாநில சட்டமன்றம் | Dewan Undangan Negeri Sarawak | Sarawak State Legislative Assembly |
மேற்கோள்
தொகு- ↑ These are provided for in various parts of the Constitution: For the establishment of the legislative branch see Part IV Chapter 4 – Federal Legislature, for the executive branch see Part IV Chapter 3 – The Executive and for the judicial branch see Part IX.
- ↑ See Article 4(1) of the Constitution which states that "The Constitution is the supreme law of the Federation and any law which is passed after Merdeka Day (31 August 1957) which is inconsistent with the Constitution shall to the extent of the inconsistency be void."
- ↑ State legislatures in Johor, Pahang, Perak and Selangor use the term Dewan Negeri as their official name, unlike other states that use the term Dewan Undangan Negeri.
- ↑ The Hadharem have a long sea-faring and trading tradition, which has seen them migrate in large numbers all around the Indian Ocean basin.