முவாலிம் மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

முவாலிம் (மலாய்: Daerah Muallim); (ஆங்கில மொழி: Muallim District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பதினொன்றாவது மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையில் பேராக் மாநிலத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்து உள்ளது. முவாலிம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் தஞ்சோங் மாலிம்; சிலிம் ரீவர்; புரோட்டோன் சிட்டி.

முவாலிம் மாவட்டம்
Daerah Muallim
பேராக்

கொடி
முவாலிம் மாவட்டம் அமைவிடம் பேராக்
முவாலிம் மாவட்டம் அமைவிடம் பேராக்
முவாலிம் மாவட்டம் is located in மலேசியா
முவாலிம் மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°50′N 101°30′E / 3.833°N 101.500°E / 3.833; 101.500
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
தொகுதிதஞ்சோங் மாலிம்
நகராட்சிதஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிநோர் ஷாம் ரகுமான் (Nor Sham Rahman)
பரப்பளவு
 • மொத்தம்934.35 km2 (360.75 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்69,639
 • மதிப்பீடு 
(2015)
1,00,200
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
35700-35900
தொலைபேசி எண்கள்+6-05
வாகனப் பதிவெண்A

பேராக் மாநிலத்தின் தற்போதைய சுல்தான் நஸ்ரின் முயிசுடீன் ஷா அவர்கள் (Sultan Nazrin Muizzuddin Shah) 2016 ஜனவரி 11-ஆம் தேதி, தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றக் கட்டிடத்தில், முவாலிம் மாவட்டம் தோற்றுவிக்கப் படுவதாக அறிவித்தார்.[1] இந்த முவாலிம் மாவட்டம் முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[2] இந்த மாவட்டம் 93,435 ஹெக்டர் நிலப்பரப்பை உள்ளடக்கியது.[3]

பொது

தொகு

முவாலிம் என்பது ஓர் அரபுச் சொல். "ஆசிரியர்" என்று பொருள். சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் இங்கு இருப்பதால் முவாலிம் எனும் பெயர் வழங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் இருந்து பல்லாயிரம் ஆசிரியர்களை உருவாக்கி உள்ளது.[4]

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
முவாலிம் மாவட்டத்தின் வரைபடம்

முவாலிம் மாவட்டம் இரு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது, அவை:[3]

உலு பெர்ணம் (கிழக்கு மற்றும் மேற்கு) சிலிம் ரீவர்

உலு பெர்ணம் துணை மாவட்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகள் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியான உலு பெர்ணம் நகரத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

முவாலிம் மாவட்டத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி. தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி முவாலிம் மாவட்டத்தை முழுமையாக உள்ளடக்கியது. அதே வேளையில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு இந்த மாவட்டம் இரண்டு மாநிலத் தொகுதிகளை வழங்குகிறது.


நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P77 தஞ்சோங் மாலிம் சாங் லீ காங் பாக்காத்தான் ஹராப்பான்


பேராக் மாநிலச் சட்டமன்றம்

தொகு

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் முவாலிம் மாவட்டத்தின் பிரதிநிதிகள்

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P77 N58 சிலிம் ரீவர் முகமட் சைடி அசீஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
P77 N59 பேராங் அமினுடின் சுல்கிப்லி பாக்காத்தான் ஹராப்பான் (அமானா)

மேற்கோள்கள்

தொகு
  1. "Muallim is now Perak's 11th district". The Star. New Straits Times Publication. 11 January 2016. http://www.nst.com.my/news/2016/01/121608/muallim-now-peraks-11th-district. 
  2. "Muallim rasmi menjadi daerah ke-11 di Perak". Berita Harian. 11 January 2016. http://www.bharian.com.my/node/113170. 
  3. 3.0 3.1 "Laman Web Pejabat Daerah Dan Tanah - Pentadbiran Mukim". pdtmuallim.perak.gov.my.
  4. "Muallim is new district in Perak". The Star. The Star Publication. 27 November 2015. http://www.thestar.com.my/metro/community/2015/11/27/new-district-in-perak-muallim-district-to-be-declared-the-11th-in-the-state-in-conjunction-with-sult/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முவாலிம்_மாவட்டம்&oldid=3995714" இலிருந்து மீள்விக்கப்பட்டது