கம்பார் மக்களவைத் தொகுதி

கம்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kampar; ஆங்கிலம்: Kampar Federal Constituency; சீனம்: 金宝国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் (Kampar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P070) ஆகும்.[7]

கம்பார் (P070)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Kampar (P070)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
கம்பார் மக்களவைத் தொகுதி

(P070 Kampar)
மாவட்டம்கம்பார் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை89,894 (2022)[1]
வாக்காளர் தொகுதிகம்பார் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்கம்பார், மம்பாங் டி அவான், கோலா டிப்பாங், மாலிம் நாவார், தீமோ, கோப்பேங், கோத்தா பாரு, செண்டிரியாங், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
பரப்பளவு547 ச.கி.மீ[3]
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சோங் செமின்
(Chong Zhemin)
மக்கள் தொகை104,552 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கம்பார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (52.7%)
  மலாயர் (35.4%)
  இதர இனத்தவர் (1.6%)

கம்பார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து கம்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கம்பார்

தொகு

கம்பார் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. மலேசியாவில் மிகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும்.[8]

கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு பழைய நகரம் என்றும், இன்னொரு பிரிவு புதிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பண்டார் பாரு கம்பார்

தொகு

கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் பழைய பெயர் மம்பாங் டி அவான்.

பண்டார் பாரு கம்பார் எனும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு கல்விக் கழகங்கள் உள்ளன. 2009-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கம்பார் நகராண்மைக் கழகம், பேராக் மாநிலத்தின் 10-ஆவது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.[9] 1894 மார்ச் 13-இல் மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது.

கம்பார் மக்களவைத் தொகுதி

தொகு
கம்பார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் கிந்தா செலாத்தான் தொகுதியில் இருந்து
கம்பார் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P053 1959–1960 லியோங் கீ நியான்
(Leong Kee Nyean)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1960–1963 சான் யூன் ஒன்
(Chan Yoon Onn)
மக்கள் முற்போக்கு கட்சி
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P053 1963–1964 சான் யூன் ஒன்
(Chan Yoon Onn)
மக்கள் முற்போக்கு கட்சி
2-ஆவது மக்களவை 1964–1969 தோ தீம் ஆக்
(Toh Theam Hock)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[10]
3-ஆவது மக்களவை P053 1971–1974 பான் இயூ தெங்
(Fan Yew Teng)
ஜனநாயக செயல் கட்சி
பத்து காஜா மக்களவைத் தொகுதியுடன் இணைப்பு
பத்து காஜா மக்களவைத் தொகுதியில் இருந்து புதிய தொகுதி
7-ஆவது மக்களவை P065 1986–1990 நிகோய் தியாம் வோ
(Ngoi Thiam Woh)
ஜனநாயக செயல் கட்சி
8-ஆவது மக்களவை 1990–1995 ஜேம்ஸ் வோங் விங்
(James Wong Wing)
காகாசான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
9-ஆவது மக்களவை P068 1995–1999 எவ் சீ தோங்
(Hew See Tong)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P070 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 லீ சீ லியோங்
(Lee Chee Leong)
13-ஆவது மக்களவை 2013–2018 கோ சுங் சென்
(Ko Chung Sen)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2022 சூ கியோங் சியோங்
(Su Keong Siong)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சோங் செமின்
(Chong Zhemin)

கம்பார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
89,894
வாக்களித்தவர்கள்
(Turnout)
60,399 67.19%   - 9.96%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
59,386 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
161
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
852
பெரும்பான்மை
(Majority)
14,330 1.65%   + 16.08
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[11]

கம்பார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சோங் செமின்
(Chong Zhemin)
பாக்காத்தான் 59,386 30,467 51.30% - 6.26%  
லீ சீ லியோங்
(Lee Chee Leong)
பாரிசான் - 16,137 27.17% - 7.91 %  
ஜெனிஸ் வோங் ஓய் பூன்
(Janice Wong Oi Foon)
பெரிக்காத்தான் - 12,127 20.42% + 20.42%  
லியோங் சியோக் லுங்
(Leong Cheok Lung)
வாரிசான் - 655 1.10% + 1.10%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "Kampar has turn into a bustling town again when Universiti Tunku Abdul Rahman (UTAR) set up its campus here in 2007". study.utar.edu.my. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  9. "Administration Office District and Land of Kampar, Perak". ptg.perak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு