பவானி வீரையா
பவானி வீரையா எனும் பவானி வீரையா சாசா (ஆங்கிலம்: Bavani Veraiah (Shasha); சீனம்: 布瓦尼·维拉·莎莎) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி; மனித உரிமை செயற்பாட்டாளர்; மற்றும் பேராக் மாநில சட்டமன்றத்தின் மாலிம் நாவார் தொகுதி உறுப்பினரும் ஆவார்.[1][2]
படிமம்:Bavani Veeraih.png | |
மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2022 முதல் | |
ஆட்சியாளர் | நசுரின் சா |
முன்னையவர் | லியோங் சியோக் கெங் ஜனநாயக செயல் கட்சி |
தொகுதி | மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி |
பெரும்பான்மை | 10,905 (2022) வாக்காளர்கள்: 18,618 |
பேராக் மாநில பாக்காத்தான் நிர்வாகச் செயலாளர் | |
பதவியில் 2012 – 2022 பாக்காத்தான் அரப்பான் நிர்வாகம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பவானி வீரையா (Bavani Veraiah) 1974 பத்து காஜா, பேராக், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஜசெக பாக்காத்தான் அரப்பான் (PH) (2008 முதல்) |
துணைவர் | ? |
வாழிடம்(s) | மாலிம் நாவார், பேராக் |
முன்னாள் கல்லூரி | மனிதவள நிர்வாகத் துறை இளங்கலை பட்டதாரி |
வேலை | அரசியல்வாதி |
சீனர்கள் அதிகமாக வசிக்கும் மாலிம் நாவார் தொகுதி ஜனநாயக செயல் கட்சியின் பாரம்பரியக் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. மாலிம் நாவார் தொகுதியின் வாக்காளர்களில் 66 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சீனச் சமூகத்தினர் ஆவர். அத்துடன் 90 விழுக்காட்டு சீனர், மலாய் இனத்தவர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் ஒரு தமிழ்ப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சாதனையாக அறியப்படுகிறது.
2022-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 18,618 வாக்காளர்களைக் கொண்ட மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில், 10,905 வாக்குகள் பெரும்பான்மையில் பவானி வீரையா வெற்றி பெற்றார். இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) உறுப்பினர் ஆவார்.[3]
பொது
தொகுதற்போது ஜனநாயக செயல் கட்சியின் உயர்மட்ட இந்தியப் பெண்களில் நிறைவான அரசியல் அனுபவம் கொண்டவர்களில் சாசா எனப்படும் பவானி வீரையாவும் ஒருவர் ஆவார். இவரை ஜனநாயக செயல் கட்சியின் எல்லா நிலைகளிலும் உள்ள தலைவர்களும் உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல் ஜனநாயக செயல் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள பவானி, மனிதவள நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[4]
2008-ஆம் ஆண்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு வரையில் பேராக், துரோனோ சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி. சிவகுமார் அவர்களின் அரசியல் உதவியாளராகப் பவானி வீரையா பணியாற்றி உள்ளார். அதே காலக் கட்டத்தில் பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]
சேவைகள்
தொகுபத்து காஜா மக்களவைத் தொகுதியில் பல நிலைகளில் பல்லாண்டு காலமாகச் சேவை செய்துள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளாக, பேராக் மாநில பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நிர்வாகச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.
2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; ஆகிய இரு தேர்தல்களின் போது சரவாக், தெலுக் இந்தான், கோலாகங்சார், கேமரன் மலை ஆகிய பகுதிகளில் இவர் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார். இவரின் செயல்திறனைக் கவனித்த ஜனநாயக செயல் கட்சியின் தலைமைத்துவம்; 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவரை மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் களமிறக்கியது.[5]
மாலிம் நாவார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பாக்காத்தான் அரப்பான் | பவானி வீரையா (V Bavani @ Shasha) |
10,905 | 58.57% | - 9.03 % ▼ | |
பாரிசான் நேசனல் | சின் ஊன் கியோங் (Chin Woon Kheong) |
3,646 | 19.58% | - 11.54% ▼ | |
பெரிக்காத்தான் நேசனல் | செரி சையத் (Sherry Syed) |
3,383 | 18.17% | + 18.17% | |
சபா பாரம்பரிய கட்சி | லியோங் சியோக் கெங் (Leong Cheok Keng) |
684 | 3.67% | + 3.67% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 18,618 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 208 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 59 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 18,885 | 63.58% | - 12.38% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 29,701 | ||||
பெரும்பான்மை (Majority) | 7,259 | 38.99% | + 2.51% | ||
பாக்காத்தான் அரப்பான் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Perak representatives". DAP Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
- ↑ "Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15". PRU @ Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
- ↑ "Profile Perak". mypov.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
- ↑ 4.0 4.1 "வேட்பாளர் அறிமுகம்: பவானி வீரையா". Malaysiakini. 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
- ↑ "Malim Nawar candidate Bhawani's chances of victory are bright". Thinathanthi News. 5 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Malim Nawar N41". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.