சபா மக்கள் கூட்டணி

சபா மாநிலத்தில் ஓர் அரசியல் கூட்டணி

சபா மக்கள் கூட்டணி அல்லது ஜிஆர்எஸ் (ஆங்கிலம்: Sabah People's Coalition அல்லது (GRS Party); மலாய்: Gabungan Rakyat Sabah (GRS); சீனம்: 沙巴人民聯盟; ஜாவி: ݢابوڠن رعيت سابه) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணியாகும். இந்த அரசியல் கூட்டணியின் முதல் தலைவர் அஜி நூர் (Hajiji Noor) ஆவார்.[7][8]

சபா மக்கள் கூட்டணி
Sabah People's Coalition
Gabungan Rakyat Sabah
சுருக்கக்குறிGRS
தலைவர்அஜி நூர்
செயலாளர் நாயகம்மசிடி மஞ்சுன்
நிறுவனர்அஜி நூர்[1]
துணைத் தலைவர்மாக்சிமஸ் ஓங்கிலி
ஜெப்ரி கித்திங்கான்
யோங் டெக் லீ
பண்டிகர் அமின் முலியா
குறிக்கோளுரைசபாவை நேசிப்போம்
"Sayangi Sabah"
தொடக்கம்12 செப்டம்பர் 2020 (2020-09-12)[2]
சட்ட அனுமதி11 மார்ச் 2022[1]
பிரிவுபெரிக்காத்தான் நேசனல் (PN)
பாரிசான் நேசனல் (BN)
பெர்சத்து (BERSATU)
முன்னர்சபா ஐக்கிய கூட்டணி (GBS)[3]
தலைமையகம்Lot 57 G7
Plaza Permai 2 Alamesra
88400 Kota Kinabalu
Sabah
கொள்கை
 • சபா பிராந்தியவாதம்
 • 20-புள்ளி ஒப்பந்தம்
 • பூமிபுத்ரா நலன்கள்
அரசியல் நிலைப்பாடுவலது சாரி
தேசியக் கூட்டணிகூட்டணிகள்:
நிறங்கள்     நீலம்[4]
மேலவை
2 / 70
மக்களவை
6 / 26
சபா சட்டமன்றம்
29 / 79
மலேசியாவின் முதலமைச்சர்கள்
1 / 13
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி

சபா மக்கள் கூட்டணி (GRS), 2022-இல் சங்கங்கள் சட்டம் 1966-இன் கீழ், சபா உள்ளூர் அரசியல் கூட்டணியில் இரண்டாவது கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது. (பசோக்-பிபிஎஸ் கூட்டணிக்குப் பிறகு, சபாவில் பதிவு செய்யப்பட்ட முதல் கூட்டணி; 1985-இல் நிறுவப்பட்டது; 1994-இல் கலைக்கப்பட்டது.)[1][5]

தேசிய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல்; சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி (Social Democratic Harmony Party); மற்றும் மாநில சட்டமன்றத்தில் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன்; 2020 மாநிலத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், தற்போது சபா மக்கள் கூட்டணி (GRS), சபாவின் ஆளும் கட்சியாக உள்ளது.[9]

பொது

தொகு

இந்தக் கூட்டணி தற்போது நான்கு சபா கட்சிகளையும்; ஒரு தேசியக் கட்சியையும் கொண்டுள்ளது. கட்சியின் விவரங்கள்:[10][11]

சபா 2020 தேர்தல்

தொகு

2020-ஆம் ஆண்டு சபா மாநில தேர்தலில், சபா மக்கள் கூட்டணியில் முகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி; பாரிசான் நேசனல் கூட்டணி மற்றும் ஐக்கிய சபா கட்சி (பிபிஎஸ்) (Parti Bersatu Sabah) (PBS) ஆகியவை இருந்தன.

2020 செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலின் போது, சபா மக்கள் கூட்டணி, 38 இடங்களை வென்று, சபா மாநில சட்ட மன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்றது.

மீண்டும் புதிய திட்டங்கள்

தொகு

சபா மாநிலத்தின் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் அஜி நூர் (Hajiji Noor) 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி, சபாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பின்னர் சபா மாநிலத்தில் சபா மக்கள் கூட்டணி, மிகப் பெரிய அரசியல் கூட்டணியாக விளங்கி வருகிறது.[12]

சபா மக்கள் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முந்தைய சபா அரசால் நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் சபா மக்கள் கூட்டணி அரசால் மீண்டும் தொடங்கப்பட்டன. மீண்டும் தொடங்கப்பட்ட திட்டங்களில் சபா பான்-போர்னியோ நெடுஞ்சாலையும் (Sabah Pan-Borneo Highway) அடங்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 Bernama (11 March 2022). "RoS approves registration of Gabungan Rakyat Sabah, says Hajiji". malaymail. https://www.malaymail.com/news/malaysia/2022/03/13/ros-approves-registration-of-gabungan-rakyat-sabah-says-hajiji/2047212. 
 2. Izwan Abdullah (12 September 2020). "Penubuhan Gabungan Rakyat Sabah: Tan Sri Muhyiddin". BHarian. https://www.bharian.com.my/berita/nasional/2020/09/730480/pm-umum-gabungan-baharu-gabungan-rakyat-sabah. 
 3. BERNAMA (February 27, 2020). "Permohonan pendaftaran Gabungan Bersatu Sabah masih dalam pertimbangan ROS". BHarian. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
 4. Izwan Abdullah (12 September 2020). "Penubuhan Gabungan Rakyat Sabah". BHarian. https://www.bharian.com.my/berita/nasional/2020/09/730480/pm-umum-gabungan-baharu-gabungan-rakyat-sabah. 
 5. MalaysiaKini, Darshini Kandasami (31 July 2020). "Imbasan sejarah lompat parti di Sabah (1985-1994 era Gabungan Pasok-PBS)". malaysiakini. https://m.malaysiakini.com/news/536847. 
 6. BERNAMA (26 February 2022). "GRS akan didaftarkan dalam tempoh terdekat - Hajiji". Bernama News. https://www.bernama.com/bm/politik/news.php?id=2056033. 
 7. Bernama (11 March 2022). "RoS approves registration of Gabungan Rakyat Sabah as political party and known in general as Gabungan Rakyat Sabah Party, says Hajiji". malaymail. https://www.malaymail.com/news/malaysia/2022/03/13/ros-approves-registration-of-gabungan-rakyat-sabah-says-hajiji/2047212. 
 8. Bernama (11 March 2022). "this coalition now officially named as Gabungan Rakyat Sabah Party or GRS PARTY in general". malaymail. https://www.malaymail.com/news/malaysia/2022/03/13/ros-approves-registration-of-gabungan-rakyat-sabah-says-hajiji/2047212. 
 9. "Gabungan Rakyat Sabah Parti Lokal Sabah". Sinar Harian. 12 September 2020 30 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.sinarharian.com.my/article/192617/BERITA/Politik/GRS-sah-jadi-entiti-politik-Sabah-Hajiji. 
 10. "Hajiji says BN not part of newly-registered Gabungan Rakyat Sabah". Malay Mail. 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.
 11. Yusof, Amir (27 September 2020). "Muhyiddin-led Gabungan Rakyat Sabah clinches simple majority in state polls". Channel News Asia இம் மூலத்தில் இருந்து 1 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201101012126/https://www.channelnewsasia.com/news/asia/malaysia-sabah-state-election-muhyiddin-gabungan-rakyat-majority-13152014. 
 12. Anand, Ram (29 September 2020). "Malaysian PM Muhyiddin's pick Hajiji Mohd Noor sworn in as new Sabah Chief Minister". The Straits Times இம் மூலத்தில் இருந்து 18 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201118161456/https://www.straitstimes.com/asia/se-asia/malaysian-pm-muhyiddins-pick-sworn-in-as-new-sabah-chief-minister. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_மக்கள்_கூட்டணி&oldid=3931207" இலிருந்து மீள்விக்கப்பட்டது