பேராக் மாநில சட்டமன்றம்
பேராக் மாநில சட்டமன்றம் அல்லது பேராக் சட்டப் பேரவை (மலாய்: Dewan Negeri Perak; ஆங்கிலம்: Perak State Legislative Assembly; சீனம்: 霹雳州立法议会) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[1]
பேராக் மாநில சட்டமன்றம் Perak State Legislative Assembly Dewan Negeri Perak | |
---|---|
14-ஆவது சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 21 சூலை 1959 |
தலைமை | |
சுல்தான் | சுல்தான் நசுரின் ஷா 29 மே 2014 முதல் |
பேரவைத் தலைவர் | முகமது சாகீர் அப்துல் காலித், அம்னோ 12 மே 2020 முதல் |
துணைப் பேரவைத் தலைவர் | |
சராணி முகமது 10 டிசம்பர் 2020 முதல் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
செயலாளர் | சாருல் ஆசாம் சாரி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 59 குறைவெண் வரம்பு: 20 எளிய பெரும்பான்மை: 30 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 39 |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 2022 அரசாங்கம் (33)
எதிர்க்கட்சிகள் (24) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 19 நவம்பர் 2022 |
அடுத்த தேர்தல் | 17 பிப்ரவரி 2028 |
கூடும் இடம் | |
Bangunan Perak Darul Ridzuan ஈப்போ, பேராக் | |
வலைத்தளம் | |
www |
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான பேராக் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும்.[2]
பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் அமைந்து இருக்கும் பேராக் மாநிலக் கட்டிடத்தில் (Bangunan Perak Darul Ridzuan) பேராக் மாநிலப் பேரவை கூடுகிறது. இந்தப் பேரவை மாநிலத்தின் 59 தொகுதி இடங்களைக் கொண்டது. தீபகற்ப மலேசியா மாநிலங்களின் 11 சட்டமன்றங்களில் இதுவே மிகப் பெரிய மாநிலச் சட்டமன்றமாகும்.[3]
பொது
தொகுபேராக் மாநிலச் சட்டமன்றம் பேராக் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.[4]
சபாநாயகர் தலைமை
தொகுமாநிலத்தின் சட்டசபைக் கூட்டங்களுக்கு சபாநாயகர் தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் முகமது சாகிர் அப்துல் காலித்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.
பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009
தொகு2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்று அழைக்கிறார்கள்.
2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[5] அதனால், மாநில ஆட்சி உடைந்து போனது.[6] அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார்.
முகமட் நிஜார் ஜமாலுடின்
தொகுபேராக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் மாநில முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடினின் கோரிக்கையை, பேராக் சுல்தான் நிராகரித்தார்.
அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[7]
தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
தொகுநிஜார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே ஒரு நீதிமன்ற போரே நடைபெற்றது.[8] இறுதியில், 2010 பிப்ரவரி மாதம், சாம்ரி அப்துல் காதிர்தான் சட்டப்படியான முதலமைச்சர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.[9]
மக்கள் தொகை
தொகு2018-ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி 2,500,000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 57% மலாய் மக்கள். 29% சீனர்கள், 11% இந்தியர்கள், 3% ஏனைய இனத்தவர்களும் ஆவர். ஒரு காலக்கட்டத்தில் பேராக் மாநிலம் மலேசியாவிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்கியது.
ஈய விலை அனைத்துலகச் சந்தையில் வீழ்ச்சி அடைந்ததும் பேராக் மாநிலத்தின் பொருளாதாரமும் மங்கிப் போனது. அதனால் இந்த மாநிலத்தின் பெருவாரியான மக்கள் பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர் போன்ற வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். பேராக் மாநிலத்தின் வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு வெறும் 0.4 விழுக்காடாகவே இன்னும் இருந்து வருகிறது.
புவியியல்
தொகு- பேராக் மாநிலத்தின் பரப்பளவு 21,035 சதுர கிலோ மீட்டர்கள்.
- மலேசியாவின் மொத்தப் பரப்பளவில் இது 6.4 விழுக்காடு.
- தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது பெரிய மாநிலம். வருடம் முழுமையும் மழை பெய்கிறது.
- புள்ளி விவரங்களின் படி ஓர் ஆண்டுக்கு 3,218 மில்லி மீட்டர் மழை பெய்கிறது என்று சொல்லலாம்.
- தட்ப வெப்ப நிலை 23°C - 33°C வரை.
- இது ஒரு குளிரான மாநிலம்.
பேராக் மாவட்டங்கள்
தொகுபேராக் நிர்வாகப் பிரிவுகள் | ||||||
---|---|---|---|---|---|---|
UPI குறியீடு |
மாவட்டம் | மக்கள் தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) |
பரப்பளவு (km2) |
அமைவிடம் | முக்கிம்கள் | |
0801 | பத்தாங் பாடாங் | 123,600 | 1,794.18 | தாப்பா | 4 | |
0802 | மஞ்சோங் | 227,071 | 1,113.58 | ஸ்ரீ மஞ்சோங் | 5 | |
0803 | கிந்தா | 749,474 | 1,305 | பத்து காஜா | 5 | |
0804 | கிரியான் | 176,975 | 921.47 | பாரிட் புந்தார் | 8 | |
0805 | கோலாகங்சார் | 155,592 | 2,563.61 | கோலாகங்சார் | 9 | |
0806 | லாருட், மாத்தாங், செலாமா | 326,476 | 2,112.61 | தைப்பிங் | 14 | |
0807 | ஹீலிர் பேராக் | 128,179 | 792.07 | தெலுக் இந்தான் | 5 | |
0808 | உலு பேராக் | 89,926 | 6,560.43 | கிரிக் | 10 | |
0809 | செலாமா | இல்லை | இல்லை | இல்லை | 3 | |
0810 | பேராக் தெங்ஙா | 99,854 | 1,279.46 | ஸ்ரீ இசுகந்தர் | 12 | |
0811 | கம்பார் | 96,303 | 669.8 | கம்பார் | 2 | |
0812 | முவாலிம் | 69,639 | 934.35 | தஞ்சோங் மாலிம் | 3 | |
0813 | பாகன் டத்தோ | 70,300 | 951.52 | பாகன் டத்தோ | 4 | |
குறிப்பு: ஹீலிர் பேராக், பாகன் டத்தோ, பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய இடங்களுக்கான மக்கள்தொகைத் தரவு மாவட்ட நில அலுவலகத் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலு பேராக் மாவட்டம் மற்றும் கிந்தா மாவட்டம் ஆகியவற்றைத் தவிர, மற்ற பெரும்பாலான மாவட்டங்களும்; கிரிக், லெங்கோங், பெங்காலான் உலு துணை மாவட்டங்களும்; பத்து காஜா, ஈப்போ பெரும் நகரங்களும்; உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. பாகன் டத்தோ மாவட்டம்; தெலுக் இந்தான் நகராட்சி அதிகார வரம்பில் உள்ளது.[10] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Portfolio of YAB Menteri Besar and MMK Members". www.perak.gov.my. Archived from the original on 9 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Perak legislative assembly passes state Budget 2022 | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
- ↑ "Perak Menteri Besar Datuk Seri Saarani Mohamad". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
- ↑ Sejarah Dewan Negeri dan Majlis Mseyuarat Kerajaan பரணிடப்பட்டது 2009-12-20 at the வந்தவழி இயந்திரம் (in Malay)
- ↑ Three played a vital role in destabilising the elected Pakatan state government into falling into the hands of BN.
- ↑ "Legal turmoil over Perak defections". Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
- ↑ Machiavellian and well-executed move that was the coup-de-grace that toppled Perak.
- ↑ "Pakatan reps arrested, state secretariat blocked - Malaysiakini". Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.
- ↑ the suspicious "pre-emptive move" by Judge Dato Abdul Aziz and rumours on the credibility of the presiding judges, the Court of Appeal considered the whole issue presented and decided unanimously for Zambry.
- ↑ "Laman Web Pejabat Daerah Dan Tanah - Geografi". pdtselama.perak.gov.my.