மாலிம் நாவார்

மாலிம் நாவார் (Malim Nawar, சீனம்: 双溪古月, மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். ஈப்போ மாநகரம் 40 கி.மீ. வடக்கே உள்ளது. அருகாமையில் கம்பார் நகரம், தாப்பா, பத்து காஜா, கோல டிப்பாங், தஞ்சோங் துவாலாங் போன்ற சிறு நகரங்கள் உள்ளன.[1]

மாலிம் நாவார்
Malim Nawar
பேராக்
Map
மாலிம் நாவார் is located in மலேசியா
மாலிம் நாவார்
      மாலிம் நாவார்
ஆள்கூறுகள்: 4°21′N 101°07′E / 4.350°N 101.117°E / 4.350; 101.117
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்மாலிம் நாவார்: 1890
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

பொது

தொகு

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதிக்கு பவானி வீரையா என்பவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

வரலாறு

தொகு

முன்பு காலத்தில், அலிம் எனும் பெயர் கொண்ட மந்திரவாதி இந்தப் பகுதியில் வாழ்ந்து இருக்கிறார். மாலிம் நாவார் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நோய் நொடிகள் ஏற்பட்டால், அந்த மந்திரவாதியிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டனர். பில்லி, சூன்யம் பிடித்து இருந்தால் அவரிடம் சென்று மந்திர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.

அவருடைய நல்ல குணங்களுக்காகவும் சமூக சேவைகளுக்காவும் அலிம் எனும் பெயரையே அந்த இடத்திற்கு வைத்தனர். அலிம் எனும் சொல் நாளடைவில் மாலிம் என்று மாறியது. மாவார் என்பது மருந்து நீரைக் குறிப்பதாகும். ஒரு சொற்களும் சேர்ந்து இப்போது மாலிம் நாவார் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Latar Belakang". 4 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிம்_நாவார்&oldid=4038114" இலிருந்து மீள்விக்கப்பட்டது