கோத்தா பாரு (பேராக்)

கோப்பேங் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஓர் ஒதுக்குப்புறமான கிராமப் பகுதியில் இந்தச் சிறு நகர

(கோத்தா பாரு எனும் பெயரில் மற்றொரு நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமாகவும், தலைநகரமாகவும் உள்ளது)

கோத்தா பாரு
Kota Bharu'
பேராக் கோத்தா பாரு பகுதியின் ஈயச் சுரங்கத்தில் சீனப் பெண் தொழிலாளர்கள். 19-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
பேராக் கோத்தா பாரு பகுதியின் ஈயச் சுரங்கத்தில் சீனப் பெண் தொழிலாளர்கள்.
19-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில்
எடுக்கப்பட்ட படம்.
கோத்தா பாரு is located in மலேசியா மேற்கு
கோத்தா பாரு
கோத்தா பாரு
ஆள்கூறுகள்: 4°24′N 101°4′E / 4.400°N 101.067°E / 4.400; 101.067
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1840
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdkampar.gov.my/

கோத்தா பாரு என்பது (மலாய்:Kota Bharu; ஆங்கிலம்:Kota Bharu; சீனம்:哥打巴鲁) மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இந்த நகரத்தைப் பேராக் கோத்தா பாரு என்று அழைக்கிறார்கள். இது ஒரு கிராமப்புற நகரம். [1]

கோப்பேங் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஓர் ஒதுக்குப்புறமான கிராமப் பகுதியில் இந்தச் சிறு நகரம் அமைந்து உள்ளது. முன்பு கோத்தா பாரோ (Kota Bahroe) என்று அழைக்கப்பட்டது. இப்போது கோத்தா பாரு என்று அழைக்கப் படுகிறது.

வரலாறு தொகு

கோத்தா பாருவை கோப்பேங் நகருடன் இணைப்பதற்கு ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது. இங்கு ஒரு சிறிய இரயில் நிலையம் உள்ளது. ஈயச் சுரங்கத் தொழில் சிறப்பாக இருந்த காலத்தில் இந்த நகரம் பிரகாசமாக இருந்தது.

ஈயச் சுரங்கத் தொழில் முடிவுற்றதும் இந்த நகரம் வெறிச்சோடிப் போய் விட்டது. கைவிடப்பட்ட நிலையில் பல கடைவீடுகளும் கட்டடங்களும் உள்ளன.

பேராக் மெட்ரிகுலேஷன் கல்லூரி (Perak Matriculation College)[2] மற்றும் ஒருங்கிணைந்த கோப்பெங் உண்டுறைப் பள்ளி (Gopeng Fully Integrated Boarding School) ஆகிய இரண்டு உயர்க் கல்விக்கூடங்கள் இங்கு உள்ளன.[3]

ரப்பர்த் தோட்டங்கள் தொகு

1890-ஆம் ஆண்டுகளில் இங்கு நிறைய ரப்பர்த் தோட்டங்கள் இருந்தன. கோத்தா பாருவிற்கு அருகாமையில் இருந்த சில ரப்பர்த் தோட்டங்கள்:

  • சாங்லோப் தோட்டம் (Ladang Sanglop)
  • கோப்பேங் தோட்டம் (Ladang Gopeng)
  • சிப்போக் தோட்டம் (Ladang Chipok)
  • மோய்னாலோய் தோட்டம் (Ladang Moynaloy)
  • சுங்கை பத்து தோட்டம் (Sungai Batu Estate)
  • கிந்தா கிளாஸ் தோட்டம் (Ladang Kinta Kellas)
  • கோத்தா பாரு தோட்டம் (Ladang Kota Bahroe)

இவற்றுள் கோத்தா பாரு தோட்டம் இன்றும் உள்ளது. அங்கே ஒரு தமிழ்ப்பள்ளியும் உள்ளது. [4]

இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அங்கு இருந்த சில தோட்டங்கள் விற்கப்பட்டன. அங்கு தொழில் புரிந்த தமிழர்களில் பெரும்பாலோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.

கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி தொகு

கோத்தா பாரு தோட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி (SJK (T) Ladang Kota Bahroe). இந்தப் பள்ளியில் 35 மாணவர்கள் பயில்கிறார்கள். 6 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.[5]

1912-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பள்ளி. அப்போது 20 மாணவர்களுடன் தொடக்கப் பட்டது. ஒரு காலக் கட்டட்த்தில் 60 மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயின்றார்கள். ரப்பர் தோட்டமாக இருந்த இந்தத் தோட்டம் எண்ணெய்ப் பனைத் தோட்டமாக மாற்றப் பட்டது.

அதனால் தமிழர்கள பலர் வேலை இழந்தனர். தமிழர்களுக்குப் பதிலாக வங்காள தேசிகளும் இந்தோனேசியர்களும் கோத்தா பாரு தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.

பேராக் கோத்தா பாரு தமிழ்ப்பள்ளியின் படங்கள்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_பாரு_(பேராக்)&oldid=3595194" இலிருந்து மீள்விக்கப்பட்டது