பேராங்
பேராங் (Behrang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 87 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 118 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள நகரம்.
ஆள்கூறுகள்: 3°47′N 101°30′E / 3.783°N 101.500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.pdtmuallim.perak.gov.my. |
பேராங் நகரத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் தஞ்சோங் மாலிம் நகரம் உள்ளது. அதற்கும் அடுத்து 13 கி.மீ. தொலைவில் சிலிம் ரீவர் நகரம் உள்ளது.
பேராங் நகரத்திற்கு மிக அருகில் உள்ள இடங்கள் பேராங் உலு (Behrang Ulu); பேராங் ஸ்டேசன் (Behrang Stesen); கம்போங் கெலாவார் (Kampung Kelawar). பேராங் உலு பகுதியில் புகழ்பெற்ற நீர் அருவி உள்ளது. அதன் பெயர் சுங்கை பில் நீர் அருவி (Sungai Bil Waterfall). உள்ளூர் மக்களுக்கு மட்டும் அல்ல. நாடளவில் அனைவருக்கும் தெரிந்த இடமாகும்.[1]
பொது
தொகுசுங்கை பில் நீர் அருவி பச்சைக் காட்டுக்குள் சற்று தொலைதூரத்தில் உள்ளது. நடந்தே செல்லலாம். ஒற்றையடிப் பாதைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள். குளிர்ந்த நதி. குளிர்ந்த நீர். கண்ணுக்கு இனிய இயற்கைக் காட்சிகள். பச்சைப் பசேல் வண்ணங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே ஓய்வு எடுப்பதற்கு நல்ல இடம்.[2]
பேராங் ரீவர் தமிழ்ப்பள்ளி
தொகுபேராங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி இருந்தது. பேராங் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி. ஒரு காலக் கட்டத்தில் 12 மாணவர்களோடு அதன் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருந்தது. இப்போது பண்டார் பேராங்கிற்கு இடம் பெயர்ந்து புது உருமாற்றத்துடன் புதுப் பொலிவுடன் மிளிர்கின்றது.[3]
பேராங் ரீவர் தமிழ்ப்பள்ளி மாநில ரீதியிலும்; தேசிய நிலையிலும்; அனைத்துல நிலையிலும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியிலேயே ஒரு பாலர் பள்ளி அமைக்கும் அனுமதியைக் கல்வி அமைச்சு வழங்கியது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lata Sungai Bil merupakan tempat berkelah terkenal dengan penduduk tempatan dan pelawat dari luar daerah Muallim". Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ Beriadah Di Kawasan Perkelahan Lata Sungai Bil Di Tanjung Malim.
- ↑ Pusat sumber SJK Ladang Behrang River
- ↑ தமிழ்ப்பள்ளி நமது முதன்மை தேர்வாக இருக்க வேண்டும். மாற்றான் மொழி பள்ளிகளில் நம் மாணவர்கள் எதிர்காலத்தோடு நமது பாரம்பரியங்களையும் தொலைத்து விடுகின்றன.