சபா பாரம்பரிய கட்சி

(பாரம்பரிய கட்சி (மலேசியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரம்பரிய கட்சி அல்லது சபா பாரம்பரிய கட்சி (வாரிசான்) (ஆங்கிலம்: Heritage Party (Warisan Malaysia); மலாய்: Parti Warisan (Warisan); சீனம்: 人民復興黨; சாவி: ڤرتي واريثن ) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.[1]

சபா பாரம்பரிய கட்சி
Heritage Party
Parti Warisan
சுருக்கக்குறிவாரிசான் Warisan
தலைவர்சாபி அப்டால் (Shafie Apdal)
துணைத் தலைவர்இக்னேசியசு டாரெல் லெயிகிங்
(Ignatius Darell Leiking)
பொதுச் செயலாளர்லோரேத்தா டாமியன்
(Loretto Damien S. Padua, Jr.)
குறிக்கோளுரைநம் நாடு, நம் பாரம்பரியம், நம் எதிர்காலம்
(Our Nation, Our Heritage, Our Future)
தொடக்கம்17 அக்டோபர் 2016
பிரிவுபாரிசான் நேசனல் (BN)
அம்னோ (அம்னோ சபா)
மக்கள் நீதிக் கட்சி (PKR) சபா
ஜனநாயக செயல் கட்சி (DAP) சபா
முன்னர்சபா பாரம்பரிய மேம்பாட்டுக் கட்சி
(Sabah Heritage Development Party
(Parti Pembangunan Warisan Sabah)
தலைமையகம்Ibu Pejabat Parti Warisan, No 8, Aras 1, Lorong Kompleks BSA, Kolombong, கோத்தா கினபாலு, சபா
உறுப்பினர்  (2022)250,000
கொள்கைமுற்போக்குவாதம்; பல்லினம்; தேசியவாதம்
அரசியல் நிலைப்பாடுநடுநிலைமை
தேசியக் கூட்டணிகூட்டணி:
பாக்காத்தான் அரப்பான்
(2016–ஆகத்து 2021)
(நவம்பர் 2022)
பாரிசான் நேசனல்
(சனவரி 2023)
நிறங்கள்     வெளிர் நீலம், அடர் நீலம் மற்றும் சிவப்பு
மேலவை (மலேசியா)
0 / 70
மக்களவை (மலேசியா)
3 / 222
மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள்
15 / 607
இணையதளம்
partiwarisan.my

-

முன்பு இந்தக் கட்சி, சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) என்று அழைக்கப்பட்டது. சபா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சாபி அப்டால் (Shafie Apdal) தலைமையில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், இந்தக் கட்சியின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடைந்தன. இதன் விளைவாக இந்தக் கட்சியின் பெயர் பாரம்பரிய கட்சி (Heritage Party) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][3]

வரலாறு

தொகு

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியுடன் இந்தக் கட்சி ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. பாக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மலேசியக் கூட்டரசு அமைச்சரவைக்குள் பாரம்பரிய கட்சி பிரதிநிதித்துவப் படுத்தப்படும் என்று அதன் தலைவர் சாபி அப்டால் உறுதி அளித்தார்.[4]

சாபி அப்டால்

தொகு

தீபகற்ப மலேசியாவில் வாரிசான் போட்டியிட விரும்பவில்லை என்றும் சாபி அப்டால் கூறியுள்ளார். ஆனாலும், தேசிய அளவில் உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளாமல் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற தம்முடைய பாரம்பரிய கட்சி தயாராக உள்ளது என்றும் சாபி அப்டால் கருத்து தெரிவித்தார்.

பாரம்பரிய கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலத்தில், தம்முடைய கட்சி பல இனங்களைக் கொண்ட கட்சி என்றும்; தீபகற்ப மலேசியாவில் பாக்காத்தான் கூட்டணியின் அரசியல் பாணியை தம்முடைய பாரம்பரிய கட்சி பின்பற்றப் போவது இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார்.[5]

மலேசிய அரசியல் நெருக்கடி 2020

தொகு

இருப்பினும் புத்ராஜெயாவில் பாக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், மத்திய அமைச்சரவையில் பாரம்பரிய கட்சிக்கும் அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கலாம் என்றும்; அதே வேளையில் சபா மாநில அரசாங்கத்தில் பாக்காத்தான் அமைச்சர்களும் மாநிலச் சேவையில் அமர்த்தப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[6]

2018 பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்ற போது, இந்தப் பாரம்பரிய கட்சி மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆனாலும் பாக்காத்தான் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததும் ஏப்ரல் 2021-இல் பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[7]

சபா மாநிலத் தேர்தல் 2020

தொகு

2020-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலின் போது, மத்திய அரசாங்கத்தை ஆட்சி செய்த பெரிக்காத்தான் நேசனல், பாரிசான் நேசனல் மற்றும் ஐக்கிய சபா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்த சபா மக்கள் கூட்டணியால் பாரம்பரிய கட்சி தோற்கடிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் பாரம்பரிய கட்சி, சபா மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியாக இருந்தது. 2020 சபா மாநிலத் தேர்தலில், சபா மாநில அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாரம்பரிய கட்சி ஒரு தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.[8]

இருப்பினும் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. பாரிசான் நேசனல் கூட்டணியுடன் நடுவண் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக இந்தப் பாரம்பரியக் கட்சிக்கும் நடுவண் அரசாங்கப் பதவிகள் வழங்கப் பட்டன.[9][10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Shafie's Party Name, Logo Approved, To Be Called 'Parti Warisan Sabah'". New Straits Times. Malaysian Digest. 17 October 2016. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Parti Warisan Sabah is new name of Shafie-led party". Bernama. The Sun. 17 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  3. "Warisan to spread wings in peninsula on Dec 17" (in en). 2021-11-29. https://www.thevibes.com/articles/news/48403/warisan-to-spread-wings-in-peninsula-on-dec-17. 
  4. "Warisan and Pakatan Harapan team up in Sabah for Malaysia elections". The Straits Times. 2 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  5. Suzianah Jiffar (2 April 2018). "Warisan will work only with Pakatan Harapan for GE14". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2018/04/352101/warisan-will-work-only-pakatan-harapan-ge14. 
  6. "Warisan seals electoral pact with DAP and PKR". Malaysiakini. 2 April 2018. https://www.malaysiakini.com/news/418074. 
  7. "Warisan 'unhooks' from Pakatan, keeps options open on political alignment for GE15". The Star (Malaysia). 5 April 2021. https://www.thestar.com.my/news/nation/2021/04/05/warisan-unhooks-from-pakatan-keeps-options-open-on-political-alignment-for-ge15. 
  8. Yusof, Amir (27 September 2020). "Muhyiddin-led Gabungan Rakyat Sabah clinches simple majority in state polls". Channel News Asia இம் மூலத்தில் இருந்து 1 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201101012126/https://www.channelnewsasia.com/news/asia/malaysia-sabah-state-election-muhyiddin-gabungan-rakyat-majority-13152014. 
  9. "Warisan spreads its wings to Peninsular Malaysia". The Star (Malaysia). 13 December 2020 இம் மூலத்தில் இருந்து 2 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210102134946/https://www.thestar.com.my/news/nation/2020/12/13/warisan-spreads-its-wings-to-peninsular-malaysia. 
  10. Geraldine, Avila (14 December 2020). "Warisan should remain as Sabah based party". New Straits Times இம் மூலத்தில் இருந்து 14 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201214081158/https://www.nst.com.my/news/politics/2020/12/649343/warisan-should-remain-sabah-based-party. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_பாரம்பரிய_கட்சி&oldid=3978882" இலிருந்து மீள்விக்கப்பட்டது